Italian Island Caretaker: 32 ஆண்டுகளாக தீவில் தனியாக வாழ்ந்த மனிதர்! திடீரென வெளியேறுகிறார் ஏன்?

Italian Island Caretaker: 32 ஆண்டுகளாக தீவில் தனியாக வாழ்ந்த மனிதர்! திடீரென வெளியேறுகிறார் ஏன்?

இத்தாலியில் உள்ள தனித்தீவு ஒன்றில், கடந்த 32 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த வயதான ஒருவர், அதிகாரிகள் கொடுத்த தொந்தரவு காரணமாக தற்போது தீவை விட்டு வெளியேறி உள்ளார்.

Italian Island Caretaker - newstamilonline

Italian Island Caretaker:

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ராபின்சன் குரூசோ. இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு இத்தாலி கடற்பகுதியில், தனது நண்பர்களுடன் இணைந்து கடற்பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு-மணல் கொண்ட கடற்கரைக்கு பெயர் பெற்ற புடெல்லி என்ற தீவில் தஞ்சமடைந்தனர்.

அவருடன் வந்த மற்ற நண்பர்கள் தொடர்ந்து பயணம் செய்ய பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, மவுரோ மொராண்டியின் மனமோ வேறு மாதிரி யோசித்தது.

அந்த தீவின் பாதுகாவலர் ஓய்வு பெறுவதாக அறிந்த அவர் தான் வைத்திருந்த படகை விற்று தீவினை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

அன்றிலிருந்து இன்று வரை புடெல்லி தீவை கண் இமை போல் பாதுகாத்து வந்தார் ராபின்சன்.

அதற்கு பின் ராபின்சன், மவுரோ மொராண்டி என அழைக்கப்பட்டார்.

இவ்வாறு கடந்த 32 ஆண்டுகளாக பாதுகாத்த வந்த அவர், கடற்கரைகளை அழகாக வைத்து கொள்வது, தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம், தீவின் அருமை, பெறுமைகளை கூறுவது என மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

இவர் பல ஆண்டுகளாக தீவை எந்தவித பிரச்சனையும் இன்றி பாதுகாத்து, கடற்கரைகளை அழகாக வைத்திருந்தார்.

தீவின் சுற்றுச்சூழல் குறித்து சுற்றுலா பயணிகளிடம் விளக்கினார்.

அதாவது அங்குள்ள கடற்பாறைகள், செடிகள், கொடிகள், விலங்குகள் ஆகியவற்றை மவுரோ மொராண்டிவை விட அறிந்தவர்கள் வேறு யாருமில்லை.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புடெல்லியை நிர்வகித்து வரும் லா மடாலேனா தேசிய பூங்கா அதிகாரிகள் மவுரோ மொராண்டியை, தீவில் இருந்து வெளியேறும்படி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

அவரை புடெல்லி தீவிலேய தங்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசிடம் கேட்டு 70,000 க்கும் மேற்பட்ட வர்கள் கையெழுத்திட்ட மனுக்கள் அனுப்பட்டன.

Also Read: Ancient Discovery: பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட ராட்சத எலிகளின் எச்சங்கள்..!

ஒருகட்டத்தில் அவரும் வேதனையுடன் வெளியேற சம்மதம் தெரிவித்து விட்டார். 32 ஆண்டுகளுக்கு பின், அவர் தீவை விட்டு வெளியேறி உள்ளார்.

இதுகுறித்து மவுரோ கூறுகையில், ‘‘புடெல்லியை கடந்த 32 ஆண்டுகளாக பாதுகாத்து விட்டேன். எதிர்காலத்திலும் அது சிறப்பாக பாதுகாக்கப்படும் என நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் இவரை போல் இந்த தீவை இனிமேல் யாரும் பாதுகாக்க முடியாது என்று இத்தாலி மக்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *