Green Peas: பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..!
Green Peas: பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்..!
அடர்ந்த பச்சை நிற காய்கறிகள், கீரைகள் எல்லாமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை. அப்படி ஒன்று பச்சை பட்டாணி.

Green Peas Benefits:
மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று.
பச்சை பட்டாணியை எதனோடு சேர்த்தாலும் அதன் சுவையே அலாதியானதுதான்.
மஞ்சள் பட்டாணி, கருப்பு பட்டாணி, ஊதா பட்டாணியோடு பச்சை பட்டாணியும் உண்டு.
பச்சை பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது.
இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
குடல் செரிமானத்தை மேம்படுத்தும்
பட்டாணியில் இருக்கும் கேலக்டோஸ் ஒலிகோசாக்கரைடுகள் குடல் செரிமானத்துக்கு உதவுகிறது.
பட்டாணியில் இருக்கு ஃபைபர் செரிமான பாதையில் உணவை இயக்க செய்கிறது. செரிமானம் சீராக இருக்கவும் நச்சுப்பொருள்கள் அகற்றவும் செய்கிறது.
நீரிழிவை கட்டுப்படுத்தும்
பச்சைப்பட்டாணி நார்ச்சத்து மற்றும் புரத சத்தை உள்ளடக்கியுள்ளது. மாவுச்சத்து செரிமானத்தை சீராக்க உதவுகிறது.
இது கார்போஹைட்ரேட்டுகளின் முறிவை மெதுவாக்க செய்கிறது. அதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
இதயம் காக்கும்
பட்டாணியில் இருக்கும் ஒமேகா -3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்ள் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வீக்கத்தை குறைக்க செய்யும்.
பட்டாணியில் இருக்கும் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற சத்துகள் உங்கள் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும் குணங்களை கொண்டிருக்கிறது.

Green Peas :
கண்களுக்கு ஆரோக்கியம்
பட்டாணியில் கரோட்டினாய்டு நிறமி லுடின் ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு உதவுகிறது.இது கண்புரை மற்றும் மாஸ்குலர் சிதைவு, பார்வை இழப்பு போன்ற நோய்களின் அபாயத்திலிருந்து குறைக்க செய்யும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடிய வைட்டமின்சி, வைட்டமின் இ, துத்தநாகம் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரமாக பட்டாணி உள்ளது.
வைட்டமின்கள் ஏ, பி, குமெஸ்ட்ரால் போன்ற பிற ஊட்டச்சத்துகள் வீக்கத்தை குறைக்க செய்கிறது.
எடை இழப்பு ஊக்குவிக்கும்
சில உணவுகள் இயற்கையாகவே எடை இழப்பை ஊக்குவிக்க கூடியவை. பச்சை பட்டாணியில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கிறது.
இது குறைந்த கலோரி கொண்ட உணவாகவும் அதிக புரதம் நிறைந்த உணவாகவும் இருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது.
பசியை தீர்க்கும்
இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது.
பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது.
சருமமும் இளமையும் தரக்கூடியது
பச்சை பட்டாணியில் இருக்கும் மெக்னீசியம் சருமத்தை சுருக்கங்கள் விழாமல் பாதுகாப்பதோடு வயதான தோற்றத்தை தள்ளி வைக்க செய்கிறது.
இது வைட்டமின் சி நிறைந்த மூலமாகும். இது கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானதும் கூட.
கொலாஜன் நிறைவாக இருந்தால் சருமம் உறுதியாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க செய்கிறது.
பச்சை பட்டாணியில் இருக்கும் வைட்டமின் சி ஆனது ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் சேதத்திலிருந்து சருமத்தை காக்க செய்கிறது.
Also Read: Easy Weight Loss Tips: உங்கள் தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க என்ன செய்யலாம்?
வயதான அறிகுறி தவிர்க்க வேண்டும் என்றால் பச்சை பட்டாணியை அதிகம் உணவில் சேர்க்கவும்.