அறிவியல்செய்திகள்

Interesting Facts About Animals: கல் கருவிகளை சுத்தியல் மற்றும் கத்திகளாக உருவாக்க முயலும் ஒராங்குட்டான்..!

Interesting Facts About Animals: கல் கருவிகளை சுத்தியல் மற்றும் கத்திகளாக உருவாக்க முயலும் ஒராங்குட்டான்..!

பொதுவாக ஒராங்குட்டான்கள் மிருகக்காட்சிசாலையில்(zoo) அடைக்கப்பட்டிருக்கும்.

Interesting Facts About Animals

Interesting Facts About Animals:

இத்தகைய நிலையில் அவை கல் கருவிகளைப் பார்த்திருக்கக்கூட வாய்ப்பில்லை.

இருப்பினும், ஒராங்குட்டான்களால் பொருட்களை அடிப்பதற்கு அல்லது வெட்டுவதற்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி கற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் அவற்றால் அக்கருவிகளை உருவாக்க முடியாது.

சிம்பன்சிகளுக்குப் பிறகு அறியப்பட்ட கருவிகள் பயன்பாட்டில் இரண்டாவது பெரிய திறனாய்வைக் கொண்ட பெரிய குரங்குகள் ஒராங்குட்டான்கள் என்று கூறுகின்றனர்.

ஒராங்குட்டான்கள் தன்னிச்சையாக பாறைகளை எடுத்து அவற்றை சுத்தியலாகப் பயன்படுத்துகின்றன.

பெரும்பாலும் மரங்களில் வாழும் ஒராங்குட்டான்களால் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விலங்குகளுக்கு தேவைப்படும் சொந்தக் கருவிகளை உருவாக்க முறையாக மூலகல்(raw stone) வைத்து பயிற்சியாளர்களால் கற்றுக்கொடுத்தப் பிறகும் அவை கற்கவில்லை.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய ஆல்பா மோட்ஸ் ரோட்ரிகோ தன் ஆய்வைப் பற்றி கூறுகையில்,

மோட்ஸ் ரோட்ரிகோவும்(Mots Rodrigo) அவருடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் நார்வேயில் உள்ள கிறிஸ்டியன்சாண்ட்(Christiansand) மிருகக்காட்சிச்சாலை மற்றும் பொழுதுபோக்கு பூங்காவில் வசிக்கும் இரண்டு ஆண் ஒராங்குட்டான்களை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ஒராங்குட்டான்களுக்கு கயிற்றால் கட்டப்பட்ட பழம் கொண்ட பெட்டி ஓன்று கொடுக்கப்பட்டது.

மேலும் அவைகளுக்கு ஒரு கான்கிரீட் சுத்தியல் மற்றும் ஒரு பாறை கட்டியும் கொடுக்கப்பட்டது.

ஆய்வின் படி, ஒராங்குட்டான்கள் பாறையிலிருந்து கூர்மையான செதில்களைத் தட்டுவதற்கு சுத்தியலைப் பயன்படுத்தியிருக்கலாம்.

பின்னர் பழங்களை அடைய பாறைகட்டியால் கயிற்றை அறுத்து பயன்படுத்தியிருக்கலாம்.

ஆனால், அதற்கு மாறாக ஓரங்குட்டான்கள் சுத்தியலால் பொருட்களை அடித்தன.

எனவே ஆய்வின் மூலம், காடுகளில் வசிக்கும் ஒராங்குட்டான்கள் கற்களுடன் மிகவும் அரிதாகவே தொடர்பு கொள்கின்றன என்று மோட்ஸ் ரோட்ரிகோ கூறுகிறார்.

அதற்கு இணங்க, மற்றொரு பரிசோதனையில் மோட்ஸ் ரோட்ரிகோ ஒராங்குட்டான்களுக்கு கூர்மையான கற்களைக் கொடுத்தார்.

பின்னர் அவற்றை திரும்ப ஒப்படைத்ததால் அவைகளுக்கு திராட்சைகளை பரிசாக வழங்கினார்.

பின்னர் கயிற்றை அறுத்த ஒராங்குட்டான் ஒரு பாறைக் கட்டியை எடுத்து அதைச் சுற்றி அடிக்கத் தொடங்கியது.

இச் செயலினால் சில கூர்மையான செதில்களை உருவாக்கியது, இதன் மூலம் ஒரு வகையில் ஒராங்குட்டான் கூர்மையான கருவிகளை உருவாக்கியது எனக் கூறலாம்.

கூரிய கற்களை ஒராங்குட்டான்கள் பயன்படுத்துவதற்கு ஓர் ஊக்குவிக்கும் விதமாக இந்த செயல்முறை இருந்தது.

எனவே, ஒராங்குட்டான்களால் கருவி வடிவமைப்பினைப் பற்றி புரிந்துகொள்ளவோ, சிந்திக்கவோ முடியாது.

Also Read: How Virus Attack: தீவிரவாதிகளின் புதிய வைரஸ் தாக்குதல் முறை: எச்சரிக்கை அளிக்கும் விஞ்ஞானிகள்..!

ஆனால் ஒராங்குட்டான்கள் உள்ளுணர்வாக தாக்குவதற்கு சுத்தியல்களையும், வெட்டுவதற்கு கூர்மையான கற்களையும் பயன்படுத்துகின்றன என்று அவர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *