India endemic stage of COVID: இந்தியாவில் 3வது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு..!

India endemic stage of COVID: இந்தியாவில் 3வது நாளாக குறைந்த கொரோனா பாதிப்பு..!

கடந்த 24 மணி நேரத்தில், நேற்றைய நிலையை விட இன்று இந்தியாவில், 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

india endemic stage of COVID newstamilonline

India endemic stage of COVID:

இதனால், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 95 லட்சத்து 43 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 43 ஆயிரத்து 495 பேர் குணமடைந்து உள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Corona Endemic Stage:

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

அதிகபட்சமாக, மஹாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 89 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 162 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 516 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா எண்டமிக் என்ற நிலையை அடையும் சூழ்நிலை நிலவி வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை மூத்த வைராலஜி மருத்துவர் டாக்டர் சஞ்சய் ராய் அளித்த பேட்டியில், கொரோனாவானது இந்தியாவில் எண்டமிக் என்ற நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று உரைக்கிறார்.

மத்திய அரசின் நடவடிக்கை :

மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன் விளைவாக வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது அமல்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களை விட தற்போதைய மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் குறைவாகவே உள்ளன .

இதுவரை மத்திய அரசு நேரடியாக ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இதன் விளைவாக, மத்தியஅரசானது கொரோனா தாக்கத்தை பொறுத்து மாநில அரசுகளே ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Also Read: Foods To Avoid During Cough & Could: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!

ஆனால் அதேசமயம், தங்களது ஊழியர்களோ, அவர்களது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றுக்கு(COVID infection) ஆளானால், அவர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *