How to Remember Things: மறதியை குறைக்க உதவும் வழிகள்..! இதை ஃபாலோ பண்ணுங்க..!
How to Remember Things: மறதியை குறைக்க உதவும் வழிகள்..! இதை ஃபாலோ பண்ணுங்க..!
நம்மில் பலர் சிறு சிறு விஷயம் கூட மறந்து போகும் நிலைக்குள் உள்ளனர்.

Also Read: How to Cure Autism: மன இறுக்கம் கொண்ட குழந்தைகளுக்கு புதிய நண்பர்களை உருவாக்க உதவும் Minecraft..!
How to Remember Things?
இத்தகைய நினைவாற்றல் நிலையை நம்மால் தடுக்க எந்த வழியும் இல்லை.
ஆனால், அதை சில செயல்முறைகள் மூலம் குறைக்கலாம்.
நினைவாற்றலை கூர்மைப்படுத்தும் சில முக்கிய குறிப்புக்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
மேலும், எப்போது நீங்கள் மருத்துவர் உதவியை எதிர்நோக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
நம் நினைவாற்றலை கூர்மைப்படுத்த முதலில் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள், அதுவே மிகவும் சிறந்த வழியாகும்.
உடல் செயல்பாடுகளில் தினசரி உடற்பயிற்சி சேருங்கள். இது மூளை உட்பட உடலில் உள்ள முழு உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.
இது நினைவாற்றலை கூர்மையாக வைத்திருக்க உதவும்.
குறிப்பாக வயதான பெரியவர்கள் தங்கள் ஆரோக்கியமான உடலுக்காக குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான ஏரோபிக்(aerobic) செயல்பாடுகளை செய்யவேண்டும்.
முழு வொர்க் அவுட்(workout) செய்வதற்கு நேரம் இல்லையென்றால் நாள் முழுவதும் 10 நிமிட நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். இவை கூட நினைவுத்திறனை மேம்படுத்தும்.
தூக்கம் அவசியம்:
இன்றைய காலகட்டங்களில் தூக்கத்தை யாரும் சரியாக எடுத்துக்கொள்வதில்லை.
தூக்கம் நினைவுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் ஒரு மனிதனுக்கு சராசரியான தூக்கம் மிகவும் அவசியமாகிறது.
நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதால் அதிக நேரம் தூங்காமல் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
திட்டமிட்டு செயல்படுங்கள்:
ஒரே நேரத்தில் அதிக வேலைகளை செய்து வந்தால் பல விஷயங்களை மறக்கலாம். அதனால் வேலைகளை திட்டமிட்டு குறித்து வையுங்கள்.
செய்ய வேண்டிய விஷயங்களை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இத்தகைய செயல்முறைகள் மூலம் மறதியை தவிர்க்கலாம்.
which food is good for memory?
உணவு ஆரோக்கியம் மூளைக்கு மிக நல்லது.
ஆரோக்கியமான உணவு இதயத்துக்கும் நன்மை செய்யும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் எடுப்பது சிறந்தது.
Also Read: Goji Berries Benefits: பார்வை திறனை அதிகரிக்கும் கோஜி பெர்ரி..!
மீன், மெலிந்த கோழி இறைச்சி, பீன்ஸ் வகைகள் போன்ற குறைந்த கொழுப்பு புரத மூலங்களை உணவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆல்கஹால் பழக்கம் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கலாம்.
எனவே மோசமான இந்த பழக்கங்களை கட்டுக்குள் வைத்துவிட்டு ஆரோக்கியமான உணவுகளை உண்டு நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்:
உடல் செயல்பாடுகள் போன்று மன செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் மனதை சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் முலம் மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
நினைவாற்றல் இழப்பை தடுக்க, குறுகெழுத்து புதிர்களை செய்து பழகலாம்.
நீங்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்லும் போது மாற்று பாதையில் வாகனம் ஓட்டுங்கள். இசைக்கருவிகளை வாசிக்க கற்றுகொள்ளுங்கள்.
முடிந்தவரை மூளையினை வேலை கொடுக்கும் வகையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
Also Read: What is autoimmune disease?தன்னுடல் தாக்குநோய்களை தடுக்கும் வைட்டமின் D..!
மேலும் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் தாக்கத்தினால் கூட நினைவாற்றலின் அளவு குறையலாம்.
எனவே, மறதிநோயை குறைக்க மேற்க்கண்ட வழிகளை பின்பற்றி பயனடையுங்கள்.