Drying off after shower: குளித்து முடித்த உடன் முதலில் தலையை துவட்டக்கூடாது ஏன் தெரியுமா..?
Drying off after shower: குளித்து முடித்த உடன் முதலில் தலையை துவட்டக்கூடாது ஏன் தெரியுமா..?
நம் அன்றாட வாழ்வில் சாப்பிடுவது, குளிப்பது என்பது ஓர் பொதுவான நிகழ்வு ஆகும்.

Drying off after shower:
இருப்பினும் அனைத்திற்கும் ஒவ்வொரு முறை உண்டு என முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு ஆன்மீகம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னால் அறிவியலும் உள்ளது என்பது தான் உண்மை .
இதில் குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர் .
குளிக்கும் போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் தண்ணீர் ஊற்றி பிறகு உடலில் விட்டுக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை ஊற்ற வேண்டும்.
குளித்து முடித்ததும், துடைத்துக்கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்கவேண்டும்.
ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது , நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலக்ஷ்மியும் அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் காத்துகொண்டு நிற்பார்களாம்.
இது ஆன்மீக முறையில் கூறப்பட் டதாகும் .
நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்படுமாம்.
ஆனால் நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்வார்.
நம் புத்தி வேலை செய்யாது. ஆகவே, முதலில் முதுகை துடைக்கவேண்டும். அப்போது தான் மூதேவி முதுகில் அமர்வாள்.
அடுத்தது நம் முகத்தில் மகாலட்சுமி வந்து அமரும் போது, நம் முகம் தெளிவாகவும்,சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும்.
முதலில் முகத்தை துடைத்துகொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாக்கி விடும்.
இவற்றை அறிவியல்படி கூறுகையில், பொதுவாக வெப்பம் கீழிலிருந்து மேல் எழும் என்பதால் முதலில் காலில் இருந்து தண்ணீரை ஊற்றி உச்சந்தலை வழியாக சூட்டை வெளியேற்ற வேண்டும்.
இதன் காரணமாகவே கீழிலிருந்து மேலாக தண்ணீர் ஊற்ற வேண்டும் என கூறுவார் .
நம் முன்னோர்கள் குளம் மற்றும் ஆற்றில் குளிக்க இதுவும் காரணமாக கூறப்படுகிறது. குளம் மற்றும் ஆறுகளில் குளிக்கும் போது கீழிலிருந்து மேலாக நம் உடல் நீரால் நனைக்கப்படும்.
அப்போது நமது உடலின் சூடு வெகுவாக தணியும். மேலும் நம் உடலில் முதுகில் தான் சூடு அதிகமாக இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று அவர்களின் முதுகை தொட்டு பார்த்து தான் அறிவார்கள்.
Also Read: Mathi fish benefits: உடல் நலனை காக்கும் மத்தி மீனில் இருக்கும் நன்மைகள்..!
எனவே நம் உடலில் முதுகு சூடு அதிகமாக இருக்கும் இடம் என்பதால், நாம் முதலில் குளித்து முடித்த உடன் முதுகை தான் துடைக்க வேண்டும்.
அதுவே உடலில் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்கின்றனர்.
எனவே, நாம் குளித்து முடித்தவுடன் தலையினை துவட்ட கூடாது என்று அறிந்து செயல்படுவோம்.