Immunity Boosting Food: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உலர் பழ பால்..!
Immunity Boosting Food: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உலர் பழ பால்..!
உலர் பழங்கள் குளிர்கால நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்ல உணவு என்று கூறப்படுகிறது.
அவற்றைப் பயன்படுத்தி சுவையான பால் தயாரிக்கும் முறையை பற்றி இங்கு காண்போம்.

Dry Fruit Milk Shake:
குளிர்காலம் ஆரம்பித்ததும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்வார்கள்.
எனவே குளிர்காலங்களில் பல வகையான பானங்களை உங்கள் குழந்தைகளின் உணவில் சேர்த்து, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
அவற்றில் ஒன்று தான் இந்த உலர் பழ பால்.
ஆரோக்கியம் என்று வரும்போது, சில சமயங்களில் நம் பாட்டி மற்றும் தாய்மார்கள் வைத்தியம் தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க பல பானங்களை அவர்கள் பரிந்துரைப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சில நேரங்களில் இந்த வீட்டு வைத்தியம் மருந்துகளை விட பருவகால பிரச்சனைகளை கையாள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வகையில் குளிர்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக உட்கொள்ள வேண்டிய பிரத்யேக உலர் பழ பாலுக்கான செய்முறையை நீங்கள் இங்கே கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.
உலர் பழ பால் ஒரு ‘ஆரோக்கியமான குளிர்கால பூஸ்டர்’ என்று நிபுணர்களால் கூறப்படுகிறது.
“இந்தப் பால் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் உங்களை சூடாக வைத்திருக்கும் மற்றும் பொதுவான குளிர்கால நோய்களுக்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்” என கூறுகின்றனர்.
Immunity Boosting Food:
உலர் பழ பாலின் ஆரோக்கிய நன்மைகள்:
எளிமையான உலர் பழ பால் உங்களை சூடாக வைத்திருப்பது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.
நிபுணர்களின் கூற்றுப்படி, இது முடி, தோல் மற்றும் நகங்களுக்கும் நன்மைகளை கொடுக்கிறது.
உலர்ந்த பழங்களில் வைட்டமின் ஈ, கொழுப்புகள், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற வைட்டமின்கள் உள்ளது.
இது ஆற்றல், புரதம், வைட்டமின்கள் மற்றும் உங்கள் முடி, நகங்கள் மற்றும் சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், குறிப்பாக குளிர்காலத்தில் இந்த உலர் பழ பாலை விட சிறந்தது எதுவுமில்லை.
இந்த உலர் பழ பால் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் நார்ச்சத்தை உங்களுக்கு வழங்கும்.
மேலும், இந்த செய்முறையை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் எள் விதைகளில் தாவர அடிப்படையிலான கால்சியம் நிறைந்துள்ளன.
இதனால் இந்த உலர் பழ பால் உங்களது எலும்புகளை வலுப்படுத்தி, வலிமையான, ஆரோக்கியமான ஒருவராக உங்களை உருவாக்கும்.

How to Make Energy Drink?
குளிர்கால ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உலர் பழ பால் செய்யும் முறை :
1.பேரீச்சம்பழம், பாதாம், ஏஞ்சீர், எள், குங்குமப்பூ இழைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை ஒரே நாள் இரவில் ஊறவைக்க வேண்டும்.
2.மறுநாள் காலையில், பாதாம் தோல்களை அகற்றி, பேரீச்சம்பழத்தை நீக்கி விட்டு, சிறிது தண்ணீரில் இந்த பொருட்கள் அனைத்தையும் அரைக்க வேண்டும்.
3.பேஸ்ட் மென்மையாகும் வரை அரைக்க வேண்டும் . அதன் பின் ஒரு கிளாஸ் எடுத்து அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்க வேண்டும்.
4. ஒரு குவளையில், இரண்டு பெரிய தேக்கரண்டி உலர் பழ கலவையை எடுத்து, அதை சூடான பாலுடன் சேர்த்து அருந்தலாம்.
Also Read: Home Remedies For Tooth Pain: தாங்க முடியாத பல் வலியா..? இந்த வழிய ட்ரை பண்ணி பாருங்க ..!
நீங்கள் காலையில் இந்த உலர் பழப் பாலை மில்க் ஷேக் வடிவில் உட்கொள்ளலாம் அல்லது உலர் பழங்களை பாலில் வேகவைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் சாப்பிடலாம்.
உலர் பழங்கள் எல்லாமே அற்புதமான மருத்துவ குணங்களை நிறைந்தவை என்றாலும் சில பழங்கள் நன்மைகளுடன் ஆற்றலை அளிக்கின்றன.
எனவே இவற்றை உட்கொண்டு ஆரோக்கியமான முறையில் வாழ்வோம் .