Amazon Alexa App: ‘அலெக்ஸா, எனது ஹெச்பி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்’ என்று சொன்னால் போதும்..!
Amazon Alexa App: அமேசான் இந்தியா வலைதளம் மற்றும் அமேசான் செயலி மூலமாக எச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்த முடியும். அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது கூடுதல் சலுகையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Amazon Alexa App:
வாடிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் அமேசான் கூட்டுச் சேர்ந்துள்ளது. தானியங்கி ‘வாய்ஸ் ரெஸ்பான்ஸ்’ அலெக்ஸாவின் உதவியுடன் எல்பிஜி ரீஃபில்களை முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம். பணத்தை நேரடியாகச் செலுத்தினால் போதுமானது.
அமேசான் இந்தியா:
அமேசான் இந்தியா அதன் வலைத்தளத்தில் இப்போது இந்த அம்சங்களை வெளியிட்டுள்ளது. அலெக்ஸாவின் உதவியுடன் ஹெச்பி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் அசிஸ்டன்ட் தன் பணியைச் செய்து முடிக்க சில வினாடிகள் மட்டுமே தேவைப்படும்.
சிலிண்டர் முன்பதிவு:
முதலில் அமேசான் கட்டண டாபின் (tab) கீழ் உள்ள ‘எல்பிஜி’ வகையையோ அல்லது ஹோம்பேஜ்ஜில் உள்ள “கட்டணம் செலுத்த” ஆப்ஷனையோ தேர்ந்தெடுக்கவேண்டும். இங்கு, ஹெச்பி கேஸ் மொபைல் எண் அல்லது 17 இலக்க எல்பிஜி ஐடியை அமேசான் கணக்கில் பதிவு செய்யுங்கள்.
இது முடிந்ததும், அலெக்ஸாவிடம் சிலிண்டரை முன்பதிவு செய்ய கேட்கலாம். உங்களிடம் இயக்கப்பட்ட அலெக்ஸா சாதனம் இருந்தால், “அலெக்ஸா, எனது ஹெச்பி கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்” என்று சொன்னால் போதுமானது.
கட்டணத்தைச் செயலாக்குவதற்கு முன்பு வாடிக்கையாளர் உறுதிப்படுத்தலை அலெக்ஸா கேட்கும்.
உறுதிப்படுத்தும் sms:
இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்குக் கட்டணத்தை உறுதிப்படுத்தும் sms வரும். மேலும், வினியோகஸ்தர் விவரங்களை Amazon.in-ல் பயனர்கள் காண முடியும்.
“Amazon Pay வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் பரிவர்த்தனையை 30 வினாடிகளுக்குள் மூன்று வாய்ஸ் கட்டளைகளுடன் அலெக்ஸாவோடு முடிக்க முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெச்பி கேஸ் சந்தாதாரராக இல்லாதவர்கள், அமேசானைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்க.
இந்த விர்ச்சுவல் அசிஸ்டென்ட், வங்கி கணக்கிலிருந்து தேவையான தொகையைக் கழிப்பதன் மூலம் அதன் பணியை முடிக்கும்.
அமேசான் UPI, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் நெட்-பேங்கிங் உள்ளிட்ட பல டிஜிட்டல் பயன்முறையையும் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
வாடிக்கையாளர்கள் ரூ.50 வரை திரும்பப் பெறலாம்:
பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைக்குக் கட்டண செயல்முறையில் end-to-end encryption செய்யப்படும் என்றும் அமேசான் கூறுகிறது.
அதேபோல் அமேசான் பே மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது வாடிக்கையாளர்கள் ரூ.50 வரை திரும்பப் பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமேசான் இந்தியா ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தியது.
இது இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (IRCTC) கூட்டு சேர்ந்து துவங்கப்பட்டது.
இந்த அம்சம் தற்போது வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது என்று அமேசான் தெரிவித்தது.
அமேசான் புதிய ரயில் டிக்கெட் சேவையுடன் ஜீரோ கட்டண நுழைவுவாயில் சேவை மற்றும் தளர்த்தப்பட்ட சேவை கட்டணங்கள் போன்ற அம்சங்களைக் பயனர்களுக்கு வழங்குகிறது.
அமேசான் IRCTC டிக்கெட்களுடன் கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.