இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Improve blood circulation: கால்களில் செருப்பு அணிவதால் எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்..?

Improve blood circulation: கால்களில் செருப்பு அணிவதால் எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்..?

பொதுவாக நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மேற்கொள்ளுங்கள் என்பார்கள்.

Improve blood circulation-newstamilonline

Improve blood circulation:

ஆனால் இனி மேல் அதனுடன் காலில் செருப்பு போடுவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறது ஆய்வு.

நாம் காலில் செருப்பு போட்டு நடப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறது. காலணிகள் நம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காலணிகள் போட்டு நடப்பதால் நம் முழங்கால், முதுகு இவைகளை நேராக்கி நம் உடல் அமைப்பிற்கு நல்ல தோரணையை கொடுக்கிறது.

மேலும் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்க கால்கள் நாள் முழுவதும் சோர்ந்து போகாமல் இருக்க உதவுகிறது.

கால்கள் தான் நம் உடலின் அடிவேர், அடித்தளம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாதங்களை பாதுகாப்பது நமது கடமை.

அந்த வேலையைத் தான் நாம் அணியும் செருப்புகள் செய்கின்றன. நம்முடைய பாதங்கள் முதுகு, இடுப்பு, முழங்கால் என்று எல்லாவற்றையும் இணைக்கிறது.

எனவே பாதங்கள் சரியாக இல்லாவிட்டால் உங்களுக்கு முழங்கால் மற்றும் முதுகு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Improve blood circulation to feet-newstamilonline

பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்த செருப்புகள் என்று எதுவும் கிடையாது.

அவர்கள் காடுகளில் கூட வெறுங்காலில் நடந்தனர். தினமும் 8000 படி வீதம் நடக்க அவர்களால் முடிந்தது. புல்வெளித் தரையில் வெறுங்காலுடன் நடந்தார்கள். அப்பொழுது இயற்கையாகவே பாதங்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டன.

இதனால் அவர்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரித்து, கால்களின் நிலையான மற்றும் மாறும் செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது.

அந்தக் காலத்தில் நடந்தது மாதிரி இப்பொழுது தரையில் வெறுங்காலுடன் நடக்க முடிவதில்லை. இப்போதுள்ள மக்களால் 8000 படிகள் வரை ஏற முடிவதில்லை.

அதனால் தான் அவர்கள் காலணி பழக்கத்திற்கு மாறினார்கள். ஆனால் ஒருபோதும் தவறான காலணிகள் உங்க நடைபயிற்சிக்கு உதவாது.

சரியான காலணிகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் மட்டுமே உங்களால் நரம்புத் தூண்டல்களை பாதங்களில் பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆரோக்கியமான காலணியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • நீங்கள் உங்கள் பாதங்களுக்கு சரியான காலணியை தேர்ந்தெடுத்து இருந்தால் 12 மணிநேரம் கூடுதலாக நின்று நடைபயிற்சி செய்ய கால்களை அது ஊக்குவிக்கிறது.
  • காலணிகள் காலுக்கு வலிமையை கொடுத்து உடற்பயிற்சி செய்ய ஆதரவு தருகிறது.
  • கால், முழங்கால் மற்றும் முதுகு வலி ஆகியவற்றை நீக்குகிறது.
  • மூட்டுகள் மற்றும் தசைகளை பாதுகாக்கிறது
  • கால்களின் நிலை மற்றும் உடல் தோரணையை சரிசெய்கிறது.
  • எனவே உங்க பாத சிக்கல்களை போக்க நீங்கள் இனி ஆரோக்கியமான காலணிகளை தேர்ந்தெடுத்தாலே போதும்.

Also Read: Black salt benefits: கருப்பு உப்பின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா..?

  • ஆரோக்கியமான காலணிகள் கால்களுக்கு தேவையான நரம்பு தூண்டுதல்களையும், ஆதரவையும் கொடுக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் காலணிகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.