இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Home Remedies For Gastric: ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

Home Remedies For Gastric: ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். ஓமமானது பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.

daily health tips

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுக்கும்.

அதுமட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை செய்கின்றன.

செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும்.

இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள்.

ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்துவிடுவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமும், பலமும் பெறும்.

ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

வாத உடல் கொண்டவர்கள் ஓமத்தை அன்றாடம் சாப்பிட ஆயுர்வேதம் கூறுகிறது.

மேலும் கப உடல் கொண்டவர்களும், ஓமத்தை சாப்பிடலாம். ஆனால் பித்த உடல் கொண்டவர்கள், ஓமத்தை தவிர்க்க வேண்டும்.

Home Remedies For Gastric

Home Remedies For Gastric: ஓம நீர் தயாரிப்பது எப்படி?

ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும்.

அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம்.

பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை குறையும்.

Also Read: கடலை மிட்டாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா..?

ஒருவருக்கு அசிடிட்டியானது சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக கார உணவை உண்பது போன்றவற்றால் ஏற்படுவதாகும்.

எனவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.

சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் தான் இது.

அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி தொல்லையிலிருந்து விடுபட்டு விடலாம்.