News Tamil OnlineTamil Technology Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Benefits of Tomatoes: தக்காளி அதிகம் எடுத்துக்கொண்டால் இவ்வளவு ஆபத்தா! தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Tomatoes: நாம் உண்ணும் காய்கறிகளில் சில காய்கறிகள், அனைவரும் விரும்பும் சுவையான காய்கறியாக இருக்கும். அதில் ஒன்று தக்காளி.

சோலனேசே(Solanaceae) குடும்பத்தை சேர்ந்த இந்த பழத்தை விரும்பாதவர்கள் எண்ணிக்கை குறைவே.

Health Benefits of Tomatoes

What vitamins are in tomatoes?

தக்காளி மாவுச்சத்து இல்லாதது மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

தக்காளியில் குறைந்த கலோரிகள் உள்ளன, இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இந்த பழத்தில் கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும் வைட்டமின் A, வைட்டமின் K  சத்துகள் அதிக  அளவில் உள்ளது.

Benefits of Tomatoes:

மேலும் தினமும்  தக்காளி சாறு குடிப்பதால் கண்கள் பாதுகாப்பாக இருக்கும். மாலைக்கண் நோய் வராமல் இருக்க இது உதவுகிறது.

நம் உணவில் தக்காளியினை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகமாகாமல் ஒரே அளவாக இருக்கும். மேலும், உடல் வறட்சியடையாமல் இருக்க இது உதவுகிறது.

ஆனால் உணவிலிருந்து, அழகு வரை அனைத்திற்கும் பயன்படும் இந்த பழத்தில் நிறைய ஆபத்துக்களும் உள்ளது.

தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பாதிப்பை அளிக்கிறது.

இந்த தக்காளிகள் (Tomato) நம் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் விதமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக தக்காளியை சாப்பிட்டால் தீங்கு ஏற்படும் என்றும் மற்றும் உடலை பல வழிகளில் சேதப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், தக்காளியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை விரிவாக அறியலாம்.

ஏற்படும் நோய்கள்:

நெஞ்செரிச்சல்: தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் (malic and citric) அமிலங்கள் உள்ளன. செரிமானம் தொடங்கும்போது தக்காளியானது  இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும்.

இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும்.

குடல் வீக்கம்: தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் நம் வயிறு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும்.

“உலகளவில் குடல் இயக்கங்களை பாதிக்கும் முக்கிய உணவாக தக்காளி உள்ளது என கூறப்படுகிறது”.

அலர்ஜிகள்:

தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன்(Histamine) என்ற சேர்மம் உடலில் பலவித அலர்ஜிகளை ஏற்படுத்துகிறது.

நம் சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை தெரிந்தால் உடனடியாக தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.

சிறுநீரக கற்கள்: இந்த பழத்தில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று.

இத்தன்மை கொண்ட சத்துக்கள் நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும், இது மிகவும் ஆபத்தான ஒன்று.

மூட்டு வலி:

தக்காளியில் காரப் பொருட்கள் காணப்படுகின்றன, இது மூட்டு வலியை அதிகரிக்கும். இதனுடன், தக்காளியில் காணப்படும் சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்குகிறது, இது மூட்டு வலி மற்றும் வீக்க சிக்கல்களை அதிகரிக்கிறது.

மேலும், தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

Also Read: High Fiber Vegetables: நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்..!

ஏனென்றால், தக்காளியை  சமைக்கும் போது, தக்காளியில் உள்ள தண்ணீர் குறைந்து லைகோபீன் அளவு அதிகரிக்கிறது.

எனவே, உணவோ மருந்தோ அளவுக்கு மீறியது என்றால் எல்லாம் ஆபத்தாகிவிடும் என்பதை அறிந்து செயல்படுவோம்.