Cumin Seeds: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் இவ்வளவு மருத்துவப்பயன்களா..!
Cumin Seeds: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தில் இவ்வளவு மருத்துவப்பயன்களா..!
நம் வீட்டு சமையல்களில் பயன்படுத்தும் வழக்கமான பொருள்களுள் ஓன்று இந்த சீரகம்.
இவை பெரும்பாலும் மேட்டுப்பாங்கான இடங்களிலும், மலைகளிலும் வளருகின்றன.

What is Jeera?
பயிரிட்ட செடியிலிந்து கிடைக்கும் காய்ந்த விதையே சீரகமாக மாறுகிறது.
சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதன் பெயருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் சீரகம் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
இது கார்ப்பு, இனிப்பு, மற்றும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
மேலும், சீரகத்தின் பயன்தரும் நன்மைகளை விரிவாக காணலாம்:
“கண் எரிச்சல் மற்றும் கண்ணிலிருந்து நீர் வடிதல்” போன்ற பிரச்சனை உள்ளவர்கள் சீரகத்துடன் சிறிது மிளகு சேர்த்து,பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் சிறந்தது:
ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இது தூக்க பிரச்சனைகளை போக்கும். அடுத்ததாக சீரகத்தை வறுத்து சூடான நீரில் கலக்கவும். பின்னர் அதை மீண்டும் கொதிக்க வைத்து படுக்கைக்குச் செல்வதற்கு முன் குடிக்கலாம். இது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தரும்.

Best Digestive Enzymes:
செரிமானத்தை சரிசெய்யும்:
சீரகத்தை தினமும் உட்க்கொண்டால் அது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
இரவில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடிக்க செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதோடு உடலில் உள்ள நச்சுகளும் நீங்கும்.
குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.
திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகப் பொடி சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.
இரத்ததில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது.
உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. கொழுப்பு கரைவதால் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். இதனால் உடல் எடை குறையும்.
ஒரு நாளைக்கு சீரகத்தை 300 முதல் 600 மில்லி கிராம் அளவு சாப்பிடுவது நல்லது.
சீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால், எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும்.
சீரகத்தை தனித்தனியே கரும்புச் சாறு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு, முசுமுசுக்கைச் சாறு ஆகியவற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து, பின் நன்கு ஊறிய சீரகத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

Cumin Seeds:
இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேன் தலைவலிக்கும் மற்றும் பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் சிறந்த துணை மருந்தாக திகழ்கிறது.
வீட்டில் செய்ய முடியாதவர்கள், சித்த மருந்துக் கடைகளில் ‘சீரகச் சூரணம்’ என்று கேட்டு வாங்கி சாப்பிடலாம்.
சிறிதளவு இஞ்சி எடுத்து, அதன் தோலினை நீக்கி, உலரவைத்து, அதே அளவுக்கு சீரகத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் இரண்டையும் பொன் வறுவலாக எடுக்க வேண்டும்.
இரண்டின் அளவுக்குச் சமமாக நாட்டுச் சர்க்கரையைக் சேர்த்து, இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் தலைவலி படிப்படியாகக் குறையும்.
சீரகத்தையும் வில்வ வேர் கஷாயத்தையும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்யும் சீரக வில்வாதி லேகியம்’, பித்த நோய்களைப் போக்கும் மிக முக்கிய மருந்தாகும்.
சீரகம், பித்தத்தைச் சீர்ப்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட இதை ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்த முடியும்.
சீரகத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் A குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.
Read Also: Psoriasis Treatment: புன்னை மரத்தில் இவ்வளவு மருத்துவ பயன்களா..!
குறிப்பு:
ஆண்கள் அளவுக்கு அதிகமாக சீரகம் சாப்பிட்டால் மலட்டுத் தன்மையை ஏற்பட வாய்ப்புள்ளதாம்.
அதோடு முந்தைய காலத்தில் கருவை கலைக்க சீரகத்தையும் அதிகமாக சாப்பிடுவார்களாம். எனவே கரு நிற்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சீரகத்தை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.