இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Red Chilli: ஆயுள் அதிகரிக்கும் சிவப்பு மிளகாய்..!

Red Chilli : ஆயுள் அதிகரிக்கும் சிவப்பு மிளகாய்..!

ஆயுள் அதிகரிக்கும் வரமிளகாய் என்று சொல்ல கூடிய சிவப்பு மிளகாய் உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

Red Chilli Health Benefits

Red Chilli :

சிவப்பு மிளகாய், காரமான குணங்களை கொண்டிருக்க கூடியது. அரைத்த மசாலாக்கள் எல்லாவற்றிலுமே சிவப்பு மிளகாய்தான் பயன்படுத்துகிறோம்.

அசைவ உணவில் சுவை தூக்கியில் சிவப்பு மிளகாய்க்கும் பங்குண்டு.மிளகாய் சாப்பிடுவதன் மூலம் இதய நோய், புற்றுநோய் நீண்ட ஆயுள் போன்றவற்றை அளிக்க கூடியது என்று இது குறித்த முதற்கட்ட ஆராய்ச்சி சொல்கிறது.

சிவப்பு மிளகாய் நன்மைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்கா, இத்தாலி, சீனா, ஈரான் ஆகிய நான்கு நாடுகளில் நடத்தப்பட்ட பெரிய ஆய்வுகளில் ஐந்து இலட்சத்து எழுபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆய்வில் அவர்களது உடல்நலம் மற்றும் உணவு பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

மிளகாய் சாப்பிட்ட மக்கள் இதயம் தொடர்பான குறைபாடிலிருந்து இறப்பு விகிதம் 26 % குறைவாகவே பெற்றிருந்தார்கள்.

புற்றுநோய் இறப்பில் 23% குறைவாகவும், மற்ற அனைத்து காரணங்களிலும் 25 % குறைவான குறைபாட்டை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவர்கள் எடுத்துகொண்ட உணவு முறைகள் மாறுபட்டிருந்தாலும் நான்கு நாடுகளிலும் இது ஏறத்தாழ ஒரேமாதிரியாக தான் இருந்தது.

காரணம்:

மிளகாயின் நறுமணத்துக்கு காரணம் அதில் இருக்கும் கேப்சைசின் என்னும் வேதிப்பொருள். இதுதான் மிளகாயை நன்மை செய்யும் குணத்துக்கு உதவுகிறது.

இது அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, உடல் பருமன் எதிர்ப்பு குணங்களையும் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.

காப்சைசின் இத்தகைய நன்மைகளை கொண்டிருந்தாலும் இது குறித்த நம்பிக்கையான ஆய்வு மேலும் தேவை.

சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாயில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6 , வைட்டமின் இ போன்றவை உள்ளது. இது ரத்த அழுத்தத்துக்கு பயனளிக்கும்.

இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த நாளங்களை தளர்வாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து நோய்களை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்கிறது.

ஆரஞ்சு பழத்தை காட்டிலும் இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஆன் டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க உதவுகிறது.

சிவப்பு மிளகாயில் இருக்கும் காப்சைசின் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதால் உடல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.

​வீக்கத்தை குறைக்க:

சருமத்தில் வீக்கம் வலியை குறைக்க இது உதவுகிறது. தோல் தடிப்பு, கீல் வாதம், தொண்டைப்புண் போன்றவற்றால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இது உதவுகிறது.

இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதால் பொதுவான பிரச்சனைகள் பலவற்றுக்கும் சிகிச்சையளிக்க இது பயன்படுத்தப்படுகிறது.

மிளகாயில் இருக்கும் காப்சைசின் வலி நீக்க பயன்படுத்தப்படும் மருந்துபொருள்களில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

red chilli benefits-newstamilonline

இதய நோய்களை குறைக்க :

உலகெங்கும் உள்ள மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து தான் வருகிறது. இது பொதுவான நிலை. இதய நோயால் மரணமடைபவர்களும் குறிப்பிட்ட சதவீதத்தினர் உண்டு.

சிவப்பு மிளகாய் இதய நோய்கள் மற்றும் இதன் அபாயங்களை குறைக்க உதவும். சிவப்பு மிளகாயில் உள்ள கலவைகள் எல் டி எல் மற்றும் ட்ரைகிளிசரைட்களை குறைக்க உதவும்.

தமனிகள் ரத்த நாளங்களில் இருக்கும் அடைப்பை நீக்க இவை பயன்படுகிறது. சுகாதார நன்மைகளை அளிக்கும் வகையில் மிளகாய் அளவு மற்றும் வகைகள் குறித்து ஆய்வு தெரிவிக்கவில்லை.

மிளகாய் உணவு வழிகாட்டுதல்களை வழங்க இன்னும் கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது.

​நோய் எதிர்ப்பு சக்தி:

சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் இது நோய்களுக்கு எதிரான சக்தியை மேம்படுத்துகிறது.

தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்கவும் இது உதவுகிறது.

உடலில் இருக்கும் நச்சுக்களை குறைப்பதால் உடல் வலுவாக இருப்பதோடு நச்சுத்தன்மை குறைந்து உடல் எடையும் கட்டுக்குள் இருக்கிறது.

காய்ச்சல், சளி காலங்களில் இதை குறைக்க மிளகாயில் இருக்கும் காப்சைசின் உதவுகிறது. சூப் வகைகளில் காரத்துக்கு மிளகு போன்று மிளகாயையும் சேர்க்கலாம்.

மிளகாய் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. புற்று உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது. நீண்ட காலம் ஆயுளை வளர்க்கிறது என்று சொன்னாலும் இது குறித்த ஆய்வுகள் மேலும் தேவைப்படுகிறது. ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது.

அளவோடு சேர்ப்பது நல்லது:

நல்ல குணநலன்களை இது கொண்டிருந்தாலும் இது இரப்பையில் எரிச்சலை உண்டாக்கும்.

குமட்டல், வயிற்றுப்போக்கு, வாந்தி, போன்றவற்றையும் உண்டாக்கும். அதனால் கவனமாக அளவாக உணவில் சேர்ப்பது நல்லது.

Also Read: Boiled egg health benefits: 14 நாட்கள் தொடர்ந்து வேக வைத்த முட்டை சாப்பிட்டால்…

சிவப்பு மிளகாய் நல்லது அதே நேரம் அதை செயற்கை கலர் எல்லாம் சேர்த்து மிளகாய்த்தூளாக பயன்படுத்தும் போது இது மிளகாயை போன்ற நன்மையான குணங்களை முழுவதும் அளிக்காது என்பதும் கவனிக்க வேண்டும்.