Gaia Telescope Discoveries: 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி..!

Gaia Telescope Discoveries: 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி..!

எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்காக வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், தலையில் இருக்கும் மயிர், ஆற்றில் இருக்கும் மணல். இவற்றையெல்லாம் எடுத்துக்காட்டாக கூறுவது வழக்கம்.

Gaia Telescope Discoveries

Gaia Telescope Discoveries:

ஆனால், எண்ண முடியாதவை என்று கருதப்பட்ட நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன?

விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

பல அதி நவீன தொலைநோக்கிகள் நட்சத்திரங்களைப் பட்டியலிடும் இது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் கயா டெலஸ்கோப் என்ற தொலைநோக்கியின் உதவியோடு தயாரித்து எண்ணப்படும் இத்தகைய ஒரு நட்சத்திரப் பட்டியலில் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன.

விண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை.

நம்முடைய சூரியக் குடும்பத்தில் கோள்கள் ஓர் ஒழுங்கில் சூரியனை சுற்றி வருவதைப் போல, நட்சத்திரங்களும் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன.

ஒரு கூட்டத்தின் மையத்தில் உள்ள பேரடர் கருந்துளையை அந்தக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன.

நம்முடைய சூரியனும் அப்படி ஒரு நட்சத்திரம்தான். நம்முடைய சூரியன் இடம் பெற்றிருக்கிற நம்முடைய நட்சத்திரக் கூட்டத்தின் பெயர்தான் பால்வழி மண்டலம்.

தற்போது கயா தொலைநோக்கி எண்ணி அடையாளப்படுத்தியிருக்கிற 180 கோடி விண்மீன்களும் நம்முடைய நட்சத்திரக் கூட்டமான பால்வழி மண்டலத்தில் இருப்பவைதான்.

இந்த கயா தொலைநோக்கி வழக்கமான தொலைநோக்கியைப் போல புவியில் எதோ ஒரு இடத்தில் நிறுவப்பட்டதல்ல.

இது 2013-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட ஒரு விண்கலம்.

இந்த கயா தொலைநோக்கி விண்கலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு வேலை செய்யும்.

இந்த தொலைநோக்கி விண்கலத்தின் நோக்கமே நம்முடைய பேரண்டத்தை, அதிலும் குறிப்பாக நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான்.

கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வருணிக்கப்படும் இந்த தொலைநோக்கி தினமும் விண்வெளி பற்றி புதிது புதிதாக நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களைக் கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருக்கிறது.

இது தரும் தரவுகளை வைத்து தினமும் சுமார் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளாவது வெளிவருகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் இதன் வேகம் அபரிமிதமானது.

Also Read: New Inventions for Environment: இனி நிலம் தேவையில்லை..! காற்று மற்றும் மின்சாரத்திலிருந்து உணவை உருவாக்க முடியும்..!

விண்வெளி தொலைநோக்கிகளில் மிகவும் புகழ்பெற்றதான ஹபுள் தொலைநோக்கிகூட இந்த அளவுக்கு வேகத்தில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவில்லை என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *