News Tamil OnlineTamil Newsசெய்திகள்தொழில்நுட்பம்

Does Jupiter Have Rings? சனி கோளினை போல வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை..? புதிரை கண்டுபிடித்த ஆய்வு..!

Does Jupiter have rings? சனி கோளினை போல வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை..? புதிரை கண்டுபிடித்த ஆய்வு..!

நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் இருந்து சனி மட்டும் வேறுபட்டு தெரிவதற்கு காரணம் அதை சுற்றி உள்ள வளையங்கள் தான்.

Does Jupiter have rings

Does Jupiter have rings?

சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை Amateur தொலைநோக்கிகளின் மூலம் காணலாம்.

அரசர்களுக்கு ஒரு அடையாளமாக எவ்வாறு அவர்களுக்கு கிரீடம் உள்ளதோ, அதுபோல தான் சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது.

அதே சமயத்தில் வேறு கிரகங்கள் எதற்கும் சனியைப் போன்ற வளையங்கள் இல்லை ஏன்?

இவ்வாறு பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விக்கு சனி நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரிய கிரகம் என்று பதில் கூறினாலும் சரியானதாக இருக்காது.

ஏனென்றால் வியாழன் கிரகம் சனியை விட பெரியது, அதற்கு ஏன் சனி போன்ற வளையங்கள் இல்லை என்ற கேள்வி வருகிறது?

Why doesn’t Jupiter have Rings?

சனியின் வளையங்கள் எவ்வகையில் உருவானது என்பதன் தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகம், ரிவர்சைடு (UCR) சமீபத்தில் நடத்திய ஆய்வில், சனி கிரகத்தில் இருப்பது போன்ற வளையங்கள் வியாழனுக்கு ஏன் இல்லை என்பதற்கான காரணங்கள் வெளிப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் Planetary Science இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்விற்கு UCR Astrophysicist விஞ்ஞானி ஸ்டீபன் கேன் தனது மாணவருடன் சேர்ந்து தலைமை தாங்கினார்.

ஆய்வில், அவர்கள் ஒரு உருவகப்படுத்துதல் வழிமுறைகளை பின்பற்றினார்கள். 

விஞ்ஞானிகள் முதலில், வியாழனின் நான்கு நிலவுகளின் சுற்றுப்பாதைகள் மற்றும் கிரகத்தின் சுற்றுப்பாதை பற்றிய தகவலை தொகுத்தனர்.

மேலும், இந்த ஆய்வு, ஓர் கிரகத்தைச் சுற்றி வளையங்களை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பது பற்றிய தகவல்களையும், கிரகங்களின் செய்திகளையும் குறிப்பிட்டுள்ளது.

வியாழன்:

வியாழனால், சனி கிரகத்திற்கு இருப்பது போன்ற வளைவுகளை உருவாக்க முடியாததற்கு அதன் நிலவுகளே காரணம் என்று விஞ்ஞானி கேன் கண்டுபிடித்தார்.

மேலும், கலிலியோ வியாழனுக்கு நான்கு நிலவுகள் இருப்பதாக கண்டறிந்துள்ளார்.

வியாழனின் நான்கு பெரிய நிலவுகள்: அயோ, யூரோபா, கேனிமீட் மற்றும் காலிஸ்டோ. இவை முதலில் டிசம்பர் 1609 அல்லது ஜனவரி 1610 இல் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டது.

வியாழனின் கலிலியன் நிலவுகளில் ஒன்று நமது சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய நிலவு.

சூரியமண்டலத்தின் இந்நிலவு புதிதாக உருவாகக்கூடிய எந்த பெரிய வளையங்களையும் மிக விரைவாக அழிக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Also read: SpaceX Rocket: கட்டுப்பாட்டை மீறும் SpaceX ராக்கெட்..! நிலவை தாக்குமா என்று கேள்வி..!

இந்நிலவு தான் வியாழனுக்கு வளைவுகள் இல்லாததற்கு காரணம்.

தற்போது மட்டுமல்ல, இதற்கு முன்பு எப்போதுமே, சனி கோளுக்கு இருப்பது போன்ற வளையங்கள் வியாழனுக்கு இருந்ததே இல்லை என்று உறுதியாக இந்த ஆய்வின் மூலம் கூறமுடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *