Fresh Air: வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கவும்..! இதனால் நோய்களை விரட்டலாம்..!

Fresh Air: வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்கவும்..! இதனால் நோய்களை விரட்டலாம்..!

வீட்டில் ஆங்காங்கே சில அழகுசாதன பொருட்களை இடம்பெறச் செய்தால் ஒரே இடத்தில் அமரந்து வேலை செய்வதால் ஏற்படும் மனச் சோர்வையும், களைப்பையும்போக்கலாம்.

Fresh Air - newstamilonline

சில அழகியல் வேலைப்பாடுகள் மனச்சோர்வை போக்கி, நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் என பல்வேறு மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் வைக்கும் பானை மற்றும் செடியை வைப்பதற்கும் சில வழிமுறைகள் உள்ளன.

பானை மற்றும் செடி :

உங்கள் வீட்டில் சிறு மாற்றங்களை, அதாவது அழகு வேலைப்பாடுகளை செய்யத் திட்டமிட்டு பானை மற்றும் செடியை வைக்க விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அவற்றை எங்கு வைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

வீட்டின் உற்புறத்தில் வைக்க திட்டமிட்டால், பானையின் அழகு வேலைப்பாடுகள், அவை வைக்கும் இடத்தில் இருக்கும் சுவரின் கலர் மற்றும் டெக்கரேஷனை கவனிக்க வேண்டும்.

ஒரு தீம் – ஐ மனதில் நினைத்து அந்த தீம்-க்கு ஏற்றார்போல் வேலைப்பாடுகள் கொண்ட பானை மற்றும் செடியை தேர்தெடுக்க வேண்டும்.

செடியின் அமைப்பு :

வீட்டின் உற்புறத்துக்கு தேவையான செடி என்பது உங்களின் தேவையைப் பொறுத்தது.

விருந்தினர்களை வரவேற்க வைக்கப்படும் செடி, அதனை ஹாலில் வைக்க வேண்டும்.

செடிகளை பார்த்து தியானம் செய்வதற்காக செடி என்றால், நீங்கள் அன்றாடம் தியானம் செய்யும் பகுதியில் அந்த செடி இருப்பதற்கு தேவையான அமைப்பை உருவாக்க வேண்டும்.

மிகவும் பிடித்த செடி, என்றால் உங்கள் டேபிளுக்கு பக்கத்தில் அல்லது படுக்கைக்கு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

முக்கிய மற்றும் வளைவுகளை அலங்கரிக்க, நீங்கள் அதிக பச்சை நிறமுள்ள தாவரங்களை தேர்வு செய்யலாம்.

ஆம்பல் செடிகளையும் அலமாரிகள் மற்றும் ஸ்டாண்டுகளில் வைக்கலாம்.

பால்கனிகள், வராண்டாக்கள், மொட்டை மாடிகள், ஆகியவற்றை அலங்கரிக்க அவை பொருத்தமானவை.

Fresh Air:

வீட்டிற்குள் வளர்க்கும் செடி, வீட்டிற்கு வெளிப்புறத்தில் வளர்க்கும் செடி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.

போதுமான தண்ணீர், சூரிய ஒளி, வளருவதற்கு தேவையான இடம் ஆகியவை இருந்தால் செடிகளுக்கு போதும்.

அடிப்படை தேவைகள் கிடைக்கும்பட்சத்தில் அவற்றுக்கு உட்புறம் வெளிப்புறம் என்ற பாகுபாடு தெரியாது.

செடிகள் வளரும்போது, மலரும்போது, பூக்கள் பூக்கும்போது உங்களுக்குள் அதீத மகிழ்ச்சியை ஏற்படுத்தும், புத்துணர்ச்சி உங்களுக்குள் வெளிப்படும்.

அழுக்கு எண்ணங்கள் விலகி, நல்ல சிந்தனைகள், நினைவுகளும் பூக்கள் பூக்கும் காலங்களில் உங்களை வட்டமடிக்கும்.

Also Read: கோடை காலத்தில் Sugarcane Juice..! குடிப்பதால் என்ன நன்மைகள்..!

செடிகளை வளர்ப்பதால் வீட்டின் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன் ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் தடையின்றி எளிமையான சுவாசத்தைச் சுவாசிக்க உதவி புரியும்.

ஒவ்வொரு செடியும் 97 சதவிகிதம் ஈரத்தன்மையை வெளியிடுவதால், சளி, தொண்டையில் தொற்று, வறட்டு இருமல், வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள் வராது.

அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருந்தால் கூடச் சீக்கிரமே குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *