How Virus Attack: தீவிரவாதிகளின் புதிய வைரஸ் தாக்குதல் முறை: எச்சரிக்கை அளிக்கும் விஞ்ஞானிகள்..!

How Virus Attack: தீவிரவாதிகளின் புதிய வைரஸ் தாக்குதல் முறை: எச்சரிக்கை அளிக்கும் விஞ்ஞானிகள்..!

ஏமி வெப் என்ற அறிஞர் தனது புதிய புத்தகமான “The Genesis Machine” இல், வருகின்ற காலத்தில் தீவிரவாதிகள் பிற நாடுகளை அளிக்க வைரஸ்களை உருவாக்கி, தீய நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார்.

How Virus Attack

How Virus Attack:

இதற்கு முன்பு விஞ்ஞானிகளால் போலியோ வைரஸ் மற்றும் பெரியம்மை போன்ற ஆபத்தான வைரஸ்களை இனப்பெருக்கம் செய்ய முடிந்தது.

இது ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது. எனவே இதேபோன்று மற்றவர்களும் வைரஸ்களை உருவாக்கி மக்களை அழிக்க எண்ணுவார்கள் என்று நாம் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

தி அட்லாண்டிக் வெளியிட்ட புத்தகத்தின் ஒரு பகுதியில், வெப் 2011 ஆம் ஆண்டில், எராஸ்மஸ் மருத்துவ மையத்தின் வைராலஜிஸ்ட் ரான் ஃபூச்சியர் (Ron Fouchier) H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸின் DNA-வை பறவையிலிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும் வகையில் மாற்ற முடிந்தது என்று சுட்டிக்காட்டுகிறது.

Fouchier இன் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது என்று Webb கூறினார்.

ஆனால், ஆராய்ச்சியினை பற்றிய விவரங்கள் தவறான கைகளில் சென்று விடுவதை தடுக்கவேண்டும் என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினர்.

அதன் அடிப்படையில் உயிரியல் பாதுகாப்பிற்கான தேசிய அறிவியல் ஆலோசனை வாரியம், Fouchier இன் கட்டுரையின் ஒரு பகுதியைத் திருத்துமாறு அறிவியல் பத்திரிகைகளைக் கேட்டுக் கொண்டது.

பின்னர் 2017 ஆம் ஆண்டில், அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.

நுண்ணுயிரிகளின் உயிரியல் செயல்பாடுகளை மேம்படுத்த அவற்றின் மரபியலை மாற்றும் ஆராய்ச்சிக்கு இந்நிறுவனம் நிதி அளித்து உதவியது.

இது மற்ற நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது என்று வெப்(Webb) தனது புத்தகக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா வைரஸ் உயிரி ஆயுதத்தை உருவாக்கி வருகிறது.

“செயற்கை உயிரியலின் எதிர்கால அச்சுறுத்தல்” பற்றிய 2020 ஆய்வறிக்கையில், இயற்கைக்கு மாறான உயிரியல் ஆயுதங்களை உருவாக்க பொறிக்கப்பட்ட நோய்க்கிருமிகளைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர் குழு எச்சரித்தது.

இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும், குறிப்பாக புதிய வகை நோய்க்கிருமிகள் உருவாக்கினால் அவற்றிலிருந்து மக்களை காப்பதற்கு தடுப்பூசிகளை உருவாக்குவது மிகவும் கடினம்.

செயற்கை வைரஸ்கள், தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது வைரஸ் சோதனைகள் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியை முற்றிலுமாக தடைசெய்கிறது.

Also Read: Stonehenge mystery: ஸ்டோன்ஹெஞ்ச் ஒரு மாபெரும் நாள்காட்டியாக இருந்திருக்கலாம், இப்போது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவோம்..!

இத்தகைய செயல்பாடுகள் மேலும் வளர்ந்து கொண்டிருந்தால் தீவிரவாதிகள் வைரஸ்களை பயன்படுத்தி மக்களை எளிதில் அழிக்க நேரிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *