இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Intermittent Fasting: உண்ணாவிரதம் இருந்தா உடம்பில் என்னவெல்லாம் நடக்கும்..?

Intermittent Fasting: உண்ணாவிரதம் இருந்தா உடம்பில் என்னவெல்லாம் நடக்கும்..?

பல நூற்றாண்டுகளாக பல கலாச்சாரங்களில் முக்கிய அம்சமாக உண்ணாவிரதம் உள்ளது.

Intermittent Fasting

Intermittent Fasting:

உண்ணாவிரதம் என்பது அனைத்து வகையான உணவுகள் மற்றும் பானங்களை உண்ணாமல் தவிர்ப்பது ஆகும். பல வகையான உண்ணாவிரதங்கள் உண்டு.

அதில் ஒரு வகை தான் 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் முழுக்க உண்ணாமல் இருப்பது.

அப்படி ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

விரதங்களின் போது உடல் எடை குறையும் என பலர் நம்புகின்றனர். ஆனால் அதை நிரூபிக்க எந்த வித ஆதாரங்களும் இல்லை என்பதே உண்மை.

விரதங்களை மேற்கொள்ளும் போது சிறிது உடல் எடை குறைவது உண்மைதான் என்றாலும் அது தற்காலிகமாகவே இருக்கும்.

விரதத்திற்கு பிறகு சகஜ நிலைக்கு மாறிய பிறகு நீங்கள் அதே எடையை மீண்டும் பெறுவீர்கள்.

எனவே எடை இழப்பை பெற உண்ணாவிரதம் இருப்பது சரியான யோசனை கிடையாது. உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சி செய்வதே சரியான தீர்வாகும்.

மேலும் தினமும் சீரான உணவை உண்ண வேண்டும்.

அதிக நேரம் உண்ணாவிரதம் இருப்பது தலைவலியை ஏற்படுத்தும். உண்ணாவிரதம் இருக்கும்போது அந்த நாளின் முடிவில் நீங்கள் மயக்கத்தை உணர வாய்ப்புள்ளது. அல்லது மறு நாள் காலையில் கடுமையான தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உடலில் எந்த சக்தியும் இல்லாதது அல்லது சத்துக்கள் குறைப்பாடு காரணமாக இது நிகழ்கிறது.

நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் கார்போஹைட்ரேட்களே உள்ளன. இதிலிருந்து உருவாகும் ஆற்றலே உடல் உறுப்புகள் மற்றும் மூளைக்கு சக்தியளிக்கின்றன. மேலும் அவை சீராக செயல்பட உதவுகிறது.

உண்ணாவிரதம் காரணமாக உடலில் கார்போஹைட்ரேட்கள் குறைப்பாடு ஏற்படுகிறது.

இதனால் உடலுக்கும் மூளைக்கும் சரியான சக்தி கிடைப்பதில்லை. இதனால் தான் உண்ணாவிரதத்தின் போது தலைவலி ஏற்படுகிறது.

சோடியம் குறைப்பாடு:

ஒரு குறிப்பிட்ட அளவில் உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. ஆனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் விரதம் காரணமாக தடைப்படுகிறது என்றால் அது உங்களுக்கு தீங்கை தான் வரவழைக்கும்.

இது உங்கள் உடலில் எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுக்கு வழி வகுக்கும்.

சோடியம் ஒரு அத்தியாவசியமான எலக்ட்ரோலைட் ஆகும். இது உயிரணுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள திரவத்தின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

உடலில் சோடியம் குறைபாடானது உடலில் சுகாதார சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

குறிப்பாக வயதானவர்களுக்கு உடலில் பலவீனம், சோர்வு, தலைவலி, எரிச்சல், குழப்பம், தசைப்பிடிப்பு, வாந்தி, மற்றும் குமட்டல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

​நீரிழப்பு

நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் போது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

எனவே ஊட்டச்சத்துக்காக கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் அல்லது க்ளைகோஜன் அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் உண்ணா விரதத்தின் போது தண்ணீர் குடிக்காதது காரணமாக உடலில் நீரின் அளவு குறைகிறது.

இது உடலின் இயல்பு செயல்ப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இவை உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

​உண்ணாவிரதத்திற்காக சில குறிப்புகள்

உண்ணாவிரதத்தின் போது உடல் சமநிலையை பாதுக்காக்க மருத்துவர்கள் சில அறிவுரைகளை கூறுகிறார்கள்.

உண்ணாவிரதத்தின் போது உடல் நீரேற்றமாக இருப்பதற்காக ஏராளமாக தண்ணீர், மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகள் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

இது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இது தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, தசை வலி, மூட்டு வலி மற்றும் பிற உடல் ரீதியான சிக்கல்களை தவிர்க்க உதவும்.

Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!

குமட்டல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு அடுத்த நாள் காலை உணவை குறைவாக எடுத்துக் கொள்ளலாம்.