இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Large Intestine Function: குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமா..?

Large Intestine Function: குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமா..?

நம் குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் உணவு நன்றாக செரிக்கப்படும். ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உறிஞ்சப்படும்.

மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும். ஒருவரது குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அதனால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.

Large Intestine Function

ஆகவே ஒருவர் தங்களது குடலை இயற்கை முறையில் சுத்தம் செய்யும் வழிகளை இங்கு தெரிந்துகொள்வோம்.

ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள்.

காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் ஒரு நாளைக்கு 2 தடவை என எடுத்துக் கொண்டால் குடல் சுத்தமாகி புற்றுநோய் வராமல் தடுக்கும்.

Food Health

அவகேடா என்ற வெண்ணெய் பழம் நார்ச்சத்துகள் உள்ளன. இது தண்ணீரை உறிஞ்சி குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் உங்க குடல் சுத்தமாகும். காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுவையான ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம்.

Food Health

ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு கடல் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக குடித்து வயிற்றை லேசாக கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். குடல் சுத்தமாக ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.

ஆவாரம் பூ மாத்திரை வடிவிலும், டீத்தூள் வடிவிலும் கிடைக்கின்றன. இதை கடையில் வாங்கி வந்து கொதிக்கின்ற நீரில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்தால் குடல் சுத்தமாகும்.

Food Health

குடல் சுவரில் ஒட்டியுள்ள சளியை உடைத்து வெளியேற்ற 1/2 டேபிள் ஸ்பூன் மிளகை ஒரு கிளாஸ் தண்ணீரில் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து குடித்து வந்தால் குடல் சுத்தமாக ஆரம்பித்து விடும்.

Also Read: குளிர்காலத்தில் கண்களை பராமரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Large Intestine Function:

கீரை,

முளைகட்டிய பருப்பு வகைகள்,

ஆலிவ்ஸ்,

முட்டைக்கோஸ்,

அஸ்பாரகஸ்,

செலரி,

கடல் காய்கறிகள்,

கொலரார்ட் கீரைகள்,

லீக்ஸ்,

பட்டாணி, மற்றும் சுவிஸ் சார்ட்

போன்ற பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்து வரும் போது உங்க குடல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.