Jio Happy New Year Offer: எல்லா வாய்ஸ் அழைப்புகளும் இலவசம்..!

Jio Happy New Year Offer: எல்லா வாய்ஸ் அழைப்புகளும் இலவசம்..!

ஜனவரி 1, 2021 முதல் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவச வாய்ஸ் அழைப்புகளை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

Jio Happy New Year Offer

Jio Happy New Year Offer:

ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு நிறுவனமானது இறுதியாக இன்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணங்களை (ஐ.யூ.சி) நீக்கியுள்ளது.

அதாவது, ஜியோ பயனர்கள் இப்போது ஐ.யூ.சி நிமிடங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

2019-ம் ஆண்டின் இறுதியில் ஐ.யூ.சி நிமிடங்களுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியது.

Adjusted Gross Revenue (AGR) வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிய பின்னர் ஐ.யூ.சி நிமிடங்கள் என்ற கருத்து சேர்க்கப்பட்டது.

இப்போது ட்ராய் 2021 ஜனவரி 1 முதல், நாட்டில் ‘பில் அண்ட் கீப்’ ஆட்சியை அமல்படுத்தவுள்ளது.

இது அனைத்து உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகளுக்கு ஐ.யூ.சியை தடை செய்யும்.

ஐ.யூ.சி கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு ஆஃப்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்பு கட்டணங்களைப் பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான உறுதி நிறைவேற்றியவுடன், ஜியோ மீண்டும் அனைத்து ஆஃப்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகளையும் 2021 ஜனவரி 1 முதல் இலவசமாக்கும்.

ஆன்-நெட் உள்நாட்டு வாய்ஸ் அழைப்புகள் எப்போதும் ஜியோ நெட்வொர்க்கில் இலவசமாக இருக்கும் என நிறுவனம் கூறியது.

மேலும் இந்த புத்தாண்டில் IUC கட்டணத்தை அகற்றுவதோடு Jio தனது நான்கு சிறந்த ப்ரீபெய்ட் (Prepaid) திட்டங்களையும் அறிவித்துள்ளது.

இதில் ரூ. 129, ரூ .149, ரூ 199 மற்றும் ரூ 555, ஆகிய தொகைக்கான திட்டங்கள் உள்ளன.

இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் கால அவகாசம் முறையே 28 நாட்கள், 24 நாட்கள், 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் ஆகும்.

இந்த திட்டங்களின் நன்மைகள் பற்றி பேசும்போது, ​​ரூ .129 க்கான திட்டத்தில் வரம்பற்ற அழைப்போடு 2GB தரவு கிடைக்கும்.

ரூ.149 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1GB டேட்டாவுடன் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.

ரூ.199 திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பை வசதி கிடைக்கிறது.

Also Read: What is Crude Oil: உங்களுக்கு தெரியுமா? கச்சா எண்ணெய் இப்படி தான் உருவாகிறது..!

ரூ.555 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *