Facts About Venus: முதன்முறையாக வீனஸின் மையத்தின் அளவை அளந்த வானியலாளர்கள்..!
Facts About Venus: முதன்முறையாக வீனஸின் மையத்தின் அளவை அளந்த வானியலாளர்கள்..!
முதல் கண்காணிப்பு அடிப்படையிலான மதிப்பீட்டின்படி, சுக்கிரன் ஏறக்குறைய 7000 கிலோமீட்டர் விட்டம் கொண்ட ஒரு மையத்தைக் கொண்டுள்ளது என்று அளவிடப்பட்டுள்ளது.

Facts About Venus:
ஏறக்குறைய பூமியின் மையமும் இதே அளவு விட்டம் தான் கொண்டுள்ளது.
வீனஸின் அடர்த்தியான வளிமண்டலத்தின் காரணமாக அதனை பற்றி தெரிந்து கொள்ளவது மிகவும் கடினம்.
இதன் அடர்த்தியான வளிமண்டலம் மேற்பரப்பை மறைக்கிறது. எனவே, ரேடார் மற்றும் பிற சிறப்பு கண்காணிப்பு நுட்பங்கள் அதன் ஏராளமான மேகங்களுக்கு அடியில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஜீன்-லூக் மார்கோட்(Jean-Luc Margot) மற்றும் அவரது குழுவினர் 2006 முதல் 2020 வரை வீனஸை ஆய்வு செய்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள கோல்ட்ஸ்டோன்(Goldstone ) சோலார் சிஸ்டம் ரேடாரைப் பயன்படுத்தி கிரகத்தை ரேடியோ அலைகளால் தாக்கினர்.
பின்னர் மேற்கு வர்ஜீனியாவில்(West Virginia) சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரீன் பேங்க் தொலைநோக்கி இது இரண்டையும் வைத்து ரேடியோ அலைகளின் எதிரொலிகளைக் கண்காணித்து அவற்றை பூமிக்கு திருப்ப பயன்படுத்தினர். இது ரேடார் ஸ்பெக்கிள் டிராக்கிங் (speckle tracking) என்று அழைக்கப்படுகிறது.
இது வீனஸின் சுழல் மற்றும் இயக்கத்தில் மிகச் சிறிய மாற்றங்களை அளவிட முடிந்தது.
இதை வைத்து அவர்கள் வீனஸ் கிரகத்தின் ஒரு நாள், கிட்டத்தட்ட 243 பூமி நாட்களுக்கு சமமானதாகக் கண்டறிந்தனர்.
வீனஸின் உண்மையான அளவீடுகள்:
இது 15 ஆண்டுகால கண்காணிப்பில் 21 நிமிடங்கள் வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
மேலும் அவர்களின் கணக்கீடுகளின் படி ஒவ்வொரு 29,000 வருடங்களுக்கு வீனஸின் அச்சு மிகக் குறைவான அளவு மாறி இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.
இவற்றின் முக்கிய உந்து காரணி வீனஸின் அடர்த்தியான வளிமண்டலமாகும், இது மேற்பரப்பை தள்ளி இழுக்கிறது.
ஆனால் மற்றொரு காரணி வீனஸின் மையம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
மேலும் ஏற்ற இறக்கங்களை விளக்க, வீனஸின் மையம் எவ்வளவு பெரியது என்பதைக் கணக்கிட தங்கள் தரவைப் பயன்படுத்தினர்.
“[மையத்தின் ஆரம்] சுமார் 3500 கிலோமீட்டர் மதிப்பீட்டை நாங்கள் கொண்டுள்ளோம்” என்று Margot கூறுகிறார்.
மையமானது திரவமாகவோ அல்லது திடமாகவோ இருக்கலாம் என்றாலும் இதன் முந்தைய கண்டுபிடிப்புகள் மையமானது பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது என்று கூறுகிறது.
இருப்பினும், “வீனஸ்க்கு பூமியைப் போன்ற உள் திரவ மையமும் வெளிப்புற திட மையமும் இருக்கலாம், அல்லது முழுவதும் திடமாக அல்லது திரவமாக இருக்கலாம்” சரியாக தெரியவில்லை, என்று Margot கூறுகிறார்.
மதிப்பீடுகளின் முக்கிய அளவுகள் முந்தைய மாதிரிகளுடன் ஒத்துப்போனது.
எதிர்காலத்தில் துல்லியமான ஆய்வுகளை வைத்து வீனஸின் உண்மையான அளவீடுகளை கண்டறிய முடியும்.
மையத்தின் அளவு மற்றும் அடர்த்தியை அறிவது ஒரு கிரகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
Also Read: New science inventions: உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி LED-ஐ எரிய வைக்கும் கைக்கடிகாரம்…!
“ஒரு கிரகத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி எல்லாமே மையத்தின் அளவைக் கொண்டு தான் அறிந்து கொள்ளமுடியும் “
மேலும் “ஒரு கிரகத்தின் உள்ளமைப்பைப் பற்றி எங்களுக்கு நல்ல படம் எதுவும் இல்லையென்றால் அதைப் பற்றி எதையும் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.” என்று Margot கூறுகிறார்.