News Tamil OnlineTamil NewsTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்

Home Remedy For Gas Trouble : வாயுக்கோளாறுகளை சரி செய்யும் அதிசயப் பிண்ணாக்குக் கீரை..!

Home Remedy For Gas Trouble : வாயுக்கோளாறுகளை சரி செய்யும் அதிசயப் பிண்ணாக்குக் கீரை..!

பிண்ணாக்குக் கீரை, இது நீண்ட உருண்டை வடிவத்தில் இலைகளைக் கொண்டிருக்கும். பட்டையான காய்களையும், சிகப்பு நிற தண்டினையும், மஞ்சள் நிற பூக்களையும் கொண்ட ஒரு சிறுச்செடி ஆகும்.இவை தமிழகமெங்கும் ஒரு களைச்செடியாக வளரக்கூடியவை, இதனை பிண்ணாக்கு பூண்டு என்றும், கீரை என்றும் கூறுவர். இதன் இலைகள் மருத்துவக் குணம் உடையது.

இந்த பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை மேலும் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

Home Remedy For Gas Trouble

Home Remedy For Gas Trouble :

புற்று நோய் :

பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். இக்கீரையின் உள்ளே வேதிப்பொருட்கள் பல அடங்கியுள்ளன.

இதை உணவில் தொடர்ந்து நாம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படாது.

விஷ கடி:

தேள், பூரான், தேனீ, விஷ வண்டுகள் போன்றவை கடித்து விட்டால், அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விஷம் இரத்தத்தில் பரவாமல் தடுக்கவும் இந்த பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் போதும், நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு வீரியம் குறைந்து விடும்.

How To Keep Liver Healthy?


கல்லீரல்:

நம்மில் பலர் மது, போதை பொருட்களை பயன்படுத்தும், பழக்கத்தினைக் கொண்டிருப்பர்.

இந்த தீய பழக்கத்தால் உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளில் ஆபத்து நேரிடும்.
அதற்கு சிறந்த மருந்தாக இந்த பிண்ணாக்கு கீரையினை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலம்:

இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு கொடிய நோயாக இந்த மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, மலச்சிக்கல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூலம் நோய் ஏற்படும்.

இந்த மூல நோயை குணப்படுத்துவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை மறைப்பதிலும் இந்த பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள்.

வாயு தொந்தரவுகள்:

நாம் வாத தன்மை அதிகம் உள்ள உணவுகளை உண்பதால், நம் வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி வாயுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

இந்த, பிண்ணாக்கு கீரை உடலில் ஏற்படும் வாத தன்மையை சீராக்கி வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கியம் அடையவும் செய்கிறது.

நோய் எதிர்ப்பு:

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நம் வயது கூடிக்கொண்டு செல்லும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும். அவ் வகையில் பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது.

Food For Sugar Patients:

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

எனவே, வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது இந்த பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது உடலுக்கு நல்லது.

பிண்ணாக்கு கீரை சாப்பிடும் முறைகள்:

பிண்ணாக்குக் கீரையை அரைத்து, அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, கால் ஆணி உள்ள இடங்களில் போட்டு வந்தால் கால் ஆணி மறையும்.

மேலும் இதனுடன், சிறிது பார்லியையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் கால் வீக்கம் குணமாகும்.

சிறுநீர் பிரச்சனை உள்ளவர்கள், பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கி காய்ச்சி குடித்தால் சிறுநீர் எளிதில் பிரியும். நீர்க்கட்டு, நீர்கடுப்பு போன்றவைக் குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோயினை சரிசெய்ய பிண்ணாக்குக் கீரை சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, உலர்த்தி பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் போதும்.

மலச்சிக்கலை போக்க, பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து SOUP போல செய்து குடித்தால் சரியாகும்.

பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அதிமதுரத்தை ஊறவைத்து பின் அதை காயவைத்துப் பொடித்து, தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Also Read: Venthayam Benefits In Tamil: தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுமா வெந்தயக்கீரை..?

உடல் பலமடைய, பிண்ணாக்குக் கீரைச் சாற்றில் அமுக்கரா கிழங்கை ஊறவைத்து, பின்பு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெற்று உணர்வு நரம்புகளும் வலிமையுடன் இருக்கும்.

மேலும் இக் கீரையானது சிறுநீர் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதனுடன் பருப்பு சேர்த்து சமைத்து பின்பு சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வர உடல்சூடு, சீதபேதி, ரத்தபேதி போன்றவை குணமாகும்.

இவ்வளவு அற்புத பயன்களை கொண்டது இந்த பிண்ணாக்குக் கீரை.