JIO 5G plans in India: இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை – விரைவில் அறிமுகம்!

JIO 5G plans in India: இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை – விரைவில் அறிமுகம்!

ரிலையன்ஸ் ஜியோ(Reliance JIO) நிறுவனம் இந்தியா முழுக்க 1000 நகரங்களில் JIO 5G சேவை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

JIO 5G plans in India-newstamilonline

JIO 5G plans in India:

இந்தியா முழுக்க 1000 முன்னணி நகரங்களில் 5G Network வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டதாக Reliance JIO அறிவித்து இருக்கிறது.

முன்னதாக மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்(TRAI) இந்த ஆண்டு இந்தியாவில் 5G Network வெளியீடு நடைபெறும் என அறிவித்து இருந்தது.

அதன்படி இந்தியாவில் 5G சேவை வெளியிடும் நிறுவனங்களில் Reliance JIO ஆதிக்கம் செலுத்தும் என தெரிகிறது.

ஹீட் மேப்ஸ், 3D மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் போண்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5G சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிக பகுதிகளில் மிக சீராக 5G சேவையை வழங்க முடியும்.

JIO மருத்துவம் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 5G பயன்பாட்டை சோதனை செய்து வருகிறது,” என JIO பிளாட்ஃபார்ம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5G சேவை வெளியிடப்படும் என டிராய்(TRAI) ஏற்கனவே அறிவித்து விட்டது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5ஜி சேவை பல கட்டங்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.

டிசம்பர் 2021 வரை நிறைவுற்ற மூன்றாவது காலாண்டில் மட்டும் ஜியோ நிகர லாபம் 8.8 % அதிகரித்து ரூ. 3,795 கோடி ஈட்டியது.

முன்னதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த ARPU(Average Revenue Per User) ரூ. 143.6 இல் இருந்து ரூ. 151.60 ஆக அதிகரித்து இருக்கிறது.

Also Read: Inventions of technology: டி.என்.ஏ-வில் சேமிக்கப்பட்ட தரவை PREVIEW செய்யும் புதிய தொழில்நுட்பம்..!

சமீபத்தில் ஜியோ சலுகை கட்டணங்கள்(JIO Plans) உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *