Pneumonia காய்ச்சல் குணமடைய இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

Pneumonia என்பது நுரையீரலில் ஏற்படும் நோயாகும். நிமோனியா உள்ளவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகளில் சீழ் பிடிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். எல்லா வயதினரையும் பாதிக்கும் இந்நோய், 2 வயதிற்கு குறைவானோர் மற்றும் 60 வயதிற்கு அதிகமானோரை பாதிக்க அதிக வாய்ப்புண்டு.

Pneumonia

இருமல், முச்சுத்திணறல், காய்ச்சல், மூச்சு வாங்குதல், அசதி, வாந்தி, சுவாசிக்கும் பொழுதும் இருமும் பொழுதும் நெஞ்சு வலி, பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.

இந்த அறிகுறிகளை கண்டால், உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

Pneumonia குணப்படுத்த மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.

எந்த வீட்டு வைத்தியம் மற்றும் உணவுகளும் நிமோனியாவைக் குணப்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இருந்தாலும், சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நிமோனியாவில் இருந்து மீள்வதை வேகப்படுத்த உதவும். இப்போது அந்த உணவுகள் எவையென்று காண்போம்.

முழு தானியங்கள்

முழு தானியங்களான திணை, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், பார்லி போன்றவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் பி வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ளன.

இவை நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் காலத்தில் உடலின் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் பராமரிக்கவும், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கவும் செய்கிறது.

இந்த தானியங்களில் உள்ள செலினியம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Pneumonia

புரோட்டீன் உணவுகள்

நிமோனியா உள்ளவர்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளான நட்ஸ், விதைகள், பீன்ஸ், இறைச்சி மற்றும் மீன்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது.

ஆகவே இவற்றை உட்கொள்ளும் போது, அது பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யவும், புதிய திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை நுரையீரலில் உள்ள தொற்றுக்களை சீக்கிரம் சரிசெய்ய உதவும்.

கேல், லெட்யூஸ், பசலைக்கீரை போன்றவை அதில் சிறந்த தேர்வுகளாகும்.

அதோடு, இந்த வகை உணவுகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உடலுக்கு பாதுகாப்பை வழங்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பெர்ரிப் பழங்கள், கிவி போன்றவற்றில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, நிமோனியாவில் இருந்து விரைவில் குணமடையச் செய்யும்.

Also Read: பெண்களுக்கு தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்..!

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடி பாதுகாப்பு அளிக்கும்.

தயிர்:

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் நிமோனியாவை உண்டாக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும்.

அதோடு குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *