News Tamil OnlineTamil Newsஅறிவியல்செய்திகள்

Flowers Types: பூமியில் 32,000 வருட பழமையான தாவரம் பூ பூத்த அதிசயம்.!

Flowers Types: பூமியில் 32,000 வருட பழமையான தாவரம் பூ பூத்த அதிசயம்.!

தாவரங்கள் உயிரினங்களை விட வித்தியாசமானவை. ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பதில் தொடங்கி, ஒரே இடத்திலேயே வாழ்ந்து மடியும் தன்மை வாய்ந்தவை என்பதை நாம் அறிவோம்.

உயிரினங்கள் தோன்றும் முன்பே தோன்றிய தாவரங்கள் பூமியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, கார்பன் -டை – ஆக்சைடு அளவை குறைக்க மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

Flowers Types:

மீண்டும் உருவாக்குதல் (Regeneration) என்பது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. விஞ்ஞான ரீதியாக மீண்டும் உருவாக்குதல் என்பது இழந்த அல்லது சேதம் அடைந்த திசுக்கள், உறுப்புகள் அல்லது திறன் உள்ளிட்ட விஷயங்களை மறுபடியும் பெறுவதாகும்.

இது தாவரங்கள், விலங்குகள் மற்றும் சில நுண்ணுயிர்கள் உட்பட பல வடிவங்களில் நடக்கும் இயற்கையான செயல்முறையாகும்.

ஆனால், இதை விஞ்ஞானிகள் சில நேரங்களில் டெஸ்ட் டியூப்களிலும் மேற்கொள்கிறார்கள்.

மீண்டும் உருவாக்குதல் (Regeneration)முறை பெரும்பாலும் விலங்குகள் மற்றும் தாவரங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

உதாரணத்திற்கு பல்லிகளின் வால் துண்டிக்கப்பட்டாலோ அல்லது அவற்றின் கால் துண்டிக்கப்பட்டாலோ, அவை தன்னைத்தானே மீண்டும் உருவாக்கி மீண்டும் வளர்கிறது.

Flowers Types

Can Plants Grow in Artificial Light:

அதேப்போல், பாலூட்டிகளில் கல்லீரல் பாதிக்கப்பட்டால், அதனுடைய செல்கள் மீண்டும் மறுஉருவாக்கம் செய்யப்படும். மேலும், தாவரங்களின் இலைகள் உதிர்ந்தால், மீண்டும் அவை மீண்டும் உருவாக்குதல் மூலம் வளர்கிறது.

இப்படி உயிரினங்களில் ரீஜெனரேஷன் மிகவும் பொதுவானது. இது உயிருள்ள ஒரு ஜீவனில் தோன்றுவது இயல்பானது.

ஆனால், சுமார் 32,000 வருடங்களுக்கு முன்பு பனிக்கட்டிக்குள்ளே புதைக்கப்பட்ட ஒரு விதையில் ரீஜெனெரேஷன் செய்ய வேண்டும் என்றால், அது எவ்வளவு கடினம் என்று சிந்தித்துப் பாருங்கள்.

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ர்டிபிசியால் Regeneration(செயற்கை மீளுருவாக்கம்) மூலம், இப்பொழுது 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையை கொண்டு விஞ்ஞானிகள் மீண்டும் தாவரமாக (32000 year old seeds regenerated) உருவாக்கியுள்ளனர்.

இந்த விதைகள் முற்றிலும் பனியில் உறைந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் சாதாரண பனி இல்லை.

பெர்மாஃபிரோஸ்ட் பனிக்கட்டி அதாவது இது பூமியின் மேலோடு மற்றும் காலநிலை காரணமாக நிரந்தரமாக உறைந்திருக்கும் மண்ணின் ஒரு அடுக்கு ஆகும்.

மேலும், இந்த விதைகள் பூமியின் மேல் தளத்திலிருந்து சுமார் 124 அடி ஆழத்தில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட விதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, இன்ஸ்டிட்யூட் ஆஃப் செல் பயோ பிசிக்ஸில் உள்ள ரஷ்ய விஞ்ஞானிகள், செர்பியாவின் பூர்விக தாவரமான வெள்ளைப் பூக்கள் கொண்ட சைலின் ஸ்டெனோபில்லாவின் விதைகளை கண்டெடுத்தனர்.

சைலீன் ஸ்டெனோஃபில்லா என்பது ஒரு வகை பூக்கும் தாவரமாகும்.

மேலும், இந்த விஞ்ஞானிகள் 124 அடி ஆழத்தில் பனிக்குள் புதைந்திருக்கும் விதைகளை கண்டுபிடித்து வெளியில் எடுத்தனர்.

இந்த விதைகள் 32,000 வருடங்கள் பழமையானது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.

ரீஜெனரேஷன் முறையை பின்பற்றி இந்த விதைகள் 32,000 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் முளைவிட தொடங்கியுள்ளது என்பது ஆச்சரியம்.!.

Regeneration in plants

Regeneration In Plants:

இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது அந்த தாவரம் தான். அவை வெள்ளை பூக்களுடன் இப்பொழுது நன்றாக வளர்ந்து விட்டன.

இது 32,000 வருடங்களுக்கு முன்பே பூமியில் வாழ்ந்த மிகவும் பழைமையான தாவர இனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விதையிலிருந்து பல வகையான சைலின் ஸ்டெனோபில்லா தாவரங்களை உற்பத்தி செய்துள்ளனர்.

இவர்களுடைய சாதனையை தேசிய அறிவியல் அகாடமியில் செல் முறைகளின் மூலம் வெளியிடப்பட்ட ஆய்வில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வெற்றிகரமான ரீஜெனரேஷனை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பழங்கால தாவரத்தின் மரபணுக்களில் புகுத்தி இந்த தாவரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது.

நேஷனல் ஜியோகிராபிக் தகவல் படி, இந்த விதைகள் 124 அடி ஆழத்தில் பனிக்கிடையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பனியால் மூடப்பட்ட விதைகள், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த மாமத் யானைகள், பைசன் மற்றும் கம்பளிப் போர்த்திய காண்டாமிருகங்கள் போன்ற உயிரினங்களின் திசுக்கள் மட்டும், எலும்புகளின் அடுக்குகளால் சூழப்பட்டு இருந்தது என்று கூறியுள்ளனர்.

Also Read: Future Of Artificial Intelligence: ஏலியன் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது நடப்பது என்ன ?

பெர்மாஃபாஸ்டில்(நிரந்தர உறைபனியில்) இருந்து மீட்டெடுக்கப்பட்ட விதைகளின் வயதை கண்டறிய விஞ்ஞானிகள் வழக்கம் போல ரேடியோ கார்பன் டேட்டிங் முறையை பயன்படுத்தி உள்ளனர்.

இதன் மூலம் இந்த விதைகள் 32,000 வருடங்கள் பழமையானது என்பது கண்டறியப்பட்டது. பனிக்கட்டியின் மேற்பரப்பில் 124 அடி ஆழத்தில் இந்த விதைகள் இருந்த போதிலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த விதைகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இயற்கையின் வியப்பை இந்த ஆராய்ச்சி நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. இதை வைத்து விஞ்ஞானிகள் இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.