Non Veg: அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்க..?
Non Vegetarian Food: அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்க..?
கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடங்கிய நாள் முதல் சுத்தத்தின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உலக சுகாதார அமைப்பானது குறிப்பிட்ட இடைவெளிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வெளியிட்டு வருகிறது.

Non Veg சாப்பிட்டால் கொரோனா வரும் என்ற ஒரு கட்டுக்கதைகள் நிலவும் இந்த சமூகத்தில், அது பொய் என்றே மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் விளக்கி வருகின்றனர்.
நன்கு சமைத்து சாப்பிடப்படும் எந்தவொரு அசைவ உணவிலும் நோய் தொற்று இருக்காது என்பதே உண்மை.
இருப்பினும், அசைவ உணவுகளை சமைப்பவர்களுக்கெனவே உலக சுகாதார அமைப்பு சில வழிக்காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதனை படித்து நினைவில் கொண்டு, அதன்படி சமைத்து சாப்பிட்டால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது.
உணவுப் பொருட்கள் மற்றும் இறைச்சியை சரியான வெப்பநிலையில் சேமிக்க வேண்டியது அவசியம்.
இது முக்கிய மூலப்பொருள்கள் பழையதாக மாறிவிடாமல் பாதுகாப்பதோடு, எந்த நுண்ணுயிரிகளும் இறைச்சியைத் தாக்கிடாமல் பாதுகாத்திடும்.
மேலும், சமைத்த உணவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. அதை குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால், அது பாதுகாப்பாக இருக்கும்.
விரைவில் கெடக்கூடிய உணவுப் பொருட்களை 5 டிகிரி வெப்பநிலையில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்.
மேலும், சமைத்த எந்த இறைச்சி உணவையும் குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் சேமித்து வைக்கக்கூடாது. இது குளிர்சாதன பெட்டியிலும் ஒரு வித வாசனையை ஏற்படுத்திவிடுவதோடு, சாப்பிட முடியாமலும் போய்விடும்.

சமைக்காத இறைச்சி மற்றும் சமைத்த இறைச்சி உணவை எப்போதும் வெவ்வேறு இடங்களில் வைப்பதே சிறந்தது. இரண்டு பாத்திரங்களுக்கும் இடையே குறிப்பிட்ட தூர இடைவெளி விட்டே வைக்கவும்.
நீங்கள் சமைத்த மற்றும் சமைக்காத இறைச்சியை ஒன்றாக சேமித்து வைக்க முடியாது.
ஏனென்றால், சமைக்கப்படாத முட்டை, இறைச்சி, கோழி, கடல் உணவு மற்றும் மீன் போன்றவற்றில் பல தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் இருக்கலாம்.
எனவே, அவற்றை சமைத்த இறைச்சியுடன் ஒன்றாக வைத்திருந்தால் தொற்று ஏற்படக்கூடும். இந்த உணவுகளில் சில நுண்ணுயிரிகள் உள்ளன. அவை புதிதாக சமைக்கப்பட்ட உணவையும் கூட கெடுத்துவிடும்.
அசைவ உணவை ஒருவர் நன்றாக சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
Also Read: Fruit Benefits பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவும் நாவல் பழம்..!
குறிப்பாக முட்டை, கோழி, கடல் உணவு போன்றவற்றை நன்கு சமைக்கவும்.
இறைச்சி மற்றும் கோழி உணவுகளை தயாரிக்கும் போது, குழம்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இது மிகவும் அவசியம். ஏனென்றால் இவை சரியாக சமைக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து நுண்ணிய தீங்கு விளைவிக்கும் உயிரிகளும் அழிந்துவிடும்.
எப்போது அசைவ உணவுகளை சமைத்தாலும் இவற்றை மனதில் கொண்டு சமைத்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தை, அசைவ உணவுகளால் ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளில் இருந்து சுலபமாக காத்திடலாம்.