Erectile Dysfunction: ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!
Erectile Dysfunction: ஆண்களுக்கு பல பலன்கள் அளிக்கும் ஓரிதழ் தாமரை..!
ஓரிதழ் தாமரையினை “ரத்தன புருஷ், ரத்னாயுரஷரி” என்ற பெயர்களைக் கொண்டும் அழைப்பர்.
தாமரை என்றதும், இது தண்ணீரில் வளரக்கூடியது என்று நினைக்காதீர்கள்.

Erectile Dysfunction:
இது நிலத்தில் வளரும் ஒரு வகைக் செடி ஆகும்.
இது, ஒரே இதழ் கொண்ட மலர் என்பதால், ‘ஓரிதழ்’ என்றும், தாமரைப் பூவின் நிறத்தோடு (வெளிர் சிவப்பு) இருப்பதால் தாமரை என்ற பெயரும் இணைந்து ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இதைத்தவிர தாமரை மலருக்கும் ஓரிதழ் தாமரைக்கும் எவ்விதத் தொடர்பு கிடையாது.
இது ஆண்களுக்கு ஒரு அற்புதமான மருந்தாக உதவுகிறது.
ஆண்மை சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்க்கின்றது.
இது ஆண்மையை அதிகரித்து உடல் வலிமையை அதிகரிக்கின்றது.
தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனையை குணப்படுத்தும் சக்தியும் இதனுள் அடங்கி இருக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை நீங்கவும் இவ் ஒற்றை தாமரை உதவுகிறது.
Orithal Thamarai:
ஒற்றை தாமரையில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த இது உதவுகின்றது.
இரத்தில் சக்கரையின் அளவை குறைப்பதோடு இரத்தத்தினையும் சுத்தம் செய்து இரத்த விருத்திக்கு உதவுகின்றது.
அதிக உடல் சூட்டினை உடையவர்கள் இம் மூலிகையினை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
உடலில் தேவையற்று இருக்கும் கொலஸ்ட்ரோலை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகின்றது.
அதிக உடல் சோர்வு மற்றும் வலியினை உடையவர்களுக்கு இது அசதியை நீக்கும் நிவாரணியாகவும் பயன்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுபவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஓரிதழ் தாமரை சாப்பிடும் முறை:
ஓரிதழ் தாமரையினை பொடி செய்து, அதில் அரை தேக்கரண்டி ஓரிதழ் தாமரைப் பொடியினை, நன்கு கொதித்த பசும் பாலில் கலந்து வெல்லம் எதுவும் சேர்க்காமல் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்ததாகும்.
இரவு சாப்பாட்டிற்கு பின்பு இதை உண்ணுவது நல்லது.
மேலும், ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டி அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Which Food Avoid in Pregnancy?
இதன் முழு பலனும் கிடைக்க வேண்டும் என்றால் தாமரையின் இதழை சாப்பிட்டு ஒரு மணிநேரத்திற்கு எந்த உணவும் எடுத்துக்கொள்ள கூடாது.
இச் சூரணத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதை செடியாக எடுத்து அரைத்தும் எடுத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் ஓரிதழ் தாமரை பொடி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் விதமாக தான் உள்ளது.
முழு செடியாக வேண்டும் என்றால், இவை அதிகம் கிராம புறங்கள், காடுகள் போன்ற இடங்களில் கிடைக்கும்.
Also Read: Coriander Leaves: கொத்தமல்லி இலைகளில் இவ்வளவு மருத்துவ குணங்களா..!
குறிப்பு :
கர்ப்பிணிகள் இதை தவிர்ப்பது சிறந்தது.
இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதனால் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பவர்கள் ஓரிதழ் தாமரையினை உண்பதை தவிர்க்கவும்.