No Added Sugar Diet: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தால், உடம்பில் என்னவெல்லாம் நடக்கும்..!

No Added Sugar Diet: ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாம இருந்தால், உடம்பில் என்னவெல்லாம் நடக்கும்..!

சர்க்கரை வெறும் இனிப்பைத் தருபவை மட்டுமல்ல, ஒருவரை அடிமையாக்கக்கூடிய மோசமான பொருளும் கூட.

No Added Sugar Diet

No Added Sugar Diet:

அதோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை ஒருவர் அதிகமாக நுகர்ந்தால், அது இன்சுலின் எதிர்ப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

டைப்-2 சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு போன்றவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

எனவே உங்கள் உணவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை சேர்க்காமல் இருப்பது தான் நல்ல யோசனை.

ஆனால் இந்த சர்க்கரை உங்களின் உடலை எவ்வாறு பாதிக்கும் என்பது தெரியுமா?

சர்க்கரையை சாப்பிடுவதால் சந்திக்கும் எதிர்மறை விளைவுகள்:

சர்க்கரையானது வெறும் சர்க்கரை நோயின் அபாயத்தை மட்டும் அதிகரிக்காது.

இதில் ஊட்டச்சத்து எதுவும் இல்லை மற்றும் இது ஒருவரின் பசியை அதிகரிக்கும்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, ஒருவரது எடை இழப்புக்கு ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதே சிறந்த வழியாகும்.

சர்க்கரையைத் தவிர்த்த சில மணிநேரங்களுக்கு பின்…

சர்க்கரை உணவுகளை உண்பதால், ஊட்டச்சத்துள்ள உணவுகளின் மீதான ஆவல் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆனால் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்கும் போது, ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்துக்களை நிரப்புவதற்கு உடலில் அதிக இடம் கிடைக்கும். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும்.

சில நாட்களுக்குப் பின்…

சர்க்கரை உணவுகளுக்கு குட்-பை சொல்லிய சில நாட்களுக்குப் பின் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக உணர ஆரம்பிக்கலாம்.

உடலின் சர்க்கரை போதை அளவைப் பொறுத்து, வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்கககூடும்.

முதலில் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, தலைவலி மற்றும் குறைவான ஆற்றல் அளவுகள் போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும்.

சில சந்தர்ப்பங்களில், இதற்கு நேர்மாறாகவும் சந்திக்கலாம். மேலும் நீங்கள் பசியையும், தாகத்தையும் கூட அதிகம் உணரக்கூடும்.

எனவே அடிக்கடி நீர் குடித்து உடலை நீரேற்றுவதன் மூலம், பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

white sugar-newstamilonline

ஒரு மாதத்திற்கு பின்…

ஒரு மாதமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால், வாழ்நாள் முழுவதும் ஒரு ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கலாம்.

அதிலும் ஒருவரால் ஒருமாத காலம் சர்க்கரை சாப்பிடாமல் இருக்க முடிந்தால், உடலினுள் நல்ல விஷயங்கள் நடைபெறத் தொடங்கும்.

முக்கியமாக இனிப்பான உணவுகளின் மீதுள்ள விருப்பம் மறைந்துவிடும். மேலும் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்க ஆரம்பிப்பீர்கள்.

ஒரு மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருப்பதால் பெறும் நன்மைகள்:

சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கும் போது, சர்க்கரை வடிவில் உள்ள கலோரிகள் உடலில் சேர்வது தடுக்கப்படும்.

இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

சர்க்கரையைத் தவிர்ப்பது என்பது குறைந்த கலோரிகளையும், உடல் எடையையும் குறிக்கிறது. அதாவது, உடலில் நல்ல கொழுப்புக்கள் சிறப்பான அளவில் நிறைந்துள்ளது உறுதியாகும்.

என்ன தான் ஆரோக்கியமான உடல் எடையுடன் இருந்தாலும், சர்க்கரையை முழுமையாக தவிர்ப்பதால், உடலில் ஊட்டச்சத்துக்கள் சிறப்பான அளவில் இருக்கும். இதனால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

பொதுவாக சர்க்கரையை உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது, இதயத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் சேதமடையும்.

அதுவே சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதால், இதய நோயின் அபாயம் குறைவாக இருக்கும்.

பல் சிதைவு அல்லது பல் சொத்தைகளுக்கு முக்கிய காரணமே சர்க்கரை தான். இந்த சர்க்கரை நுகர்வைக் குறைக்கும் போது அல்லது தவிர்க்கும் போது, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

முடிவு சர்க்கரையைத் தவிர்ப்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் நன்மைகள் கிடைக்கும்.

Also Read: Avoid Drinking Water: எப்போதெல்லாம் நாம் கண்டிப்பாக தண்ணீர் குடிக்கக்கூடாது..!

ஆனால் இதை மேற்கொள்ள நினைக்கும் போது, சரியான ஊட்டச்சத்து நிபுணரை அணுகி, அவர் பரிந்துரைக்கும் அன்றாட உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

எனவே சர்க்கரையை தவிர்த்தது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *