Female Supreme Court Judge: பாகிஸ்தான் வரலாற்றின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி

Female Supreme Court Judge: பாகிஸ்தான் வரலாற்றின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி

Female Supreme Court Judge பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக  பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

Female Supreme Court Judge

இதனை தொடர்ந்து நேற்று பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில்  உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

Female Supreme Court Judge ஆயிஷா மாலிக்

55 வயதான ஆயிஷா மாலிக் இப்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டின் உச்ச நீதிமன்றத்தில், 16 ஆண் சக ஊழியர்களுடன் சமஉரிமையுடன்  அமர்ந்துள்ளார்.

பாகிஸ்தானின் ஆண் ஆதிக்க சமூகத்தில், பெண்களுக்கான சமஉரிமை  பெறுவதற்கான பலநூறு  கால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அரிய வெற்றி என்று வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் சில வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் நீதிபதி மாலிக் நியமனத்தை எதிர்த்தனர்.

அதற்கு காரணம், அவர் மற்ற வேட்பாளர்களை விட குறைவான வயது உடையவராக  காணப்பட்டார்.

பாகிஸ்தானின் நீதித்துறை

பாகிஸ்தானின் நீதித்துறையானது , பழமைவாத மற்றும் ஆண் ஆதிக்கத்திற்க்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது.

இதுவரை பெண் உச்ச நீதிமன்ற நீதிபதி இல்லாத ஒரே தெற்காசிய நாடு பாகிஸ்தான் ஆகும்.

நீதிபதி மாலிக் பாகிஸ்தானில் உள்ள  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  சட்டக் கல்வி பயின்றார். 

நீதிபதி மாலிக் கடந்து வந்த பாதை

மேலும், கடந்த இருபது ஆண்டுகளாக கிழக்கு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

சொத்துகுவிப்பு மற்றும் விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றில் சிறப்பான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார் .

ஆணாதிக்கத்தால் நிறைந்த சட்ட விதிகளை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

கடந்த ஆண்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் கற்பழிப்பு பரிசோதனையின் போது “கன்னித்தன்மை சோதனைகள்” என்று அழைக்கப்படுவதை அவர் தடை செய்தார்.

இது போன்று  நன்மை மிகுந்த சட்டதிட்டங்கள் பலவற்றை அமலுக்கு கொண்டுவரவேண்டும் என பலர் வாழ்த்துக்கூறினர்.

பாகிஸ்தான் நீதித்துறைக்கு ஒரு மிக பெரிய வரலாறு

இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜர்மீனே ரஹீம்  “ஆணாதிக்கம் மற்றும் இஸ்லாத்தின் பிற்போக்குத்தனமான விளக்கங்களால் பெண்கள் தொடர்ந்து கட்டப்பட்டால், தேசிய மற்றும் உலகளவில் வெற்றிபெற தேவையான மனித மூலதனத்தை வளர்ப்பதில் நாங்கள் தொடர்ந்து முன்னேறாமல் இருப்போம். “என்று உரைத்தார் .

ஆனால், “இறுதியாக ஒரு பெண் உச்ச நீதிமன்றத்தில் அமர்ந்திருப்பதைப் பார்ப்பது அந்த போராட்டத்தில் ஒரு சிறிய படியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

வழக்கறினாரான நிகாட் டாட் “இது ஒரு பெரிய முன்னேற்றம்” என்றும் பாகிஸ்தான் நீதித்துறைக்கு ஒரு மிக பெரிய வரலாறு ,எனவும் கூறியுள்ளார்.

நீதிபதி மாலிக்கின் நியமனம் சிலரால் விமர்சிக்கப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு அதே பதவிக்கு அவரை அமர்த்த வாக்களிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்திற்கான அவரது நியமனம் இந்த முறை மீண்டும் பரபரப்பாகப் போட்டியிட்டது, ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் அவரது நியமனத்தை நான்குக்கு ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது.

பல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள், இந்த பதவிக்கு அதிக தகுதி வாய்ந்த ஆண் வேட்பாளர்கள் உள்ள நிலையில் நீதிபதி மாலிக்கினை  அமர்த்த இயலாது என   குற்றம் சாட்டினர்.

அவரை நியமித்தால் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக சில வழக்கறிஞர்கள் மிரட்டினர்.

நீதிபதி மாலிக் கீழ் நீதிமன்றத்தில் நான்காவது மிக மூத்த நீதிபதி ஆவார், அதில் இருந்து அவர் இப்போது உயர்த்தப்பட்டுள்ளார்.

Also Read: BMW adjustable seats: கார்களை போல் பைக்கில் Adjust செய்யும் சீட்!

நீதிபதி மாலிக்கின் பதவி உயர்வு வரலாற்று சிறப்புமிக்க நியமனம் என வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *