இயற்கையோடு வாழ்வோம்சமையல் குறிப்புகள்செய்திகள்

How To Reduce Body Heat: பூண்டு, வெங்காயம் அதிகம் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்..?

How To Reduce Body Heat: பூண்டு, வெங்காயம் அதிகம் சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்..?

இந்தியாவை பொறுத்தவரை, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சமையல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவை இரண்டுமே உணவின் சுவையை மேலும் கூட்டுவதோடு, உடலிற்கும் நிறைய ஆரோக்கிய பலன்களை வழங்குகின்றன. உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பது, அதிகப்படியான கொழுப்பை குறைப்பது, இயற்கை இரத்த சுத்திகரிப்பானாக செயல்படுவது, ஆன்டி-ஃபங்கல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பது மற்றும் ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது என இவற்றின் ஆரோக்கிய பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

diet tips

How To Reduce Body Heat:

பல்வேறு சுகாதார நன்மைகள் இவற்றில் இருந்தபோதிலும், பலர் வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்ப்பதை பார்க்க முடிகிறது.

இவற்றிற்கு என்ன காரணம்? வெங்காயம் மற்றும் பூண்டு ஆயுர்வேதம் மற்றும் ஒரு சில மேற்கத்திய ஆராய்ச்சிகளின்படி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக எப்போதும் இருக்காது என்று கூறப்படுகிறது.

ஆயுர்வேதத்தின்படிவெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதில்லை என்பதற்காக கூறப்படும் காரணங்கள் மாறுபடுகின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

இத்தகைய காரணங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. மேலும், எக்காரணம் கொண்டும் இவற்றை பொதுமைப்படுத்தவே முடியாது.

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்று உயிர் சக்திகள் உண்டு. அவை ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான உடலமைப்பை வழங்குகின்றன.

பித்தம் ஆனது தீ மற்றும் நீரின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலில் உள்ள அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளையும், உடலின் வெப்பநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டு மிகவும் வெப்பத்தை உண்டாக்கக்கூடிவை. அவை உடல் மற்றும் உணர்ச்சி மட்டங்களில் பித்தத்தை மிகவும் மோசமாக்குகின்றன.

அமில பிரதிபலிப்பு, புண்கள், பெருங்குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குடல் அழற்சி, சரும வெடிப்பு அல்லது சிவத்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், பிரச்சனை மேலும் மோசமாக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

diet tips

Diet tips வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வது கோபம், ஆக்ரோஷம், அறியாமை, சோம்பல், பதட்டம் மற்றும் பாலியல் ஆசை அதிகரிப்பு போன்ற சில எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தியானம் செய்வோர் அல்லது ஆன்மீக பாதையை பின்பற்ற விரும்புவோர், வெங்காயம் மற்றும் பூண்டு உட்கொள்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர்.

வெங்காயம், பூண்டு போன்ற ராஜ்சிக் உணவுகள் ஒருவரின் மனநிலையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு நபரின் கவனத்தை சிதறச்செய்யலாம், மனநிலையை பாதிக்கலாம், மேலும் நிலையற்ற புத்தியையும் ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

ராஜ்சிக் உணவு என்பது சூடான, காரமான மற்றும் உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் கலவையாகும்.

இது எதிர்மறை, ஆர்வம், அமைதியின்மை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

Also Read: Coffee: மஞ்சள் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

1980-களில் நடத்திய ஆய்வின் படி டாக்டர் ராபர்ட் [பாப்] சி. பெக், பூண்டு மூளைக்கு தீங்கு விளைவிக்கும், பூண்டு மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கண்டறிந்தார்.

ஏனெனில் அதன் சல்போன் ஹைட்ராக்சில் அயனிகள் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுத்தவோ அல்லது மூளை செல்களுக்கு விஷத்தை ஏற்படுத்தவோ கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.