Tamil NewsToday Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Summer Clothes: கொளுத்தும் வெயிலை உங்களிடம் நெருங்கவிடாத ஆடைகளா..! அது என்ன சம்மர் ஆடைகள்..!

Summer Clothes: கொளுத்தும் வெயிலை உங்களிடம் நெருங்கவிடாத ஆடைகளா..! அது என்ன சம்மர் ஆடைகள்..!

இந்த கொளுத்தும் வெயிலில் நாம் வெளியே போய் வீட்டிற்கு வருவதற்குள் சோர்ந்து போகிறோம். என்னதான் ஆடை அணிந்திருந்தாலும் சரி! உடல்முழுவதும் வியர்வை பட்டு மிகவும் அருவருப்பினை உணர்கிறோம்.

Clothes Worn in Summer

Also Read: Summer Juice Recipes: வெயில் காலத்தில் உடலுக்கு சக்தியை அள்ளித்தரும் தரும் பல வகை காய்கறி ஜூஸ்கள்..!

What type of clothes should we wear in summer?

அதுவும் இந்தியாவின் வெப்பம் யாராலும் தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.

இந்தியாவில் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும், அதனால் தான் வெயில் காலங்களில் நாம் மென்மையான ஆடைகளை அணிய வேண்டும்.

இந்த வெப்பமான சமயத்தில் நாம் லூசான(loose) ஆடைகளை அணிவது தான் நல்லது.

உடலை ஒட்டிய ஜீன்ஸ் போன்ற இறுக்கமான பேன்ட் வகைகள் இந்த வெயிலுக்கு ஏற்ற ஆடைகள் இல்லை.

இதன் வகையில், நம்மை வெயில் அதிக அளவு தாக்காதவாறு மேலும், கோடைக் காலத்திற்க்கு ஏற்ற ஆடைகள் லேசாகவும், ஃபேஷனாகவும் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்க்கலாம்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை, பருத்தி ஆடைகளே, ஏனென்றால், நாம் அணியும் உடைகள் இதமானதாக இருக்க வேண்டும், அதற்கு சிறந்தது பருத்தி ஆடைகளே.

பருத்திவகை ஆடைகள் தான் நம் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும் தன்மையை கொண்டது.

வெயில் நேரங்களில் நாம் வெளியே செல்லும் போது, லினன் மற்றும் சணல் இழை ஆடைகள் போன்ற ஆடைகளை அணியலாம்.

மேலும், லூசான(loose), வெளிர்நிறம் கொண்ட ஆடைகள் அணியலாம். வெள்ளை நிற ஆடைகள் அணிவது தான் நல்லது.

இதன்வகையில், பலவகையான இந்திய காட்டன் உடைகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் பயன்படுத்தவும், அணியவும் சிறந்த துணி வகையாக காதியே விளங்குகிறது.

மேலும் உடலை ரொம்ப ஒட்டியவாறு உள்ள ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட் போன்றவைகளை அணிவதை தவிர்த்தல் நல்லது.

கோடைகாலத்திற்கு நம் உடலிற்கு ஏற்ற இதமான ஆடை வகைகளை விரிவாக காணலாம் வாருங்கள்:

பொதுவாக கோடைக்காலத்து ஃபேஷன்(fashion) ரொம்ப பளிச்சென வண்ணமயமாக இருக்கும்.

(Hot Band) ஹாட் பேன்ட்:

கோடைக்காலத்தில் அணிய மிகவும் வசதியாக இருப்பது இந்த ஹாட் வகை பேன்ட்கள். இது லேசாகவும், காலை அசைப்பதற்கு வசதியுடனும், எளிமையாகவும் இருக்கும். இது ஆண்களுக்கு ஏற்ற உடையாக இருக்கும்.

பருத்தி சேலைகள்( Cotton sarees):

பெண்களுக்கு கோடைக்காலத்தில் வசதியுடன் இருக்கும் ஆடை சேலையே, இதன் வகையில் பருத்தி சேலையும் வெப்பத்தை தடுக்கும் வகையில் இதமாக இருக்கும்.

நீளமான பாவாடைகள்(Long skirts):

அதிகமான தட்ப வெப்பநிலையில் நீளமான பருத்தி பாவாடைகளே வசதியாக இருக்கும். ஏனெனில் இந்த வகை பாவாடைகள் நம் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாக வைத்திருக்கும்.

Clothes Worn in Summer:

சல்வார்(Salwar Kameez) :

சேலைகளை போல், லூசான சல்வார் கமீஸ் வகை ஆடை கூட இந்த வெயில்காலத்திற்கு ஏற்றது. லக்னோ சிகான் (ஒருவகை ஆடை தரம்) போன்ற வேலைப்பாடுமிக்க காட்டன் சல்வார் கமீஸ் இந்தியாவில் கோடைக்காலத்தில் புகழ் பெற்றதாகும்.

காதி(Khadi):

கையால் முரட்டு பருத்தியை தயார் செய்து, உருவாக்கிய விசேஷ ஆடை வகை தான் காதி. இது அணிவதற்கு வசதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ற பேஷனாகவும் இருக்கும். சேலைகள், குர்தா, பாவாடை மற்றும் டாப்ஸ் வடிவத்தில் இந்த காதியை அணியலாம்.

ஹாரெம்(Harem) பேன்ட்:

ஹாரெம் பேன்ட் மற்றும் வேஷ்டிகளும் தற்போது புழக்கத்தில் உள்ள ஆடைகளாகும். இந்த வகை ஆடைகள் லூசாக இருப்பதால், வெப்பமான நேரத்தில் நம் உடலுக்கு ஏற்ற வசதியுடன் இருக்கும்.

பருத்தி வகை ஹாரெம் பேன்ட்களை அணியுங்கள். ஆனால் சிந்தடிக்(Synthetic) வகை ஆடைகள் கசகசவென இருக்கும்.

மேலும், வெயிலினை கவரும் கருப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்ப்பது நல்லது.

Also Read: Best Juice In Summer: சம்மர் வந்துவிட்டதா! சுட்டெரிக்கும் வெயிலை விரட்டியடிக்கும் எளியவகை ஜூஸ்கள்..!

ஏனெனில் அந்த வகை ஆடைகளுக்கு வெப்பத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக இருக்கும். எனவே, அவைகளை தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உள்ள உடைகள் அணியுங்கள், கோடை வெயிலிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.