Fatty Liver Diet: கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா..?
Fatty Liver Diet: கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா..?
கல்லீரல் தான் நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு. இது தான் நம் உடலில் 500 க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது.

Fatty Liver Diet :
கல்லீரல் உணவினை ஜீரணப்படுத்தி, சத்துக்களை பிரித்தெடுத்து, எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது.
அதுமட்டுமில்லாமல், வேண்டாத கழிவுகளையும் வெளியேற்றும் பொறுப்பும் கல்லீரலுக்கு உண்டு.
ஆனால் நாம் உட்கொள்ளும் ஆல்கஹால், கொழுப்பு நிறைந்த உணவுகள், சர்க்கரை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவற்றால் கல்லீரல் பாதிப்பு உண்டாகிறது. கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும்.
எனவே நம் கல்லீரலை சுத்தம் செய்வது அவசியம். இதை உணவின் வழியாக செய்ய முடியும்.
சில வகை உணவுகள் நம் கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இந்த உணவுகளை நாம் எடுத்துக் கொண்டு வரும் போது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.

Liver food காபி மற்றும் டீ:
காபி கெட்டது என்றாலும் கல்லீரலை சுத்தப்படுத்தும் வேலையில் காபிக்கு பங்கு உண்டு.
கல்லீரலில் தேங்கும் கொழுப்பு செல் திசுக்களை தடுக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று கப் காபி குடிக்கிறவர்களிடம்தான் நல்ல நன்மைகள் காணப்படுகின்றன.
அதே மாதிரி க்ரீன் டீ பருகுவது சிறந்த கல்லீரல் ஆரோக்கியத்தை தருகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 5- 10 கப் வரை க்ரீன் டீ குடிக்கலாம்.
எந்தவொரு தேநீர் என்றாலும் 10 கப்பிற்கு மேல் குடிப்பது ஆபத்தை விளைவிக்கும்.
திராட்சை பழங்கள்:
திராட்சை பழங்களில் நிறைய நரிங்கின் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
அவை அதிகப்படியான இணைப்பு திசுக்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் கல்லீரலில் சேமிக்கப்படும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
எனவே உங்க கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க திராட்சை பழங்களை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
ப்ளூபெர்ரி மற்றும் கிரான் பெர்ரி:
ப்ளூ பெர்ரி மற்றும் க்ரான் பெர்ரியில் ஆந்தோசயின்கள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
பெர்ரிகளுக்கு வண்ணங்களை கொடுக்க இது உதவுகிறது. கல்லீரலுக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.
Which Food Is Good For Liver?
முட்கள் நிறைந்த பேரிக்காய்:
ஆல்கஹால் உட்கொள்வதற்கு முன்பு சில முட்கள் நிறைந்த பேரிக்காய் சாற்றைக் குடித்தால் குமட்டல், வறண்ட வாய் போன்ற கஷ்டத்தை அவர்கள் உணர்வது தெரிய வந்தது.
ஆல்கஹால் குடிப்பதால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்பை இதைக் கொண்டு குறைக்க முடியும்.
கல்லீரல் நோய், புண்கள், காயங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றுக்கு சிகிச்சையளிக்க மருத்துவத்தில் நீண்ட காலமாக முட்கள் நிறைந்த பேரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட், அதிக அளவில் பீட்டோ கரோட்டின் நிரம்பப்பெற்றது. இது கல்லீரலின் நலனுக்கு அவசியமானது.
மஞ்சள்:
மஞ்சளும் கிருமி நாசினியாக செயல்பட்டு கல்லீரலை காக்கும் தன்மை கொண்டது.
அதனால் தினமும் சிறிதளவு மஞ்சளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சமையலில் அடிக்கடி ப்ராக்கோலி சேர்த்து வருவதும் அவசியம். இது கல்லீரல் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவும்.
இயற்கையாகவே இந்த உணவுகள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது.
ஆல்கஹால், கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை பொருட்களை தவிருங்கள்.
இந்த பொருட்கள் கல்லீரலை பாதிக்கும். கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க இயற்கை வழியை நாடுவது நல்லது.