Cold Water is Good for Health: கோடைக்காலத்தில் fridge தண்ணீரைக் குடிப்பது நல்லதா? மருத்துவர்களின் ஆலோசனை என்ன!

Cold water is good for health: கோடைக்காலத்தில் fridge தண்ணீரைக் குடிப்பது நல்லதா? மருத்துவர்களின் ஆலோசனை என்ன!

நம்மில் பலர் வெளியே சென்று வந்ததும் உடல்சூட்டினை தடுக்க முதலில் செய்வது ஃப்ரிட்ஜ்யை திறந்து குளிர்ந்த நீரை எடுத்துக்குடிப்பது தான்.

ஆனால், அது சரியா?தவறா? என்று பார்ப்போம் வாருங்கள்.

cold water is good for health

Also Read: How to Reduce Body Odour? கோடை வெயிலின் வியர்வை நாற்றத்தை போக்கும் வெட்டிவேர் குளியல்! உங்களுக்கு தெரியுமா?

cold water is good for health:

இந்த கோடைக்காலத்தில் வெயில் ரொம்பவும் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் வெயிலில் விளையாடும்போது, அவர்களின் உடலில் நீர்ச்சத்துக்குறைபாடு (dehydration) ஏற்படும்.

How to prevent dehydration?

இந்த நீர்ச்சத்துக்குறைபாட்டை ஈடுசெய்ய, நம் உடலுக்குத் தாது உப்புகள் (electrolyte) மட்டுமே தேவை. அவை நாம் குடிக்கும் எந்தக் குளிர்பானத்திலும் இருக்காது.

எனவே வெறும் கலோரிஸ் மட்டுமே இருக்கும் குளிர்பானங்களை குழந்தைகள் குடிக்கக்கூடாது.

ஏனெனில், அவற்றில் செயற்கையான சர்க்கரை, பிரசர்வேட்டிவ்ஸ், நிற மூட்டிகள் மட்டுமே இருக்கின்றன.

கோடைக்காலத்தில் பெரும்பாலானோர், உடலில் ஏற்படும் தாகத்தை குறைக்க ஃப்ரிட்ஜ் (fridge) தண்ணீரைக் குடிப்பார்கள்.

ஐஸ் கியூப், ஐஸ் கிரீம் (ice cubes, ice cream) ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவார்கள். அப்படி உடனே குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடும்போது, நம் உடலில் குளிர்ச்சி ஏற்படாது. மாறாக, உடலில் வெப்பநிலை தான் அதிகம் ஆகும்.

ஐஸ் கியூப்பை நேரடியாக அப்படியே சாப்பிடுவதால், ரத்த சோகை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Also Read: Benefits Of Carrot Juice | Check out this carrot juice for the summer heat.

இத்தகைய குளிர்பானங்களை குடிப்பதை விட்டு விட்டு இளநீர் குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஓரிரு இளநீர் குடிப்பது நல்லது.

ஏசி அறையிலேயே(AC room) இருப்பவர்கள் அதிக இளநீரை குடிக்கலாமா?

ஏசி அறையிலேயே(AC room) இருப்பவர்கள் அதிக இளநீரைக் குடிக்கக்கூடாது. அதற்கு பதிலாக, ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதனுடன் ஒரு கைப்பிடி புதினாவைச் சேர்த்து குடியுங்கள்.

அதுவும், AC யில் இருக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படுவது நமக்குத் தெரியாது. எனவே, ஏ.சி-யில் இருக்கும்போது போதிய அளவு தண்ணீரை தொடர்ந்து குடிப்பது நல்லது.

விளையாடும்போது உடலில் அதிக வெப்பம் மற்றும் வியர்வை உற்பத்தியாகும். அந்த நேரத்தில் உடலின் உள் உறுப்புகள் வெப்பமாக இருக்கும். அப்போது, உடனே தண்ணீர் குடிப்பதால், ரத்த சுழற்சி வேகமாகும் வாய்ப்பு உள்ளது.

தலைச்சுற்றல்,வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். விளையாடும்போது, விளையாடிய பிறகு, சிறிது நேரம் கழித்து ஓய்வு எடுத்த பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும்.

நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கலாமா?

நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது. அவ்வாறு செய்வதால் நம் உடலின் ரத்த ஓட்டம் நேரடியாகக் கால் பகுதியை நோக்கிச் செல்லும்.

இதனால் வயிற்றில் செரிமானச் செயல்பாடுகள் இயல்பாக நடக்காது. எனவே, தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது.

எனவே இந்த கோடைகாலங்களில் நம் உடல் ஆரோக்கியமாகவும், குளிர்தன்மையுடனும் இருக்க இயற்கையாகவே உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதுதான் நல்லது. செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்வது தீங்கானது.

Also Read: Benefits Of Carrot Juice: கோடைவெயிலை விரட்டியடிக்க கேரட் ஜூஸ்யை இந்த மாதிரி குடிச்சி பாருங்க! சோர்வு பறந்து போகும்..!

உடலை காப்போம்!… ஆரோக்கியமாக வாழ்வோம்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *