இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

I Want To Sleep: ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

I Want To Sleep: ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா..? இதை செய்யுங்கள்..!

தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் வெது வெதுப்பான நீரில் குளித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

i want to sleep-newstamilonline

I Want To Sleep:

டெக்சாஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 5,322 பேரை ஈடுபடுத்தியுள்ளது.

இந்த ஆய்வில் மனித உடலில் 104 மற்றும் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் தண்ணீர் படும்போது அவர்களின் தூக்க நிலை அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

அதாவது அந்த நீரானது 41 டிகிரி செல்சியத்தில் இருக்க வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெதுவெதுப்பான நீரில் குளிப்பதால் வெறும் பத்தே நிமிடத்தில் தூக்கம் வரும் என்கிறனர் ஆய்வாளர்கள்.

41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீர் உடலில் படுபோது ’Thermoregulatory system’ என்று சொல்லக் கூடிய உடலின் வெப்ப நிலையைச் சமநிலைச் செய்யும் ஆற்றல் தூண்டிவிடப்பட்டு உடல் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

இதனால் உடலின் ஒட்டு மொத்த பாகங்களுக்கும் இரத்தம் சீராகப் பாய்கிறது. கை கால்கள், பாதங்கள் இதமாகி; உடல் வெப்பம் சமநிலையடைந்து ஓய்வு நிலைக்கு தயாராகிறது.

இனி தூக்கம் வரவில்லை என்று மருத்துவரை அணுகி மாத்திரைகளை விழுங்குவதைக் காட்டிலும், கட்டிலிலியே புரண்டு புரண்டு படுப்பதை காட்டிலும், நேராக பாத்ரூம் சென்று சூடாக ஒரு குளியலைப் போடுங்கள். தூக்கம் கண்களை வருடும்.

நல்ல தூக்கம் பெற ஐந்து வழிகள்:

ஒரு மனிதனுக்கு உழைப்பு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக் முக்கியம் தூக்கவது. பல உடல்நல கோளாறுகளுக்கு காரணம் தூக்கம் இல்லாததுதான். குறிப்பாக இரவு தூக்கவது மிகவும் முக்கியம்.

இன்று இரவு ஷிப்ட்களில் அதிக பணத்திற்காக பலர் பணிபுரிகின்றனர். இயற்கைக்கு மாறாக இரவில் தூங்காமல் விழித்திருப்பது பலவகையான உடல் மற்றும் மன கோளாறுகளை ஏற்படுத்தும்.

சரி இனி நல்ல தூக்கம் என்றால் என்ன என்று பார்ப்போமா?

இரவு தூக்கம் மிகவும் முக்கியம். பணியில் இருப்பவர்களுக்கும் பகலில் தூங்குபவர்களுக்கும் இரவில் தூக்கம் வராது.

இரவில் நன்றாக தூங்க பகல் தூக்கத்தை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

நல்ல தூக்கத்திற்கு நல்ல சுகாதாரமான படுக்கை அறை தேவை.

தூக்கம் இடையில் கலையாமலும் இருக்க படுக்கை விரிப்புகள், மிதமான தடிமனில் பருத்தி தலையணை ஆகியவை இருந்தால் தூக்கமும் நன்றாக வரும்.

இரவு உணவு அதிகமாக சாப்பிட கூடாது. ஜீரணம் ஆகும் உணவை அரை வயிற்றுக்கு அதே நேரம்சாப்பிட வேண்டும்.

காபி, டீ, சாக்லேட் தூங்குவதற்கு முன்னர் சாப்பிட வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.

கழுத்தை சரியான கோணத்தில் வைத்துக் கொண்டு தூங்குவது நல்ல தூக்கத்தை தரும்.

படுத்துக் கொண்டு டி.வி பார்க்கக் கூடாது. கழுத்து வலி ஏற்படக்கூடும். டிவியை படுக்கை அறையில் எந்த காரணத்தை கொண்டு வைக்கப்பது பெரிய தவறு.

டிவி, கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதுதான் தூங்குவதற்கு முன்னர் அனைவரும் செய்யும் தவறு.

Also Read: Popcorn good for health : உங்களுக்குப் பிடிச்ச பாப்கார்னை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான டிப்ஸ் இதோ..!

இதிலிருந்து வெளீப்படும் நீலவண்ண ஒளி தூக்கத்தை பாதிக்கும். எனவே, இவற்றை பார்ப்பதை தூங்குவதற்கு அரை மணிக்கு முன்னர் தவிர்ப்பது நலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *