News Tamil OnlineTamil Technology Newsஅறிவியல்கண்டுபிடிப்புசெய்திகள்

Earth’s Interior: பூமியின் மையத்தின் திசை மாற்றம்..! நடப்பது என்ன..!

Earth’s Interior: பூமியின் மையத்தின் திசை மாற்றம்..! நடப்பது என்ன..!

1990 களில் விஞ்ஞானிகள் பூமியின் உள் மையமானது எப்போதும் அதன் சொந்த வேகத்தை மட்டுமே கொண்டுள்ளது என்பதை அறிந்தனர்.

இருப்பினும், சமீப ஆய்வில் பூமியின் உள் மையமானது சுழல்வதை நிறுத்திவிட்டதாகவும், அதன் இயக்கத் திசையை மாற்றக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

Earth Science

Earth Science:

நேச்சர் ஜியோசைன்ஸில்(Nature Geoscience) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், புவியியலாளர்கள் இயக்க முறையை ஆய்வு செய்தபோது, நமது கிரகத்தின் உள் மைய சுழற்சி சமீபத்தில் நின்றுவிட்டது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.

2009 இல், இயக்க திசை திடீரென்று நின்று எதிர் திசையில் நகரத் தொடங்கியது.

பூமியின் உள் மையமானது பூமியின் வேகத்துடன் தொடர்புடைய இயக்கத்தில் ஒரு ஊஞ்சலைப் போல அங்கும் இங்கும் நகர்கிறது.

மேலும் அந்த ஊஞ்சலாட்டத்தின் ஒரு சுழற்சி என்பது ஏழு தசாப்தங்களாக((பத்தாண்டுகள்) இருக்கும் என்று புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்பு பூமியின் உள் மையமானது 1970 களின் முற்பகுதியில் பாதைகளை மாற்றியது. சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி, இதன் அடுத்தடுத்த இயக்கம் 2040 களில் இருக்கும் என்று தெரிவித்தனர்.

Earth's Interior

Earth’s Interior:

நமது பூமி மூன்று அடுக்குகளைக் கொண்டு காணப்படுகிறது. மேலோடு, கோர் மற்றும் மேன்டில்(core and mantle). பூமியின் மையப்பகுதி உள் மற்றும் வெளிப்புறமாக பிரிக்கப்பட்டுள்ளது.

கோர் என்பது பூமியின் மைய பகுதி அல்லது மிக முக்கியமான பகுதியாகும்.

மேன்டில் என்பது பூமியின் உட்புறத்தின் பெரும்பகுதியான திடப் பகுதியாகும்.

மேன்டில் சுமார் 2,900 கி.மீ(1,802 மைல்கள்) தடிமனாக உள்ளது. மேலும் இது பூமியின் மொத்த அளவின் 84% ஆகும்.

பூமியின் உள் மையத்தை பற்றி நாம் ஆழமாகப் பார்ப்போம்.

பூமியின் உள் மையத்தை பற்றிய ஆய்வுகள் உண்மையிலேயே நமக்கு உற்சாகத்தை தருகின்றன.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி உருவான சமயத்தில் பூமியின் மையப்பகுதி பூமியின் பாறை போன்ற பகுதியிலிருந்து பிரிந்து வர தொடங்கியபோது, முதலில் அதன் உள்மையப்பகுதி எப்படி இருந்தது என ஆய்வில் காட்ட முடிகிறது.

1936 ஆம் ஆண்டில் நடந்த பூகம்பத்தின் போது, விஞ்ஞானிகள் பூமியின் வழியாக பயணிக்கும் அலைகளை ஆராய்ச்சி செய்த போது அதைக் கண்டுபிடித்தனர்.

சுமார் 7,000 கிலோமீட்டர் அகலம் கொண்ட இது, திடமான இரும்பின் மையத்தை சுற்றி திரவ இரும்பு ஓடுகளால் இருந்தது.

1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில், பூமியின் உள் மையத்தின் வழியாக நில அதிர்வு அலைகளின் பயண வேகம் கடந்த மூன்று தசாப்தங்களாக(பத்தாண்டுகள்) கால மாறுபாட்டை வெளிப்படுத்தியது.

மேன்டிலை விட சுழற்சி விகிதம் ஆண்டுக்கு 1 டிகிரி வேகமாக வளர்ந்தது.

What is the Interior of Earth

What is the Interior of Earth?

பூமியின் உள் மையத்தில் ஏற்படும் திசை மாற்றம்:

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மையத்தின் சுழற்சி நேரடியாகவே “ஒரு நாளின் நீளம், பூமியின் சுழற்சி மற்றும் பூமியின் மேன்டில் மற்றும் மேலோடு ஆகியவற்றை இணைக்கிறது”.

Also Read: European Space Agency: மிகப்பெரிய விண்வெளி திட்டத்தை ஐரோப்பா தொடங்க உள்ளதாக தகவல்..!

பூமியின் மூன்று அடுக்குகளுக்கும் இடையே மாறும் தொடர்புகளுக்கு வழிவகுத்த புவியீர்ப்பு இணைப்புக்கான ஆதாரங்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், பூமியின் உள் மையத்தின் திசை மாற்றம் மக்களின் வழக்கமான வாழ்க்கையை பாதித்துள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.