European Countries: உலகின் முதல் கலர்புல்லான மாஸ்க் கண்காட்சி..!
European Countries: உலகின் முதல் கலர்புல்லான மாஸ்க் கண்காட்சி..!
பொதுமக்கள் செய்துள்ள விதவிதமான முகக்கவசங்களைக் கொண்டு வித்தியாசமான கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளது செக் குடியரசு.

European Countries:
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக்.
தவிர, லாக்டவுனின் போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான்.
ஐரோப்பாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் செக் குடியரசில் கொரோனா பாதிப்பு குறைவு தான்.
இருப்பினும் ஆரம்பத்தில் கொரோனா தாக்குதல் பரவலாக இருந்தபோது முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், முகக்கவசம் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால் மக்களே தங்களுக்குத் தேவையான மாஸ்க்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய சம்பவம் டுவிட்டரில் வைரலானது.
இப்போது அங்கே லாக்டவுன் தளர்வு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நேரத்தில் நாட்டின் குடிமக்களைக் கவுரவிக்கும் விதமாக மக்கள் தயாரித்த 100 மாஸ்க்குகளை நேஷனல் மியூசியத்தில் கண்காட்சிக்கு வைக்கப் போகிறது செக்.
ஒரு ஆட்டிச குழந்தை தயாரித்த மாஸ்க்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது.
“இன்று ஏராளமான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அடுத்த தலைமுறைக்கு நாம் எதை கொடுத்துவிட்டு போகப்போகிறோம் என்பதை இப்போதே உறுதியாக சொல்ல முடியாது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். முகக்கவசங்கள் தான் இன்றைய சூழலின் சின்னமாக திகழ்கின்றன”, என்கிறார் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மரியா புரியநோவா.
மாஸ்க் அணிந்து தான் இந்த கண்காட்சியைப் பார்வையிடமுடியும். இப்படி Face Mask Exhibition நடப்பது உலகில் இதுவே முதல் முறை.
குறிப்பு: முகமூடிகள் சருமத்திற்கு நல்லதா?
தாள் முகமூடிகள் சரியான சமநிலையை வழங்குவதால், அவற்றை தவறாமல் பயன்படுத்தினால், அவை சருமத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்பதை டாக்டர் கோயல் வெளிப்படுத்தினார்.
இருப்பினும், முகமூடிகளால் மட்டுமே உங்கள் சருமத்தை மேம்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
Also Read: விண்வெளியில் வளர்த்த முள்ளங்கிகள் அறுவடைக்கு தயார் – NASA..!
அவை மென்மை மற்றும் பனி பிரகாசத்தை வழங்குகின்றன, இது சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும்.