Cold Water: ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..?
Cold Water: ஜில்லுன்னு ஐஸ் வாட்டர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து பற்றி தெரியுமா..?
கோடைகாலத்தில் ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் அதிகமாகவே இருக்கும்.

Cold Water:
அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
ஐஸ் வாட்டர் சில நேரங்களில், சிலருக்கு எந்த தொந்தரவும் செய்வதில்லை.மிகப் பல நேரங்களில், ஐஸ் வாட்டர் அல்லது மிக குளிர்ந்த உணவு பொருட்கள், உடலுக்கு ஆபத்தையே கொடுக்கும்.
செரிமானம்-தடை :
உடல் வெப்பநிலையை சீராக்க வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஐஸ் தண்ணீர் குடித்து அதன் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும்.
இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும். செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.
தொண்டை வலி:
குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும்.
உடல் பருமன் அதிகரிக்கும் :
உணவு உண்ட பின் குளுர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளுர்ச்சியால் திடமாக மாறிவிடும்.
பின் செரிமாணமின்றி உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.
மாரடைப்பு ஏற்படும் அபாயம் :
ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவெனில் மிகவும் குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவுக் குழாய்க்கு முன்புறமும், பின்புறமும், மிக முக்கியமான நரம்புகள் உள்ளன. அவை தான், இதயத்தின் செயல்பாட்டை தீர்மானிக்கின்றன.
செரிமானத்தை செயல்படுத்தும் நரம்புகளையும், அந்த குளிர்ந்த நீர் துாண்டுவதாலும் மாரடைப்பு வரலாம்.
உடற்பயிற்சி அல்லது கடுமையான வேலைக்குப் பின் குளுர்ச்சியான நீரைப் பருகினால் உடல் சூட்டில் இருக்கும்போது உடனடியாக குளிர்ந்த நீரை உட்செலுத்துவது உடலின் திடீரென மின்சாரம் ( shock) பாய்ந்தது போன்ற உணர்வை உண்டாக்கும்.
ஐஸ் வாட்டர் குடித்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் உங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படும். இதற்குக் காரணம் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப்பற்றாக்குறையை உண்டாக்கும்.
இதற்கு மீண்டும் ஐஸ் வாட்டர் குடிக்காமல் அறையின் வெப்பநிலையில் உள்ள நீரைக் குடியுங்கள்.
குறிப்பாக இருதய நோயாளிகள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
மருத்துவர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? இதை நீங்களே ஆய்வு செய்து கொள்ளலாம்.
நாம் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரமான அல்வாவிலிருந்து சிறு பகுதியை எடுத்துக் குளிர் சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அது கெட்டியாகி இருக்கும்.
அதிலிருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாகக் காணாமல் போய் இருப்பது போல் இருக்கும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே இறுகிய நிலையில் படிந்து வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும். உங்கள் விரலை அதில் வைத்தால் அது உருகிவிடும்.
Also Read: Benefits of coriander water: உடலை இரும்பு போல மாற்றும் மல்லி விதை நீர்..!
சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் குளிர்ந்த தண்ணீர் சென்றால், எண்ணெய்த் துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடும்.
எனவே குளிர்ந்த தண்னீரை உணவினுடன் எடுத்து கொள்வதை தவிர்த்திடுங்கள்.