How to Remove a Tick ? உண்ணிகளின் ஆபத்துகளை தடுக்க “டிகோடிங்” முறைகள்..!

How to Remove a Tick? உண்ணிகளின் ஆபத்துகளை தடுக்க “டிகோடிங்” முறைகள்..!

இன்றைய காலநிலையில் உண்ணிகள் ஏறக்குறைய ஒவ்வொரு கண்டத்திலும் வாழ்கின்றன.

How to Remove a Tick

Also Read: Sense of smell examples: மக்கள் வாசனைத்திறனை எவ்வாறு அடையாளம் காண்கின்றனர் என்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள்..!

ஒட்டுண்ணி என்றால் என்ன?

உண்ணிகள் என்பது விலங்குகள் மற்றும் மனித இரத்தத்தை உண்ணும் ஒட்டுண்ணிகள் ஆகும். உலகெங்கிலும் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உண்ணிகள் உள்ளன.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த புதிய மரபணு-எடிட்டிங் (gene-editing) முறைகள் டிக் ஒட்டுண்ணியால் பரவும் நோய்களைக் குறைக்க உதவுகிறது.

உண்ணிகள் கடினமான உண்ணி மற்றும் மென்மையான உண்ணி என்ற இரண்டு பெரிய குழுக்களை கொண்டுள்ளன.

கடினமான உண்ணிகள் தட்டையான உடல் மற்றும் பின்தங்கிய சுட்டிப் பற்களின் வரிசைகளுடன் நீளமான வாய்ப்பகுதிகளைக் கொண்டுள்ளன.

இந்த குழுவில் மனிதர்களை கடிக்கும் மிக முக்கியமான உண்ணி இனங்கள் அடங்கும்.

மென்மையான உண்ணிகள் சுருக்கப்பட்ட தோல் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன.

இந்த வகையினங்கள் மிகவும் அரிதாகவே மக்களுடன் தொடர்பு கொள்கின்றன.

ஆஸ்திரேலியாவில் டிக் ஒட்டுண்ணியே மனிதர்களை அதிக அளவு பாதிக்கின்றது.

ஆஸ்திரேலியாவில் இவ்வகை உண்ணிகளில் 70 இனங்கள் காணப்படுகின்றன.

லைம் நோய், Q காய்ச்சல், குயின்ஸ்லாந்து டிக் டைபஸ், ஃபிளிண்டர்ஸ் தீவு புள்ளி காய்ச்சல் மற்றும் ஆஸ்திரேலிய புள்ளி காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாவதற்கு இதுவே காரணமாக அமைகிறது.

அமெரிக்காவில் உள்ள தொற்றுநோயியல் பேராசிரியரான ஜேசன் ராஸ்கான், உண்ணிகள் பொது சுகாதாரத்திற்கு ஒரு வலிமையான எதிரி என்றும், உண்ணிகள் பரப்பும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு புதிய கருவிகள் உருவாக்க வேண்டும் என்றும் உரைக்கிறார்.

இக் குழு உண்ணிகளில் மரபணு மாற்றத்தை நிரூபிப்பதற்கான முதல் ஆய்வில் CRISPR/Cas9 அமைப்பைப் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு நெறிமுறைகளைப் பயன்படுத்தியது.

Also Read: New invention in science: மின்சாரம் மூலம் காயத்தை குணப்படுத்தும் காயம் பூச்சு(wound dressing) கண்டுபிடிப்பு..!

இவ் ஆய்வில் மரபணுவில் இலக்கு வைக்கப்பட்ட இடத்தில், அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் டிஎன்ஏவை வெட்டி அல்லது சேர்க்கின்றனர்.

இந்த செயல்முறை பொதுவாக CRISPR/Cas9 ஐ கருக்களில் செலுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.

How to Remove a Tick?

ஆனால், டிக் முட்டைகளின் கடினமான மெழுகு பூச்சு காரணமாக இது வரை இதைச் செய்ய இயலவில்லை.

டிக் முட்டைகள் கடினமான மெழுகுடன் பூசப்பட்டிருப்பதால் மரபணு மாற்றப்பட்ட உண்ணிகளை உருவாக்குவது மிகவும் கடினம் ஆகும்.

ஏனெனில், இது அவற்றை உட்செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மென்மையான கண்ணாடி ஊசிகளை உடைத்து விடுகிறது.

உண்ணிகள் முட்டையிடுவதற்கு முன்பு மெழுகு உருவாக்கும் தாய்வழி உறுப்புகளை அகற்றுவதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிக்கல்களை தடுத்தனர். இச்செயலால் எளிதாக மரபணுக்களை நீக்க முடியும்.

பின்னர், வேறு ஒரு நெறிமுறையைப் பயன்படுத்தி, அவர்கள் CRISPR/Cas9 ஐ நேரடியாக மரபணுக்களை கர்ப்பிணிப் பெண் உண்ணிகளுக்குள் செலுத்தினர்.

குறிப்பாக கருப்பைகளை குறிவைக்க ReMOT கண்ட்ரோல் என்ற செயல்முறையைப் பயன்படுத்தினர்.

இந்த பெப்டைட் மாமிச உண்ணிகளில் வேலை செய்கிறது என்பதை நிரூபிக்கும் முதல் ஆராய்ச்சி ஆகும்.

இவ்வாராய்ச்சியை கட்டுப்படுத்த பயன்படுத்தும் ரிமோட் கண்ட்ரோல் கரு ஊசியைப் போலவே திறமையானது மற்றும் எளிதாகவும் உள்ளது.

அமெரிக்காவில் மட்டும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300,000 பேரை லைம் உண்ணி பாதிக்கிறது.

மேலும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், தொற்று மூட்டுகள், இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பரவி ஆபத்தை விளைவிக்கிறது.

எனவே, iscience இல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி உண்ணிகளின் ஆபத்தில் இருந்து நம்மை காப்பதற்கு பயனுள்ள ஒன்றாக உள்ளது.

ஏனெனில் தற்போதைய காலநிலை மாற்றம் உண்ணிகள் விரைவாக புதிய பகுதிகளை ஆக்கிரமிக்க எளிதில் அனுமதிக்கிறது.

மேலும், அதிகமான மக்கள் மற்றும் விலங்குகளை தொற்றுநோய்களின் ஆபத்தில் ஆழ்த்துகிறது.

Also Read: How your brain changes with age: 60 வயதிற்குப் பிறகும் மனித மூளையின் செயலாற்றும் வேகம் குறையாது! ஆய்வு கூறும் செய்தி..!

லைம் நோய் போன்ற நோய்களுக்கான புதிய கட்டுப்பாட்டு முறைகளை உருவாக்கவும், உண்ணிகளின் தாக்கத்தை மேலும் புரிந்து கொள்ளவும் இந்த டிக்கோடிங் முறை பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *