Cough Remedies: சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!
Cough Remedies :உங்களுக்கு நாள்பட்ட சளி, இருமல் இருந்தால், இந்த உணவுகளை தயவு செய்து சாப்பிடாதீங்க!
குளிர் அல்லது பனி காலத்தில் பெரும்பாலான மக்கள் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள்.

Cough Remedies :
மேலும் இக்காலத்தில் பாக்டீரியல் தொற்றுக்களால் பலர் காய்ச்சலாலும் அவதிப்படுவார்கள்.
காய்ச்சல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டால் குறைந்துவிடும். ஆனால் சளி, இருமல் ஆரம்பித்துவிட்டால், அவ்வளவு எளிதில் குணமாகிவிடாது.
எனவே சளி, இருமல் இருந்தால் நீங்கள் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
இப்போது சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படும் போது எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
இந்த உணவுகளை தப்பித்தவறி கூட சாப்பிட்டால், அது மார்பில் சளியை அதிகரித்து, உங்கள் நிலைமையை மோசமாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடலாம்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சளி, இருமல் பிரச்சனையைக் கொண்டவர்கள் பாலைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பால்,அரிசி ,சர்க்கரை :
ஏனெனில் பால் குடிப்பதால் மார்பு பகுதியில் சளி அதிகம் உற்பத்தியாகி தேங்க ஆரம்பித்து, இருமலை மேலும் மேலும் அதிகரிக்கும்.
உங்களுக்கு சளி, இருமல் இருந்தால், கட்டாயமாக பால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
மருத்துவரின் கூற்றுப்படி, அரிசியானது குளிர்ச்சித்தன்மை கொண்டது மேலும் இது சளியை உருவாக்கும் தன்மையைக் கொண்டது.
ஏற்கனவே சளி பிரச்சனையால் அவதிப்படும் ஒருவர் அரிசி சாதத்தை சாப்பிட்டால், அது பிரச்சனையை இன்னும் மோசமாக்கும்.
இருமல் உங்களுக்கு அதிகம் இருந்தால் , நிறைந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். ஏனெனில், சர்க்கரையானது மார்பில் அழற்சியைத் தூண்டும்.
அதே வேளையில், சர்க்கரை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும்.
உங்களுக்கு விரைவில் சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள்.
சளி மற்றும் இருமல் இருக்கும் போது காப்ஃபைன் நிறைந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
பொதுவாக காப்ஃபைன் நிறைந்த பானங்கள் தொண்டை தசைகளில் வறட்சியை ஏற்படுத்தி, அதிகளவில் இருமலுக்கு வழிவகுக்கும்.
சளி பிடித்திருக்கும் போது, காப்ஃபைன் நிறைந்த காபி, டீ குடிப்பதை இனிமேல் தவிர்த்திடுங்கள்.
சர்க்கரைக்கு அடுத்ப்படியாக நெஞ்சுப் பகுதியில் அழற்சியை அதிகரிக்கும் ஓர் உணவுப் பொருள் என்னவெனில், அது ஆல்கஹால் தான்.
சளி பிடித்திருக்கும் போது, ஆல்கஹாலைக் குடித்தால், நமது உடலில் காயத்தைக் குணப்படுத்தும் செயல்முறையை செய்யும் இரத்த வெள்ளையணுக்கள் சேதமடைவதோடு, உடலில் உள்ள சளி பிரச்சனையும் அதிகரிக்கும்.
Also Read :Foods Not to Eat with Milk: பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்
எனவே சளி, இருமல்(cough) பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவர்கள் இவற்றையெல்லாம் கண்டிப்பாக தவிர்த்திடுங்கள்.