Tamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Jamun Seed Powder Benefits: இந்த பழத்தின் விதைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தா! இதனை தவறவிடாதீர்கள்.

Jamun Seed Powder Benefits: இந்த பழத்தின் விதைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தா! இதனை தவறவிடாதீர்கள்.

நீரிழிவு நோயினை பொருத்தவரை நாம் நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

Jamun Seed Powder Benefits

Jamun Seed Powder Benefits:

பழங்கள் என்றாலே சுவை நிறைந்தவை தான், இதில் பல பழங்கள் சுவையாக மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் அருமருந்தாக கூட இருக்கின்றன. அத்தகைய பழங்களில் ஒன்று தான் நாவல் பழம்.

மேலும் இதற்கு Java plum அல்லது Black Plum அல்லது Indian blackberry போன்ற பெயர்களும் உண்டு.

இதனை ஏன் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக இருக்கும் என்று கூறுகின்றனர்? தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்!

நீரிழிவுக்கு சத்தான உணவு அவசியம்:

நம் உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் அது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

நல்ல ஆரோக்கியமான உணவை மேற்கொண்டாலே நம் உடலில் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கலாம்.

நாவல் பழ விதைகளை  தூக்கி எறிய வேண்டாம்:

பொதுவாக நாம் நாவல் பழங்களை சாப்பிட்டு விட்டு அதன் விதைகளை தூக்கி எறிகிறோம், ஆனால் இதனால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதை நம்ப முடியாது. ஆனால் அது தான் உண்மை.

நாவல் பழத்தில்ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், துத்தநாகம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை  நிறைந்துள்ளன.

ஆனால் இந்த பழத்தின் விதைகளில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பது பலருக்கு அறிய வாய்ப்பு இல்லை.

நாவல் பழத்தின் விதையில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் திறன் உள்ளது.

நாவல் பழ விதைகளில் ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் (zamboline and zambocin)என்ற இரு கலவைகள் உள்ளன.

அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன, எனவே இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.

நாவல் பழ விதைகளை எப்படி சாப்பிடுவது?

நாவல் பழ  விதைகளை பிரித்து, அதை கழுவி, வெயிலில் நன்கு காய வைக்கவும்.

அடுத்து விதையின் மேல் பகுதியை வெளியே எடுத்து உள்ளே இருக்கும்  பச்சையான பகுதியை பிரித்து எடுக்கவும்.

உலர்ந்த விதைகளை மிக்சியில் பொடி செய்து காற்று புகாத பாத்திரத்தில் சேமித்துவைத்து தினமும் காலையில் இதனை சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், சில நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

கவனத்தில் கொள்ளுங்கள்:

இந்த நாவல் விதை எடுத்து கொள்ளும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்.

பொதுவாக எந்த ஒரு உணவையும் புதிதாக நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

மரபணு மாற்றம் பெற்ற நாவல் பழத்தை கட்டாயம் தவிர்த்தல் நல்லது.

Also read: How to Remember Things: மறதியை குறைக்க உதவும் வழிகள்..! இதை ஃபாலோ பண்ணுங்க..!

அத்துடன் கர்ப்பிணிகள் இந்த நாவலை சாப்பிடுதல் உகந்தது அல்ல.

எனவே, ஆலோசனையுடன் மருந்தை எடுத்துக்கொண்டு நோயிலிருந்து விடைபெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *