Foods That Purify Blood: உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்..!
Foods That Purify Blood: உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்..!
பொதுவாக இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உடல் ஆரோக்கியமானது உள்ளது.
ஏனெனில் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கு இரத்தமானதுதான் மிகவும் இன்றியமையாதது. எனவே இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு, உடல் ஆரோக்கியமும் பெறும்.
தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
Red Blood Cells:
செம்பருத்திப் பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கப் வெந்நீரில் 1 ஸ்பூன்
செம்பருத்தி பூவின் பொடியை கலந்து குடித்து வந்தால், நமது உடலின் சோர்வை குறைந்து ரத்தத்தை தூய்மை அடையச் செய்யும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை நறுக்கி, அதில் எலுமிச்சை சாறு விட்டு வெயிலில் வைத்து பிசைந்து சாறு எடுத்து அதனுடன் காய்ச்சி வடிகட்டி நீரில் சர்க்கரை கலந்து குடித்து வர வேண்டும்.
தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கின்ற முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியாகும்.
Also Read: Rule of Law: ஆப்பிரிக்க நாட்டில் சமோசா ஏன் தடை செய்யப்பட்டது?
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படும் புனித துளசி, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
துளசி உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இரத்தம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இருந்து நச்சுகளை அகற்றவும் ஒரு சிறந்த மூலிகையாகும்.
மூலிகை உடலில் இருந்து நச்சுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. தினமும் ஐந்து முதல் ஆறு துளசி இலைகளை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், கூடுதல் நச்சுத்தன்மையைப் பெறுங்கள்.
ஒரு கப் வெந்நீரில் ஆறு முதல் எட்டு துளசி இலைகளை காய்ச்சுவதன் மூலமும் நீங்கள் மூலிகை தேநீர் தயாரிக்கலாம்.