Skip to content
Monday, June 5, 2023
Latest:
  • BiCupidApp.com Offers a mobile phone Dating feel for Bisexual Singles & Couples looking for Romance
  • LoveAndSeek Evaluation 2021
  • Ihre Ex Verstorben und Sie Benötigt Zeit . die besten Wege gehen Programm The Woman I Worry?
  • Master the skill of taking great profile pictures: the greatest manual
  • MissTravel.com: Satisfy Adventure-Loving Singles & Start To See The Community Together

News Tamil Online

செய்திகள் உடனுக்குடன்

    Subscribe  

  • செய்திகள்
  • தொழில்நுட்பம்
  • இயற்கையோடு வாழ்வோம்
  • Music
    • Download Christian Songs
  • விளையாட்டு தொடர்கள்
    • விளையாட்டு செய்திகள்
  • வீடியோ
  • KIDS
    • Learn Videos
    • Art and Craft
    • Drawing
  • சமையல்
Tasty ladoo recipe
சமையல் குறிப்புகள் செய்திகள் பொதுநலம் 

High Protein Foods: பெண்களுக்கு சோர்வடையாமல் வேலை செய்ய  தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டாலே போதும்..!

February 19, 2022April 10, 2023 newstamilonline

High Protein Foods: பெண்களுக்கு சோர்வடையாமல் வேலை செய்ய  தினமும் இந்த 1 லட்டு சாப்பிட்டாலே போதும்..!

பெண்களுக்கு உடலில் இரும்பு போல பலம் கிடைக்க தினமும் இந்த லட்டில் ஒன்று சாப்பிட்டால்  போதும் வலிமையுடையவராக காணப்படுவர்.

 Tasty ladoo recipe

Tasty ladoo recipe:

பெண்கள் மட்டும் தான் இந்த லட்டுவை சாப்பிட வேண்டும் என்று இல்லை  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற கணக்கில் சாப்பிட்டு வரலாம்.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் வராமல் தடுக்க இந்த லட்டு பயனுள்ளதாக அமையும்.

வளரும் குழந்தைகளுக்கு சீரான ஊட்டச்சத்து கிடைக்க மாலை நேரத்தில் இந்த ஒரு லட்டுவை செய்து  கொடுத்தாலே போதும்.

இவ்வளவு சத்து நிறைந்த லட்டுவை நம் வீட்டிலேயே நம் கையாலேயே சுலபமாக செய்வது எப்படி என்பதை  தெரிந்து கொள்வோம்.

செயல்முறை :

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து விட்டு அதில் பிஸ்தா – 100 கிராம், முந்திரி பருப்பு – 100 கிராம், பாதாம் பருப்பு – 100 கிராம், இந்த மூன்று பருப்பு வகைகளையும் பொடியாக உடைத்து போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

இந்த மூன்று பருப்பு வகைகளையும் கட்டாயம் சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட வேண்டும்.

முந்திரிப்பருப்பை கையாலேயே உடைத்து விடலாம். பாதாம் பருப்பையும் பிஸ்தா பருப்பையும் ஒரு கத்தியை வைத்து கொஞ்சம் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

நெய்யில் வறுத்த இந்த மூன்று நட்ஸ் வகைகளை நெய்யில் இருந்து வடித்து எடுத்து ஒரு அகலமான பவுலில் கொட்டி விடுங்கள்.

அடுத்தபடியாக கடாயில் மீதமிருக்கும் நெய்யில் உலர் திராட்சை – 100 கிராம் போட்டு, உப்பி வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து வறுத்து கொள்ள வேண்டும்.

வறுத்த இந்த திராட்சையையும் அகலமான பௌலில் வைத்திருக்கும் பருப்பு வகைகளில் கொட்டி கலந்து விடுங்கள்.

அடுத்தபடியாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் கொட்டைகளை  நீக்கி

அதே கடாயில் மீதமிருக்கும் நெய்யில் பேரிச்சம்பழம்  200 கிராம், அளவு போட்டு 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த பேரிச்சம்பழம் மணக்க மணக்க வதங்கினால் லேசாக மாறிவிடும்.அது சாப்பிடுவதற்கு  எளிதாகவும் இருக்கும்.

இந்த பேரிச்சம் பழத்தை நன்றாக ஆற வைத்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் விழுதாக அரைத்து விடவேண்டாம். ஓரளவுக்கு பேரிச்சம் பழம் அரைபட்டால் போதும்.

அரைத்த இந்த பேரிச்சம் பழத்தையும் வறுத்து வைத்திருக்கும் நட்ஸ் பவுலில் கொட்டி விட்டு.

ஏலக்காய் பொடி கொஞ்சம் தூவி உங்கள் கையில் நெய்யை தடவி இந்த எல்லாப் பொருட்களையும் நன்றாக சப்பாத்தி மாவு போல அழுத்தம் கொடுத்து பிசைந்து , சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்தால் சூப்பரான லட்டு தயார்.

இந்த லட்டுவை ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

Also Read: Immunity Boosting Food in Tamil : உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும் தேநீர்..!

 பிரிட்ஜில்(fridge) வைத்தால் 30 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். உங்கள் கையாலேயே ஆரோக்கியமான இந்த லட்டுவை செய்து நீங்களும் பயன்பெறுங்கள் .

  • ← Spine Surgery: நடக்க இயலாதவர்களை நடக்க செய்யும் முதுகுத்தண்டு பொருத்துதல் சிகிச்சை..!
  • Kitchen Tips: இல்லத்தரசிகளுக்கு உதவும் விதமாக அமையும் சமையல் குறிப்புகள்: →

You May Also Like

Best Food for Diabetes Control

Diabetes Diet: சர்க்கரை நோயை வெண்டைக்காய் எவ்வாறு கட்டுப்படுத்தும்..?

March 20, 2023March 20, 2023 newstamilonline
Cancerous Moles

Skin Cancer: திடீரென உருவாகும் மச்சம் அழகா..! ஆபத்தா..!

February 8, 2023February 8, 2023 tamil news
Onions under the feet-newstamilonline

Healthy Benefits of Onions: வெங்காயத்தை பாதத்துக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்..!

January 23, 2023January 23, 2023 newstamilonline

News

Ancient Monuments in saudi - newstamilonline
கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Historical Monuments: சவுதி அரேபியாவின் ஒரே பிராந்தியத்தில் 1000 பழங்கால நினைவுச்சின்னங்கள்..!

April 1, 2023April 1, 2023 newstamilonline

Historical Monuments: சவுதி அரேபியாவின் ஒரே பிராந்தியத்தில் 1000 பழங்கால நினைவுச்சின்னங்கள்..! அரேபிய வழிபாட்டு முறை ஸ்டோன்ஹெஞ்சை விட பழமையான 1000 நினைவுச்சின்னங்களை கட்டியிருக்கலாம். வடமேற்கு சவுதி

Rule of Law
Interesting Facts Tamil News உலகம் சுவாரஸ்யமான உண்மைகள் செய்திகள் பொதுநலம் வெளிநாடு 

Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?

February 11, 2023February 11, 2023 tamil news
Antarctica Glacier
Tamil News Tamil Technology News அறிவியல் இயற்கையோடு வாழ்வோம் கண்டுபிடிப்பு செய்திகள் தொழில்நுட்பம் வெளிநாடு 

Effect of Climate Change: அண்டார்டிகாவில் பத்து ஆண்டு விரிசல்களுக்கு பின் தற்போது ஒரு நகரம் அளவிலான பெரிய பனிப்பாறை உடைந்தது..!

February 11, 2023February 11, 2023 tamil news
Gamma Rays
News Tamil Online Tamil Technology News அறிவியல் கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Gamma Rays: காணாமல் போன சீசியம்-137 கேப்சூல்..! ஆஸ்திரேலியாவில் கதிர்வீச்சு எச்சரிக்கை..!

February 8, 2023February 8, 2023 tamil news
mars planet
Interesting Facts News Tamil Online Tamil Technology News அறிவியல் கண்டுபிடிப்பு செய்திகள் வெளிநாடு 

Mars Planet: கரடி பொம்மை வடிவ செவ்வாய் கிரக பாறைகளை நாசா உளவு பார்க்கிறது..!

February 3, 2023February 3, 2023 tamil news
effects of water pollution
News Tamil Online Tamil News அறிவியல் இயற்கையோடு வாழ்வோம் செய்திகள் வெளிநாடு 

Effects of Water Pollution: அசுத்தமான தண்ணீரை விட நதி மீனில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன..!

February 2, 2023February 2, 2023 tamil news
Longest Highway in the World
Interesting Facts சுற்றுலா செய்திகள் வெளிநாடு 

Bus Roadways: கொல்கத்தாவில் இருந்து லண்டன் செல்லும் ‘உலகின் மிக நீளமான பேருந்து பாதை’…!

January 30, 2023January 30, 2023 tamil news

மேலும் அறிய

  • தொழில்நுட்பம்
  • இயற்கை
  • சுற்றுலா
  • யோகா
  • சினிமா

மேலும் அறிய

  • மீம்ஸ்
  • வர்த்தகம்
  • சுற்றுலா
  • யோகா
  • சினிமா
Copyright © 2023 News Tamil Online. All rights reserved.
Theme: ColorMag by ThemeGrill. Powered by WordPress.

Please click the above button to subscribe my channel