Tamil Newsஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Grey Hair: இளநரை தோன்றுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!

Grey Hair: இளநரை தோன்றுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!

இன்றைக்குப் பலருக்கும் தலைமுடி பிரச்னைதான் தலையாய பிரச்னை. அதோடு `இளநரை’ என்பது பரவலாகிப் பலரையும் பாடாகப் படுத்திவருகிறது.

Home Remedies for Grey Hair

Grey Hair:

குறிப்பாக, இது பெண்களின் பிரச்னை. அதேபோல் இளநரை ஏற்படுவதால் ஆண், பெண் இரு பாலினருமே பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதற்காக என்னென்னவோ சிகிச்சைகளைச் செய்து பார்த்தாலும், பலன் மட்டும் கிடைப்பதில்லை.

அழகான கூந்தலுக்கு ஆசைப்படுவது இருக்கட்டும். அதற்கு முதலில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்.

நாம் மிகச் சாதாரணமாக அலட்சியப்படுத்தும் பழைய சாதத்தில்கூட தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

எனவே,ஊட்டச்சத்து விஷயத்தில் மட்டும் அலட்சியம் வேண்டாம். அதேபோல் கூந்தலைச் சரியாகப் பராமரிக்கவேண்டியதும் அவசியம்.

அதற்கு வாரத்துக்கு இரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தலைமுடியில் அழுக்கு, சிக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

எண்ணெய்க் குளியலால் மினுமினுப்பான கேசம் மட்டுமல்ல, பொலிவான சருமத்தையும் பெறலாம்.

இன்றைக்குப் பலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை இளநரை. இளநரை உண்டாவதற்கு பரம்பரை காரணமும் இருக்கலாம்.

பிற காரணங்களாக ஊட்டச்சத்துக் குறைபாடு, தண்ணீரில் கலந்துள்ள ரசாயனங்கள், காரத்தன்மையுள்ள ஷாம்பூக்கள், முடியை கலரிங் பண்ணுவது, ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணுவது, அயர்ன் பண்ணுவது போன்றவற்றைச் சொல்லலாம்.

முதலில் இளநரை பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்.

அதாவது, ஐந்து வயது குழந்தைக்கு இளநரை வந்தால், முடியின் வேர்ப்பகுதி நரைத்துவிட்டால், மீண்டும் அது கறுப்பு நிறமாக மாறுவதற்கு வாய்ப்பில்லை.

விட்டமின் கே சத்து இல்லாமல் இருந்தால் இளநரை வரலாம்.

இந்த சத்தைப் பெறத்தான் பலரும் கறிவேப்பிலையை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளச் சொல்வார்கள்.

தைராய்டு பிரச்னை, ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வாலும் இளநரை வரலாம்.

இதனை மருத்துவ ரீதியாக சரி செய்து விடலாம்.

அளவுக்கு அதிகமாக டென்ஷன் ஆனால் நிறமியின் செல்கள் பாதிக்கப்பட்டு இளநரை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

நிறத்துக்குக் காரணமான மெலனின் (Melanin) பிக்மென்ட்டை கூட்டவோ, குறைக்கவோ முடியாது.


குறிப்பாக மரபு ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்ய முடியாது.

நரை மேற்கொண்டு பரவாமல் வேண்டுமானால் தடுக்கலாமே தவிர, ஏற்கெனவே வந்த நரையை மாற்ற முடியாது.

இளநரைக்கு மருதாணி பூசுவது இயற்கை சாய முறை. வெள்ளை நிற முடியின் நிறத்தை மாற்றக்கூடியது மருதாணி.

Hair Tips:

மருதாணிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உள்ளன.

எனவே, மருதாணியுடன் கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம்.

அந்தக் கலவையை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, தலையில் பூசி வரலாம்.

ஒன்றிரண்டு இளநரை உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு, மூன்று நாள்கள் தலையில் தேய்த்து, நன்றாக ஊறவைத்துக் குளித்தால் இளநரையைத் தள்ளிப்போடலாம்.

ஆனால், நரை முழுமையாக வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரலாம்.

Also Read: Hibiscus டீ குடிச்சா உடம்புக்கு இவ்வளவு நன்மைகளா..?

இளநரை வந்தபின் அவதிப்படுவதைவிட, அதை வரவிடாமல் தடுப்பது எளிது.

அதற்காக ரொம்பவே மெனக்கெட வேண்டியதில்லை. உங்கள் சாப்பாட்டில் அக்கறை காட்டினாலே போதும்.