Interesting Factsஅறிவியல்சுவாரஸ்யமான உண்மைகள்செய்திகள்விசித்திரமான தகவல்கள்

Dolphin Fish: டால்பின் பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்..!

Dolphin Fish: டால்பின் பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்..!

டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி வகை உயிரினமாகும்.

Dolphin Facts

Dolphin is mammal or not:

டால்பின்(Dolphin) உடல் திமிங்கலம் போன்று இழை வடிவம் உடையது. வால் மற்றும் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையாக உள்ளது.

அதன் மூக்கு கூர்மையாய், விளிம்பில் சுழியுடையதாக காணப்படுகிறது.

சுமார் 1.2 மீட்டரிலிருந்து 9.5 மீட்டர் நீளம் வளரும். 40 கி.கி முதல் 10 டன் வரை எடையும் கொண்டன.

மேலும் டால்பின்களுக்கு இரண்டு வயிறுகள் உள்ளன. ஒன்று உணவு சேமிப்பிற்கும் மற்றொன்று செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் கைரேகையைப் இருப்பது போல் ஒவ்வொரு டால்பினுக்கும் தனித்துவமான சீட்டி ஒலியை எழுப்புகின்றன.

ஒவ்வொரு டால்பின் ஒலியும் தனித்தன்மை வாய்ந்தவை. மேலும் வேட்டைக்கு செல்லவும் மற்றும் பிற டால்பின்களை தொடர்பு கொள்ளவும் டால்பின்கள் ஒலி எழுப்புகிறது.

தம்மோடு இயற்கை அளித்த ரேடாராக எதிரொலியை வைத்தே வழி கண்டறிந்து உணவு தேடுகிறது.

கடல் மட்டத்தைத் தாண்டி சுமார் 20 அடி உயரம் வரை கூட எம்பிக் குதித்து விளையாடும் சுறுசுறு குறும்புத்தனம் கொண்டவை டால்பின்கள்.

காயம்பட்ட மீன்களை பாதுகாப்பாக எடுத்து வந்து சுவாசிக்கச் செய்ய உதவுவதில் டால்பின்களுக்கு இணையாக எந்த விலங்கினமும் கிடையாது.

மீன்களுக்கு மட்டுமில்லாமல், மனிதர்களுக்கும் உதவி செய்யக் கூடியவை இவை. Dolphins நீண்ட ஆயுள் கொண்டவை.

இவற்றில் பாட்டில் மூக்கு டால்பின்கள் 40 ஆண்டுகளுக்கு மேலும், ஆர்கா டால்பின்கள்(Orca dolphins) 80 ஆண்டுகளுக்கு மேலும் வாழ்கின்றன.

இவை நீருக்கடியில் 15 நிமிடங்களே தம் பிடிக்க முடியும். காரணம் நீருக்கடியில் அவை சுவாசிக்க முடியாது.

ரிசோ டால்பின்களால் கடலடியில் 30 நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும்.

கடலில் வாழும் டால்பின்களில் 32 வகைகளும் ஆறுகளில் வாழும் டால்பின்களில் 4 வகைகளும் உள்ளன.

சில டால்பின் இனங்கள்:

நீண்ட மூக்கு டால்பின்
மூக்கு டால்பின்
பசிபிக் பாட்டில் மூக்கு டால்பின்
பசிபிக் திமில் டால்பின்
வெள்ளை டால்பின்
கூரிய பற்களுடைய டால்பின்
வெள்ளை பக்க டால்பின்
அமேசான் ரிவர் டால்பின்
சீன நதி டால்பின் கங்கை நதி டால்பின்
சிந்து நதி டால்பின்

Dolphin Facts:

டால்பின்கள் ஊனுண்ணிகள்.

டால்பின்கள் பலவிதமான மீன், ஸ்க்விட், இறால், ஜெல்லிமீன் மற்றும் ஆக்டோபஸ்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன.

பொதுவாக இவை 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

பாட்டில் மூக்கு டால்பின் 40 ஆண்டுகள் வரை வாழும். 40 ஆண்டுகள் என்பது வாழும் சூழ்நிலை மட்டும் வகைகளை பொருத்து மாறுபடும்.

ஓங்கில்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும்.

இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. மேலும் சில இனங்களுக்கு 250 பற்கள் வரை முளைக்கும்.

தங்கள் தலைக்கு மேல் உள்ள உறிஞ்சும் துளை மூலம் டால்பின்கள், மூச்சுவிடுகின்றன.

மேலும் அதன் மூச்சுக் குழல் மூளைக்கு மேல்புறமாக உள்ளது. டால்பின் பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மூளையைக் கொண்டது.

உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம்.

பெரும்பாலான டால்பின்கள் கடல் மற்றும் கடலோரங்களில் கடலில் அல்லது உப்புநீரில் வாழ்கின்றன.

Also Read: பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் செட்டிநாடு வீடுகள்..!

தெற்காசிய நதி டால்பின் மற்றும் அமேசான் நதி டால்பின் அல்லது போடோ போன்ற ஒரு சில இனங்கள் நன்னீர் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் வாழ்கின்றன.

பொதுவாக டால்பின்கள் வேகமாக நீச்சல் அடிக்கும்.

எதிரிகளிடமிருந்து சுதாரிப்பதற்காக டால்பின்களின் மூளையில் எப்போதும் பாதிப் பகுதி மட்டுமே உறக்கத்திற்குச் செல்கிறது.