Tamil Newsஅறிவியல்கண்டுபிடிப்புசெய்திகள்

Sea Anemones: Clownfish உடலின் மீதான வெள்ளைக் கோடுகள் எப்படி உருவாகின்றன..?

Sea Anemones: Clownfish உடலின் மீதான வெள்ளைக் கோடுகள் எப்படி உருவாகின்றன..?

சமீபத்தில், Clownfish-களின் வெள்ளை கோடுகள் எவ்வளவு விரைவாக அவற்றின் உடலில் வளர்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வு ஒன்றை PNAS வெளியிட்டது.

Clownfish and sea anemones-newstamilonline

Clownfish and sea anemones

அதில் Clownfish-களின் வெள்ளை கோடுகள் எவ்வளவு விரைவாக கிடைக்கின்றன என்பது அவை எந்த அனிமோன்களுடன் வாழ்கின்றன என்பதைப் பொறுத்தது என்பது தெரியவந்தது.

அழகான ஆரஞ்சு மீன்கள் லார்வாக்களிலிருந்து பெரிய மீன்களாக முதிர்ச்சியடையும் போது அவற்றின் வெள்ளை கோடுகள் உருவாகின்றன.

இதற்கு உருமாற்றம் என்று பெயர். ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது என்பது முன்னர் தெரியவில்லை.

இப்போது, ​​பாரிஸ் பல்கலைக்கழகத்தின் பவுலின் சாலிஸ்(Pauline Salis) தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, மீன்களில் காணப்படும் சில மரபணுக்கள் மற்றும் தைராய்டு ஹார்மோன்கள் தான் அவற்றின் மீதான கோடுகளை எவ்வளவு விரைவாக வளர்க்கின்றன என்பதைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆனால் Clownfish-கள் சேர்ந்து வாழும் அனிமோன் வகையால் இந்த ஹார்மோன் அளவுகளில் தாக்கம் ஏற்படுகிறது என்றும் கண்டறிந்தனர்.

ஆம்பிபிரியன் பெர்குலா

கடல் அனிமோனைப் பொறுத்து ஏன் கோடுகள் உருவாக்கம் வேகமாக அல்லது மெதுவாக நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் நாங்கள் உண்மையில் ஆர்வமாக இருந்தோம், என்று சாலிஸ் கூறுகிறார்.

பப்புவா நியூ கினியாவின்(Papua New Guinea) கிம்பே விரிகுடாவில் உள்ள ஆம்பிபிரியன் பெர்குலா(Amphiprion percula) என்ற Clownfish மீன் இனத்தை இந்த குழு ஆய்வு செய்தது.

இந்த இனம் இரண்டு வெவ்வேறு வகையான அனிமோன்களில் வாழ்கிறது: magnificent கடல் அனிமோன் (Heteractis magnifica) அல்லது ராட்சத கார்பெட்(giant carpet) அனிமோன் (Stichodactyla gigantea).

ராட்சத கார்பெட் அனிமோனில்(Stichodactyla gigantea) வாழும் இளம் மீன்கள் தங்கள் கோடுகளை வேகமாக வளர்த்ததை அவர்கள் கண்டார்கள்.

மீண்டும் இந்தக்குழு ஆய்வகத்தில் Clownfish இனங்களுக்கு (Amphiprion ocellaris) வெவ்வேறு அளவு தைராய்டு ஹார்மோனுடன் சிகிச்சையளித்தது.

இது தவளைகளிலும் உருமாற்றத்தைத் தூண்டும் என்று அறியப்படுகிறது. அதிக அளவு கொடுக்கப்பட்ட மீன்கள் அவற்றின் கோடுகளை விரைவாக உருவாக்கியது.

கிம்பே விரிகுடாவிலிருந்து வந்த ஏ.பெர்குலா மீனின் ஹார்மோன் அளவை அவர்கள் ஆராய்ந்தனர்.

மேலும் ஆய்வக முடிவுகளுக்கு இசைவானதாக – ராட்சத கார்பெட் அனிமோனில் வாழும் மீன்களில் magnificent கடல் அனிமோனில் வாழும் மீன்களை விட தைராய்டு ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதனால்தான் அவற்றின் கோடுகள் விரைவாக வளர்ந்தன.

வெவ்வேறு ஹார்மோன் அளவுகளுக்கு என்ன காரணம் என்பதை மேலும் விசாரிக்க, இந்தக்குழு Clownfish-களின் மரபணுக்களின் செயல்பாட்டை அளந்தது.

ஜப்பானின் ஒகினாவா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் மூத்த எழுத்தாளர் Vincent Laudet கூறுகையில், இந்த மரபணுக்களில், 36 மரபணுக்கள் மட்டுமே இரண்டு கடல் அனிமோன் இனங்களிலிருந்து Clownfish-களுக்கு இடையில் வேறுபடுகின்றன. இந்த 36 மரபணுக்களில் ஒன்று, duox என அழைக்கப்படுகிறது என்றார்.

தைராய்டு ஹார்மோன் உருவாவதில் duox மரபணு முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் அவர்கள் கூறுகையில், இந்த மரபணு ராட்சத கார்பெட் அனிமோனில் வாழ்ந்த Clownfish மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, ராட்சத கார்பெட் அனிமோன்களில் வாழும் Clownfish டூயாக்ஸின் உயர் செயல்பாட்டை ஊக்குவித்தன, இது அதிக தைராய்டு ஹார்மோனை உருவாக்குகிறது, இதனால் மீன்களில் கோடுகளை வேகமாக வளரச் செய்கிறது.

Also Read: Foods For Healthy: இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்க மீன் சாப்பிடலாமா?

வெள்ளை கோடுகள் உருவாக்கத்தில் உள்ள இந்த மாற்றங்கள் மீதான எங்கள் சந்தேகம் வெறும் பனிப்பாறையின் நுனிஅளவு மட்டுமே. Clownfish இரண்டு வெவ்வேறு கடல் அனிமோன் ஹோஸ்ட்களுடன் மாற்றியமைக்க உதவுவதில் மேலும் பல வேறுபாடுகள் உள்ளன என்று லாடெட் கூறுகிறார்.