இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Cycling Benefits: சைக்கிள் பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா..?

Cycling Benefits: சைக்கிள் பயிற்சி செய்வதில் இவ்வளவு நன்மைகளா..?

சைக்கிள் மேடு பள்ளங்கள், ஒத்தையடிப்பாதைகள் போன்றவற்றை எளிமையாக கடக்க ஓர் சிறந்த வாகனமாக உதவுகிறது.

Cycling benefits in weight loss - newstamilonline

Cycling Benefits:

இது நம் உடல் ஆரோக்கியத்தை காக்கும் உற்ற நண்பனாக கைகொடுக்கிறது என பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்துவருகின்றன.

நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் தான் உடலை சிக்கென்று கட்டுப்பாடாக வைத்திருக்க முடியும்.

ஆனால் தினமும் சைக்கிள் ஓட்டினால் போதும் நம் உடலுக்கு உடற்பயிற்சி தேவையில்லை, உடல் சிக்கென்று இருக்கும்.

ஜிம்மிற்கு(gym) சென்று மணிக்கணக்கில் பயிற்சி செய்வதை விட சில மணிநேரங்கள் சைக்கிள் ஓட்டினால் பிட்டான உடலை விரும்பியபடி பெறலாம்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை:

நம் சைக்கிள் ஓட்டுவதால் கால் பாதம் மட்டும் அல்ல. உடலின் அத்தனை உறுப்புகளையும் இது இயங்க வைக்கும்.

அரை மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் 300 கலோரி கொழுப்பு எரிக்கப்படுகிறது.

சைக்கிள் ஓட்ட தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுகிறது. அடுத்த 20 நிமிடங்கள் தொடரும் போது குளுக்கோஸ் எரிக்கப்படுகிறது.

30 நிமிடங்களில் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் குறையத்தொடங்குகிறது.

நாம் உடற்பயிற்சியை எத்தனை மணி நேரம் தொடர்ந்து செய்தாலும் அவை மொத்த உறுப்பையும் இயங்க வைக்காது.

குறிப்பிட்ட பயிற்சிகள் குறிப்பிட்ட தசைகளை மட்டுமே அசைய வைக்கும். உதாரணத்துக்கு, நடை பயிற்சி கால் தசைகள் மட்டுமே வலுப்படும்.

நீட்டி மடக்கும் உடலுக்கான பயிற்சிகள் மூட்டுகள் அதை சுற்றியுள்ள தசைநார்களை வலுவாக்கும்.

ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அனைத்து பயிற்சிகளையும் செய்த பலனை பெற்றுவிடலாம் .

உடல் பருமன் அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுபவர்களுக்கு உகந்த ஓர் எளிய பயிற்சியாக சைக்கிளிங் உள்ளது.

கொழுப்பு நிறைந்த உடலிலிருந்து கொழுப்பைக் குறைக்க எடுக்கும் முயற்சியினால் நம் உடல் நீர்த்து போவதுண்டு.

இதனால், நாம் கடுமையான உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் போவதுண்டு. குறையாத கொழுப்பையும் குறைக்கும் ஆற்றல் சைக்கிள் மிதிக்கும் போது பெற்றுவிடலாம்.

சைக்கிள் பயணத்தைத் தொடர்ந்தால் உடல் எடை உங்கள் கட்டுக்குள் வரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியதே.

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க தவறியவர்கள், உடல் பருமனைக் கொண்டிருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஆனால் சைக்கிள் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read: Who can donate blood? யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்? செய்ய கூடாது?

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதற்க்கான முக்கியமான காரணி, உடல்பருமன்.

எனவே, சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.