இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!

Flowers Used as Medicine: உடல் நோயை விரட்டும் பூக்கள்..! அறிந்து உண்போம், பயன்பெறுவோம்..!

உங்களை சுற்றி இருக்கும் பூக்களில் எத்தனை சாப்பிடும் படி இருக்கிறது என்று தெரியுமா?

Flowers Used as Medicine

Flowers Used as Medicine:

யாருக்கும் பூக்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை, நாம் அவற்றை அழகுக்காகவும், தலையில் வைக்கவும், பூஜைக்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.

நம்மை பொறுத்தவரை வாழைப்பூ, காலிஃப்ளவர் போன்ற பூக்களை மட்டுமே உணவாக சாப்பிடுகிறோம்.

இதை தவிற இன்னும் சில பூக்கள்(flowers) மருத்துவ பயன் அதிகம் நிறைந்து இருக்கின்றன. அதை பற்றி நாம் அறியலாம் வாருங்கள்!

ரோஜா:

ரோஜாவினை நாம் அழகுக்கு மட்டுமே பயன்படுத்துறோம், ஆனால் அதையும் தாண்டி ரோஜாவுக்குள்(rose) சில மருத்துவ சிறப்புகளும் இருக்கின்றது.

ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது குத்தல், காதுப்புண், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும்.

குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும். ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.

செயல் முறைகள்:

ரோஜா இதழ்களை பிரித்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஆற விடவேண்டும்.

வடிகட்டப்பட்ட நீரில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை(morning), மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.

இது பித்தம் காரணமாக மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் மற்றும் பித்த கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருந்தாக பயன்படும்.

வேப்பம் பூ:

வேப்பம்பூ இது சித்திரை மாதத்தில் அதிகமாக கிடைக்கும். இதை நேரடியாக மரத்தில் இருந்து எடுக்காமல் கீழே பாய் அல்லது மெல்லிய துணி போட்டு கீழே விழும் பூக்களை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி பிறகு வெள்ளைத்துணியில் கட்டி தொங்கவிடலாம்.

சிறுவெள்ளைத்துணியில் கட்டி பானைக்குள் வைத்து அதன் வாயை இறுக கட்டி வைக்கலாம்.

இதை ஒரு வருடம் வரை அப்படியே கட்டிவைக்க வேண்டும்.

ஒரு வருடம் கழித்து பயன்படுத்தும் போது அதன் பித்த தன்மை குறைந்து மருத்துவ குணம் நிறைந்த பூவாக மாறும்.

இதை பொடியாக்கி சாதத்துடன் சாப்பிடலாம். தேனில்(honey) ஊறவைத்து எடுக்கலாம். ரசத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

பரங்கிப்பூ:

பரங்கிப்பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது.

இதில் வைட்டமின் A(Vitimain A) சத்து அதிகம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கண் மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்காமல் தடுக்கலாம்.

பரங்கிப்பூவை தேநீராக்கியும் குடிக்கலாம்.

செம்பருத்தி பூ:

செம்பருத்தி பூ நமக்கு எளிதிலும், அதிகமாகவும் கிடைக்கும் ஒன்றாகும்.

செம்பருத்திப்பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய்(coconut oil) சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடிக்கட்டி, கண்ணாடி பாட்டில்களில் சேகரித்து வைத்துக்கொண்டு, அந்த எண்ணையை தினமும் தலையில் தடவி வந்தால் முடி கறுப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இரத்தப்பெருக்கு அதிகமாக வந்தால் அதை தடுக்க பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை நீக்க செம்பருத்தி பூ இதழின் சாறு உதவும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாக உதவுகிறது.

ஓரிதழ் தாமரை:

இது ஆண்களுக்கு மிகவும் பயனளிக்கும் பூவாக உள்ளது.

ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, போன்ற பிரச்சனைகளிலிருந்து விடைபெற இந்த ஓரிதழ் தாமரை பயனளிக்கும் ஒன்றாக உள்ளது.

திடீரென ஏற்படும் விஷ காய்ச்சலை குணப்படுத்த இந்த தாமரையின் இதழை வைத்து கஷாயம் வைத்து குடித்தால் போதும், காய்ச்சல் பறந்தோடும்.

இது உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

மல்லிகைப் பூ :

பொதுவாக மல்லிகைப் பூவை விரும்பாத பெண்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

இது பெண்களின் கூந்தலை அலங்கரிக்க மட்டும் இருக்கிறது என்று எண்ண வேண்டாம், அதையும் தாண்டி இன்னும் பல நன்மைகள் நிறைந்து இருக்கிறது.

கண்களில் ஏற்படும் பிரச்சனையினை நீக்க மல்லிகைப்பூவின் சாறை கண்ணுக்குள் இரண்டு சொட்டுகள் விட்டால் போதும், நீங்கிவிடும்.

Also Read: Eating Biscuits Good or Bad: பிஸ்கட்டில் ஏன் இத்தனை ஓட்டைகள்? சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா?

மேலும் இது ஹார்மோன்களை நிலைநிறுத்தம் செய்து சீராக வைக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க பூக்களினை நாம் உணவில் எடுத்துக்கொண்டு அதன் பலன் அறிந்து ஆயுள் நீள உண்டு மகிழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *