News Tamil OnlineTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்மூலிகைகள்

Home Remedies For Cough : வறட்டு இருமலை விரட்டியடிக்கும் அற்புத கண்டங்கத்திரி..!

Home Remedies For Cough : வறட்டு இருமலை விரட்டியடிக்கும் அற்புத கண்டங்கத்திரி..!

நாம் சிறு குப்பை போன்ற செடி என நினைக்கும் தாவரங்களில்தான் அதிக சத்துக்கள் புதைந்து கிடக்கின்றன, அந்த வகையில் ஒன்று தான் இத்தக் கண்டங்கத்தரி.

கண்டங்கத்தரி, இதற்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி என பல பெயர்கள் உள்ளன. அதிலும் கண்டங்கத்திரி என்ற பெயரை இது ஏன் பெற்றது என்றால்,
‘கண்டம்’ என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயறாம்.

Home Remedies For Cough

Home Remedies For Cough :

கண்டங்கத்திரியின் அமைப்பு:

இச்செடியின் உடல் முழுவதும் முட்கள் காணப்படும். இக்கத்தரி பெரும்பாலும் பசுமை நிறமுடைய தரிசு நிலங்களில் வளரும்.

இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளில் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும்.

இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களும் காணப்படும்.

இதன் பூக்கள் அடர் ஊதா நிறத்தில் இருக்கும், இது கத்தரி வகைச் செடியினைச் சார்ந்தது.

காயானது கத்தரிக்காய் போன்றும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்

கண்டங்கத்திரியின் பயன்கள்:

கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி, பின் வடித்து பயன்படுத்தினால் போதும், தலைவலி, கீல்வாதம் முதலிய வாத நோய்கள் அனைத்தும் குணமாகும்.

காலில் ஏற்படுகின்ற வெடிப்புகளுக்கு கண்டங்கத்திரியின் இலையை இடித்து, அதன் சாற்றுடன் ஆளிவிதை எண்ணெய் கலந்து பக்குவமாக காய்ச்சி பூசினால் வெடிப்பு மறைந்து போகும்.

மூலநோய் உள்ளவர்கள் கண்டங்கத்திரி பூவை எடுத்து, அதனுடன் வாதுமை நெய் சேர்த்து பக்குவமாக காய்ச்சி பூசிவர நன்மை தரும்.

கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வெளியேறும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும். வெண்குஷ்டத்திற்கு இதன் பழம் சிறந்த மருந்தாகும்.

கொதிக்கின்ற நீரில் கண்டங்கத்திரி பழத்தை இட்டு வேக வைத்து நன்கு அதைக் கடைந்து வடிகட்டி, அதனுடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குஷ்டம் உள்ள இடங்களில் வைத்தால் வெண்புள்ளிகள் மறையும்.

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம்.

How To Stop Tooth Pain Fast At Home ?

அடிக்கடி பல் வலி ஏற்படுபவர்களுக்கு பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும்.

நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். மேலும் பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

நம் முன்னோர்கள் கண்டங்கத்திரி செடியின் பழங்களை பறித்து வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி, அதனை மருந்து குழம்பில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த பழம் நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

மேலும், நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக வீரியமாக கண்டங்கத்திரி செயல்படகூடியது.

Also Read: Home Remedy For Gas Trouble : வாயுக்கோளாறுகளை சரி செய்யும் அதிசயப் பிண்ணாக்குக் கீரை..!

உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பதால், சிலருக்கு சிறுநீர் வெளியேறாமல், கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டிருக்கும்.

எனவே, உடல் உஷ்ணம் அதிகம் இருபவர்கள் கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து காலையில் குடித்துவந்தால் சிறுநீர் எரிச்சல் இல்லாமல் தாராளமாக வெளியேறும். இதனை மூன்று நாட்கள் எடுத்தால் சிறந்த தீர்வினை அடையலாம்.

இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.

ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவளைத் தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் குணமாகும்.

இப்படி ஏரளமான நன்மைகளை கொண்டது இந்த கண்டங்கத்திரி செடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *