Heart Diseases: கடும் குளிர்..!! அதிகரிக்கும் மாரடைப்பு..!! இறப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்..!!
Heart Diseases: கடும் குளிர்..!! அதிகரிக்கும் மாரடைப்பு..!! இறப்பு வீதம் அதிகரிக்கும் அபாயம்..!!
நம் இதயத்தை பாதுகாக்க 6 வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.
மிக அதிகமான குளிர், இதயத்திற்கு ஆபத்தை அழிக்கும் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Heart Diseases:
சமீப காலமாக அதிக அளவிலான குளிர் அலையால் (cold wave) பல பேர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களால் இறந்து போவதைப் பற்றி கேள்விப்படுகிறோம்.
அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த கடும் குளிரால் ஏற்படும் மாரடைப்பு போன்ற ஆபத்துகளிலிருந்து நம்மை எப்படி பாதுகாப்பது என்று தெரிந்து கொள்வோம்.
குளிரால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் அதனால் உண்டாகும் இறப்பு விகிதம் தற்போது இந்தியாவில் மிகவும் அதிகரித்துள்ளது.
இத்தகைய ஆபத்தின் அளவைக் குறைக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நம் அன்றாட வாழ்வில் உறுதியாக சில மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும்.
உங்களின் இதயத்தை ஆபத்திலிருந்து தடுத்து, பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தேவையான 6 முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் :
ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் குளிர் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதிகமான குளிர் இதயத்துடிப்பின் வேகத்தை மிகவும் அதிகரிக்கும்.
சில வாரங்களுக்கு முன் திடீரென வெப்பநிலையின் அளவு மிகவும் குறைந்ததால் இந்தியாவில் திடீர் மாரடைப்பு போன்றவற்றால் அதிக கார்டியாக் மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஆகவே ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
ரத்தக் குழாய்களின் சுருக்கம்:
அதிக அளவிலான குளிரின் காரணமாக ஏற்படும் குளிர் அலைகள் நம் இதயத்தை பலவீனப்படுத்தும். இந்த குளிரானது நம்முடைய ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்யும்.
இப்படி ரத்தக் குழாய்கள் சுருங்கும்போது ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இதனால் நம்முடைய உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் என்பது கார்டியாக் பிரச்சினைகளைத் தூண்டி கார்டியாக் அரெஸ்ட், பக்க வாதம் போன்ற பிரச்சினைகளைத் தூண்டும் தன்மை வாய்ந்தது.

High Blood Pressure:
ரத்தம் உறைதல் பிரச்சினை :
சுற்றுச்சூழலின் வெப்பநிலை குறைவதால் நம்முடைய உடலின் வெப்பநிலையும் குறையும்.
இப்படி திடீரென உடலின் வெப்பநிலை குறையும்போது ரத்தத் தட்டுக்களில் உள்ள ஃபைபரினோஜென் என்னும் புரதத்தின் அளவு அதிகரிக்கும்.
ரத்தத் தட்டுக்களில் ஃபைபரினோஜென் அளவு அதிகரிப்பதால் ரத்தம் உறைதல் பிரச்சினை உண்டாகிறது.
குறிப்பாக இவை கல்லீரல், இதயம் போன்ற பகுதிகளில் ஃபைபரினை அதிகரிக்கச் செய்து ரத்தம் உறைதல் பிரச்சினையை கடுமையாக்குகின்றன.
குளிர்காலத்தில் இதயத்தை பாதுகாக்கும் முறை?
கடுமையான குளிரில் இருந்து நம்முடைய இதயத்தை பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
உங்கள் உடலை கதகதப்பாக வைத்திருக்க வேண்டும் .
குளிரால் உடலின் வெப்பநிலை மிகவும் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
கம்பளி அல்லது உல்லன் ஆடைகளை அணிவது அவசியம்,
ஆடைக்கு மேல் எப்போதும் ஸ்வெட்டர் அணிந்திருப்பது உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும்.
மேலும் காதுகளில் குளிர் காற்று உள்ளே நுழையாமல் மூடி வைக்க வேண்டும். வீட்டுக்குள் இருக்கும்போதும் கால்களில் சாக்ஸ் அணிந்திருக்க வேண்டும்.

How To Prevent Heart Attack?
ஆரோக்கியமான உணவுமுறை:
உடலை கதகதப்பாக வைத்திருக்க பயன்படும் உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.
நிறைய காய்கறிகள் சேர்த்த சூப் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள், பொரித்த மற்றும் வறுத்த உணவுகள், அதிகமாக சர்க்கரை உள்ள உணவுகளை முழுவதுமாக நீக்கவேண்டும்.
இது உடலின் ஆற்றலை குறைக்கும். அதிக சோர்வை ஏற்படுத்தும்.
குளிர்காலம் என்றாலே காலையில் வேகமாக எழுந்திருக்க கவலைப்படுவோம். ஆனால் அந்த சோம்பலே உடலின் ரத்த ஓட்டத்தை மெதுவாக மாற்றும்.
மேலும் ரத்தக் குழாய்களைச் சுருக்கமடையச் செய்யும். அதனால்தான் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் அவசியம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் .
கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சில நிமிடங்கள் யோகா செய்யலாம்.
சில கார்டியோ பயிற்சிகள், கொஞ்சம் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் என சுலபமான உடற்பயிற்சி செய்யலாம்.

Medical Facts:
வைட்டமின் டி பற்றாக்குறை:
வைட்டமின் டி பற்றாக்குறை அதிகரிப்பதால் கார்டியாக் அரெஸ்ட், மாரடைப்பு உள்ளிட்டடவை அதிகமாக ஏற்படும். வைட்டமின் டி குறைபாட்டினால் ரத்தம் உறைதல் பிரச்சினை அதிகரித்து இந்த ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
அதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். சூரிய வெப்பத்தின் மூலம் வைட்டமின் டி-யை பெற வேண்டும்.
அதனுடன் வைட்டமின் டி நிறைந்த முட்டை மஞ்சள் கரு, மீன் வகைகள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு போதிய அளவு வைட்டமின் சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ளவும் .
ரத்த அழுத்தமும் ரத்த சர்க்கரையும் :
ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு இவை இரண்டையும் சரியான அளவில் கடைபிடிக்க வேண்டும்.
இவை இரண்டுமே திடீரென ஹைபர் டென்ஷனை அதிகரிக்கும். ஹைபர் டென்ஷன் இதய நோய்களுக்கான நுழைவாயில் போன்றது என்பதை நாம் அறிவோம் .
எனவே தினமும் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்த அளவுகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
Also Read: pfizer Australia Vaccine: ஆஸ்திரேலியாவில் இளைஞர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டது (கோவிட்)
புகையும் மதுவும்:
புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது இரண்டுமே உங்களுடைய உடலை குளிர் காலத்தில் கதகதப்பாக வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் இரண்டுமே மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்கும்.
முதலில் இரண்டு பழக்கத்தையும் கைவிடுவது நல்லது . குறிப்பாக குளிர்காலத்தில் அருந்தவே கூடாது.