Latest News Tech: வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்..!
Latest News Tech: வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்..!
வாட்ஸ்அப்பின் நெருங்கிய போட்டியாளரான ரஷிய நாட்டில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலி தனது அனைத்து டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பயன்பாடுகளிலும் வீடியோ அழைப்பு செயல்பாட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

Latest News Tech:
வாட்ஸ்அப்பின் நெருங்கிய போட்டியாளரான ரஷிய நாட்டில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலி தனது அனைத்து டெஸ்க்டாப் மற்றும் மொபைல் பயன்பாடுகளிலும் வீடியோ அழைப்பு செயல்பாட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப்பிற்கு மாற்று செயலியாக உள்ள டெலிகிராம் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
டெலிகிராமை விட வாட்ஸ் ஆப்பைதான் உலகில் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், டெலிகிராமில் வாட்ஸ் ஆப்பைக் காட்டிலும் பல புதிய சேவைகள் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 2 ஜிபி வரையிலான பைல்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பகிரும் வகையில் டெலிகிராம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வாட்ஸ்ஆப்பில் 16 எம்பி வரையிலான வீடியோக்களும், 100 எம்பி வரையிலான பைல்கள் மட்டுமே பகிர முடியும்.
இந்நிலையில், Telegram app-ல் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்சமயம் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு update செய்யப்பட்டுவந்துள்ளது.
புதுப்பித்தலின் மூலம் டெலிகிராம் கொண்டு வரும் மிக முக்கியமான மாற்றம், பயனர்கள் தங்கள் குழு ஆடியோ உரையாடல்களை வீடியோ அழைப்புகளாக மாற்ற அனுமதிக்கும் திறன் ஆகும்.
பயனர்கள் தங்கள் வீடியோவை இயக்க, குழு ஆடியோ அழைப்பில் கேமரா ஐகானைத் தட்டினால் போதும். இயக்கப்பட்டதும், உங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவரின் வீடியோவை முன்பக்கத்தில் பார்க்க நீங்கள் பின் செய்யலாம்.
டெலிகிராம் உங்கள் திரை மற்றும் உங்கள் கேமரா ஃபீட் மற்றும் திரை இரண்டையும் ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தையும் வழங்கியுள்ளது.
முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வீடியோ கால் அம்சம் டெலிகிராம் 7.0.0 வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் புதியதாக வீடியோ கால் மட்டுமின்றி அனிமேட்டெட் எமோஜியினையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
டெலிகிராம் வீடியோ அழைப்பில் கேமராக்களை பின்புறம் மற்றும் முன்புறம் மாற்றி அமைக்க on screen பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீடியோ இணைப்பில், mute மற்றும் close பட்டன்களும் ஸ்கிரீனில் அமைக்கப்ட்டுள்ளது.
இந்த அம்சத்தில் Picture in, Picture mode option வழங்கப்பட்டுள்ளது.
இதை கொண்டு பயனர்கள் டெலிகிராம் சாட்களில் scroll செய்வதுடன், வீடியோவை multi-tasking செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
திரை பகிர்வு:
திரையினை பகிருவதற்கு மூன்று-புள்ளி மெனு பொத்தானைத் தட்டி, மெனுவிலிருந்து புதிய திரைப் பகிர்வு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து புதிய அம்சங்களுடன், Telegram v7.8 ஆனது புதிய செய்தி அனுப்பும் அனிமேஷன்கள், புதிய ஆப்ஸ் ஐகான்கள், உள்நுழைவு தகவல் நினைவூட்டல்கள், ஒரு புதிய போட் மெனு, மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர் பேக்குகள் மற்றும் புதிய அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிகளை update செய்துள்ளது.
அதற்கு மேல், சமீபத்திய வெளியீட்டில் குரல் அரட்டைகளுக்கான புதிய சத்தம் அடக்கும் விருப்பங்களும் கொண்டுவந்துள்ளது.
Also read: COVID-19 தடுப்பூசி சான்றிதழை Download செய்வது எப்படி..?
டெலிகிராம் வலைப்பதிவுக்கான இந்த இணைப்பைப் பின்தொடர்வதன் மூலம் இந்த அம்சங்களைப் பற்றி மேலும் நாம் அறிந்துகொள்ளலாம்.
Android app களில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், Microsoft App சென்டர் மூலம் புதிய APK version டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.